கான்ஜுரிங் கண்ணப்பன் திரைவிமர்சனம் : கான்ஜுரிங் கண்ணப்பன் பயமுறுத்தலுடன் நகைச்சுவை கலந்து தேர்ந்த நடிகர்களுடன், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்போடு மகிழ்விக்கிறது | ரேட்டிங்: 3.5/5
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ள கான்ஜுரிங் கண்ணப்பன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் செல்வின் ராஜ் சேவியர்.
இதில் கண்ணப்பன் – சதீஷ், டார்க் டேவ்ஸ் – ரெஜினா கசாண்ட்ரா, லக்ஷ்மி – சரண்யா பொன்வண்ணன், அஞ்சா நெஞ்சன் – விடிவி கணேஷ், டெவில் ஆர்ம்ஸ்ட்ராங் – ஆனந்தராஜ், டாக்டர் ஜானி – ரெடின் கிங்ஸ்லி, சோடா சேகர் – நமோ நாராயணா, கடப்பாரை – ஆதித்ய கதிர், மாக்டலீன் – எல்லி அவ்ராம், வில்லியம் – ஜேசன் ஷா, ராபர்ட் – பெனடிக்ட் காரெட் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவாளர்: எஸ். யுவா, இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா, கலை இயக்குனர்: மோகனா மகேந்திரன், எடிட்டிங் : பிரதீப் இ. ராகவ், ஸ்டண்ட் மாஸ்டர்: மிராக்கிள் மைக்கேல், சிறப்பு ஒப்பனை கலைஞர்: பட்டணம் ரஷீத், ஒப்பனை கலைஞர்: குப்புசாமி, ஆடை வடிவமைப்பாளர்: மீனாட்சி என், காஸ்டியூமர் : வி பிரசாத், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஐஸ்வர்யா கல்பாத்தி ,நிர்வாகத் தயாரிப்பாளர்: எஸ்.எம்.வெங்கட் மாணிக்கம், மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
கண்ணப்பன் என்கிற கேபி (சதீஷ்), ஒரு கேம் டிசைனர், வேலைக்காக பல இடங்களில் அலைந்து கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்தில் ஓய்வுபெற்ற தந்தை அஞ்சா நெஞ்சன் (வி.டி.வி. கணேஷ்), தாய் லட்சுமி (சரண்யா பொன்வண்ணன்) அனைத்தையும் வீடியோ போடும் யூடியூபர் மற்றும் எதற்கும் உதவாத மாமா சேகர் (நமோ நாராயணன்) ஆகியோர் அடங்குவர். ஒரு நாள் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட, தன் வீட்டில் இருக்கும் யாரும் உபயோகிக்காத கிணற்றில் தண்ணீர் எடுக்க முற்படும் போது ஒரு ட்ரீம் கேட்சர் என்ற இறகுகள் கட்டப்பட்டு மந்திரிக்கப்பட்ட ஒரு பொம்மையுடன் கூடிய ஒரு கலைப்பொருளை எடுக்கிறார். அவர் அந்த மர்மமான பொருளில் இருக்கும் ஒரு இறகை பறிக்க அன்றிலிருந்து இரவில் தூங்கும் போது , இந்த சாதனம் கனவு உலகத்தில் அவரை 1930 இல் இரண்டு பிரிட்டிஷ் பேய்களால் வேட்டையாடப்பட்ட ஒரு அரண்மனை மாளிகைக்கு கொண்டு செல்கிறது. அங்கே ஆண், பெண் என்ற இரண்டு பேய்களால் பயமுறுத்தப்படுகிறார். நிஜ உலகில் கேபி விழித்தெழும்போது தான் தப்பிக்கிறார்.இதனால் கலக்கமடையும் கேபி எக்சார்சிஸ்ட் ஏழுமலை ( நாசர்), மனநல மருத்தவர் டாக்டர் ஜானி ( ரெடின் கிங்ஸ்லி) ஆகிய இருவரின் ஆலோசனையை பெற்றாலும் இந்த சிக்கல்களிலிருந்து தப்பிக்க முடியாமல் திண்டாடுகிறார். இது மட்டுமில்லாமல் பத்து லட்சம் கடன் பணத்தை கேட்டு இம்சிக்கும் டெவில் ஆர்ம்ஸ்ட்ராங்கிடம் (ஆனந்தராஜ்) மாட்டிக் கொண்டு முழிக்கிறார். இதனால் டாக்டர் ஜானி, டெவில் ஆர்ம்ஸ்ட்ராங் ஆகிய இருவரையும் இறகை பறிக்க செய்து கனவு உலகில் பேய்களிடம் மாட்டி விடுகிறார். தற்செயலாக நிஜ உலகில் இருக்கும் கேபியின் குடும்ப உறுப்பினர்களும் இறகை பறிக்க அவர்களும் கனவுலகில் பேய் பங்களாவில் வந்து மாட்டிக் கொள்கின்றனர். கனவுலகில் இறந்தால் நிஜத்தில் இறந்து விடுவார்கள் என்ற சூழ்நிலை ஏற்படுகிறது, இறுதியில் எக்சார்சிஸ்ட் ஏழுமலை மற்றும் டார்க் டேவ்ஸ் (ரெஜினா கசாண்ட்ரா) உதவியுடன் கேபி தன் குடும்பத்தையும் மற்றவர்களையும் எப்படி மீட்டு நிஜ உலகத்திற்கு அழைத்து வருகிறார் என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
கண்ணப்பன் என்கிற கேபியாக நல்ல நகைச்சுவை நடிகரான சதீஷ், தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ஒவ்வொரு காட்சியிலும் மெனக்கெடலுடன் எடுத்துச் செல்லும் விதம் பிரமிக்க வைக்கிறது. கதாபாத்திரத்தின் உணர்வுகளை பயம், காமெடி கலந்து பொறுப்புடன் சதீஷ் அவற்றை திறம்பட சித்தரித்துள்ளார்.
