காந்தாரா திரை விமர்சனம் : திரைப்பட ஆர்வலர்களுக்கு இது ஒரு புதுவித ஆக்ரோஷம் நிறைந்த முழுமையான தெய்வ அனுபவம் தரும்! | ரேட்டிங்: 4/5
ரிஷப் ஷெட்டி – காடுபெட்டு சிவா
சப்தமி கவுடா – லீலா
கிஷோர் – முரளிதர்
அச்சுயுத் குமார் – தேவேந்திர சுட்டூரு
ப்ரமோத் ஷெட்டி – சுதாகரா
ஷனில் குரு – புல்லா
பிரகாஷ் துமிநாட் – ராம்பா.
தொழில் நுட்பகலைஞர்கள்:
எழுத்து மற்றும் இயக்கம் – ரிஷப்ஷெட்டி
இசை – பி.அஜனீஷ் லோக்நாத்
ஒளிப்பதிவு – அரவிந்த் எஸ் காஷ்யப்
படத்தொகுப்பு – கே.எம் பிரகாஷ் | பிரதீக் ஷெட்டி
நிர்வாக தயாரிப்பு – கார்த்திக்
தயாரிப்பாளர் – விஜய் கிரகந்தூர்
நிறுவனம் – ஹோம்பாலே பிலிம்ஸ்
வெளியீடு – எஸ் ஆர் பிரபு – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.
மக்கள் தொடர்பு – யுவராஜ்
1847ஆம் ஆண்டு கர்நாடகாவின் குந்தாப்பூர் கிராமத்தில் நடக்கும் கதைக்களமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் பகுதியின் அரசன் அமைதி இல்லாத வாழ்க்கையோடு மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறார், மேலும் அவர் ஒரு காட்டின் அருகே ஒரு தெய்வத்தைக் காணும்போது, இறுதியாக அமைதியை அடைகிறார். அங்குள்ள கிராம மக்களுடன் ஒப்பந்தம் செய்து, வன நிலங்களை தெய்வத்திற்காக மாற்றிக் கொள்கிறார். கதை 1970களில் நுழைகிறது. ராஜாவின் வாரிசுகள் நிலங்களைத் திரும்பக் கோரும்போது சிக்கல் தொடங்குகிறது. ஒரு நாள் அரசனின் வாரிசு அங்கு நடக்கும் பாரம்பரிய கோலத்தில் கடவுள் வேடமிட்டவரை அவமதிக்கிறார். வன நிலம் ஒரு காலத்தில் தனது முன்னோர்களுக்குச் சொந்தமானது என அவர் கூறுகிறார். அவர் உண்மையில் கடவுள் என்றால் காட்டு என்று கேலி செய்கிறார். பிறகு கடவுள் என்று அழைக்கப்பட்டவர் காட்டுக்குள் சென்று மறைந்து விடுகிறார். இதற்குச் சில நாட்களுக்குப் பிறகு, அரசனின் வாரிசு நீதிமன்றப் படிகளில் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடக்கிறார். பின்னர் கதை 90களில் நுழைகிறது. அரசரின் பரம்பரையைச் சேர்ந்த கிராமத்தின் நில உரிமையாளர் (அச்யுத் குமார்) காட்டில் உள்ள மக்களுடன் நல்லுறவைப் பேணி வருகிறார். அவர் அந்த ஊர் பெரியவர். அதே கிராமத்தை சேர்ந்த சிவன் (ரிஷப் ஷெட்டி) ஒரு குறும்புக்காரன் மற்றும் ஆக்ரோஷ குணம் கொண்டவன். வேட்டையாடச் சென்று தனது நண்பர்களுடன் குடிபோதையில் சுற்றினாலும் அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்க்கிறார். இந்நிலையில் ஒரு நேர்மையான வன அதிகாரி முரளிதர் (கிஷோர்) அந்த நிலத்தில் மரம் வெட்டுதல் மற்றும் வேட்டையாடுவதைத் தடுக்க முயற்சிக்கிறார். வனப்பகுதியை ஒட்டிய கிராமம் என்பதால், அங்குள்ள மக்கள் அனைவரும் காட்டில் காணப்படும் விலங்குகளை வேட்டையாடவும், காய்கறிகள் மற்றும் பழங்களுக்காகவும் காட்டிற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது அவர்களின் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிறது. இந்தப் பின்னணியில், புதிதாக வந்திருக்கும் வன அதிகாரி முரளிதர் (கிஷோர்) , இனி யாரும் வனப்பகுதிக்குள் வரக்கூடாது என்றும், காட்டை சேதப்படுத்தியது கண்டறியப்பட்டால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சிவனை எச்சரிக்கிறார். இந்த வரிசையில், சிவனுக்கும் வன அதிகாரி முரளிதருக்கும் இடையே சண்டை தொடங்குகிறது. இப்படி இருக்க, விஷ்ணுவின் வராஹ அவதாரம் சிவனின் கனவில் அவ்வப்போது வந்து தொந்தரவு செய்கிறது. ஒரு நாள் வன நிலங்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறி, வன நிலங்களை எல்லை நிர்ணயம் செய்து காலி செய்யும் முயற்சியில் வன வரம்பு அலுவலர் கிஷோர் குமார் ஈடுபடுகிறார். விஷயங்களை சிக்கலாக்கும் வகையில், கிராம மக்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. சிவன் அவர்களை எதிர்க்கிறார். இந்த பின்னணியில் சிவன் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதே சமயம் கோலத் திருவிழாவில் கடவுள் வேடம் அணிந்த சிவனின் தம்பி குருவா ஒரு நாள் கொல்லப்படுகிறார். இது கிராமத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்குகிறது. சிவனின் தம்பி குருவை கொன்றது யார்? விஷ்ணுவின் வராஹ அவதாரம் ஏன் அடிக்கடி சிவனை தொந்தரவு செய்கிறது? வன அதிகாரியின் பிடியில் இருந்து தன்னை எப்படிக் காப்பாற்றிக் கொண்டார் என்பதுதான் காந்தாராவின் மீதிக்கதை.





ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ். காஷ்யப்பின் அற்புதமான பிரேம்கள், கிராமம் மற்றும் பழங்குடியினரின் சூழலையும் காடுகளின் காட்சிகளையும் இயல்பாகவும், யதார்த்தமாகவும், ஈர்க்கக்கூடியதாகவும் காட்டியது ஃப்ரேமிங்கும் ஒளியமைப்பும் பீரியட் படத்திற்கு மதிப்பு சேர்க்கிறது.