ரெஜினா கசாண்ட்ரா நீண்ட நாட்களுக்குப் பிறகு பேய்களை விரட்டும் மந்திரம் தெரிந்த டார்க் டேவ்ஸ் என்ற கதாபத்திரத்தில் அதற்கேற்ற வித்தியாசமான டாட்டூ அலங்கார கெட்டப்புடன் கொஞ்ச நேரம் பங்களிப்பை கொடுத்தாலும் மிரட்டலுடன் தைரியம் மிகுந்த பெண்ணாக அதிர வைத்துள்ளார்.
வி.டி.வி கணேஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் ஆனந்த்ராஜ், சந்திரசேகர் கோனேரு, நமோ நாராயணன் மற்றும் சர்வதேச நடிகர்கள் எல்லி அவ்ராம், ஜேசன் ஷா மற்றும் பெனடிக்ட் காரெட் உட்பட மற்ற நடிகர்கள் அனைவரும் அவர்களிடமிருந்து எதிர்பார்த்ததை பயமுறுத்தும் சுவாரஸ்யத்துடன் நகைச்சுவையோடு வழங்கியுள்ளனர்.
யுவாவின் காட்சிகள் கனவு மற்றும் நிஜ உலகை கண் முன்னே நிறுத்துவதோடு ஃபிளாஷ்பேக் காட்சிகளின் விவரிப்பையும் தெளிவாக காட்சிப்படுத்தி, இரண்டையும் இணைத்து மிரட்டியுள்ளார்.
மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மற்றும் பின்னணி இசை கன்ஜுரிங் கண்ணப்பனின் ஈர்ப்புக்கு வலு சேர்த்து மிகவும் ரசிக்க வைக்கிறது.
படத்தின் காட்சிகளை குழப்பம் இல்லாமல் தெளிவாக கதை புரியும்படி சிறப்பாகக் எடிட் செய்துள்ளார் இருந்தாலும் இரண்டாம் பாதியில் சில காட்சிகளை கத்திரி போட்டிருக்கலாம் படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ்.
சிறப்பு ஒப்பனை கலைஞர் பட்டணம் ரஷீத், ஒப்பனை கலைஞர் குப்புசாமி, ஆடை வடிவமைப்பாளர் மீனாட்சி, காஸ்டியூமர் வி.பிரசாத் ஆகியோரின் பங்களிப்பு கன்ஜுரிங் கண்ணப்பன் படத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக நன்றாக இருக்கிறது.
ஒவ்வொரு திகில் படத்திலும், கதாபாத்திரங்கள் நிஜ உலகில் ஒரு இடத்தில் சிக்கிக் கொள்ளும், ஆனால் இங்கே, அவர்கள் ஒரு கனவு உலகில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் எழுந்திருக்கும் வரை, அவர்கள் இடத்தில் பேய்களை சமாளிக்க வேண்டும். அந்த உலகில் அவர்களுக்கு என்ன விதி நேர்கிறதோ, அது நிஜ உலகிலும் பிரதிபலிக்கும் இக்கதைக்களத்தை 1930 அரண்மனை பேய் பங்களா, பரிட்டிஷ் காலத்து முக்கோண காதல் கதை, தீர்த்துக்கட்டும் சதி, சூன்யம் செய்த ட்ரிம் கேட்சர், அதிலிருந்து தப்பிக்க மங்கி பா கையுறை அதற்கான கடவுச்சொல், பயமுறுத்தும் பேய்கள், பேய்குள்ளே சண்டைகள், கனவில் அடிபட்டால், நிஜத்திலும் அடிபட்ட காயம் இருப்பது, இடையே ஆனந்த ராஜ், விடிவி கணேஷ், கிங்ஸிலியின் காமெடி, தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் என்று கற்பனை கலந்த திகில் அனுபவத்தை நகைச்சுவை கலந்து இப்படத்தை வெற்றிப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர்.
மொத்தத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ள கான்ஜுரிங் கண்ணப்பன் பயமுறுத்தலுடன் நகைச்சுவை கலந்து தேர்ந்த நடிகர்களுடன், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்போடு மகிழ்விக்கிறது.