காட்டேரி விமர்சனம் : காட்டேரி கொஞ்சம் பயமுறுத்துகிறது | ரேட்டிங்: 2/5
‘ஸ்டூடியோ கிரீன்’ சார்பில் ஞானவேல் ராஜா, அபி மற்றும் அபி பிக்சர்ஸ் சார்பில் அபினாஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் காட்டேரி திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் டிகே.
இதில் வைபவ், ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, கருணாகரன், ரவி மரியா, குட்டி கோபி, ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை: எஸ்.என்.பிரசாத், ஒளிப்பதிவு: விக்னேஷ் வாசு,எடிட்டங் – பிரவீன் கே.எல், கலை-செந்தில் ராகவன், சண்டை- டான் அசோக், மக்கள் தொடர்பு: யுவராஜ்
நைனா என்ற டானிடம் நாயகன் வைபவ்வின் நண்பன் ஒருவன், இவர்களை சிக்க வைத்துவிட்டு, தான் மட்டும் தங்கப் புதையலைத் தேடி கிராமத்திற்கு செல்கிறான். வைபவ், அவரது மனைவி சோனம் பஜ்வா, கருணாகரன், ரவி மரியா, ஆத்மிகா ஆகியோர் சிக்க வைத்த நண்பனையும், தங்கப் புதையலையும் தேடி கண்டுபிடிப்பதற்காக செல்கிறார்கள். வழியில், காட்டுக்குள் கிராமத்தைச் சென்றடைந்து அங்குள்ள ஒரு வீட்டில் தங்கள் நண்பனின் புகைப்படத்தைக் காட்டி விசாரிக்கிறார்கள். பின்பு தான் அவர்கள் எல்லாம் இறந்து பேய்களாக உலவிக்கொண்டிருப்பவர்கள் என்பதை கண்டறிந்து அதிர்ச்சியாகிறார்கள். இதனால் அந்த கிராமத்தை விட்டு செல்ல நினைக்கும் வைபவ் மற்றும் நண்பர்களால் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். எந்த வழியாக சென்றாலும் மீண்டும் அந்த கிராமத்திற்கே திரும்பி வருவதும் மாற்று வழியில்லாமல் மாட்டிக் கொண்டதை அறிந்து பீதியாகிறார்கள். இதுமட்டுமில்லாமல் வரலட்சுமி (மாதம்மா) பேயிடம் மாட்டிக் கொண்டு தப்பிக்க முடியாமல் தவிக்கிறார்கள். இறுதியில் நண்பனையும், புதையலையும் கண்டுபிடித்தார்களா? வைபவ் மற்றும் நண்பர்கள் அந்த கிராமத்திலிருந்து தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.
வைபவ் திகில் காட்சிகளுக்கு வலு சேர்த்து நடித்துள்ளார்.
மாத்தம்மா பேயாக வரும் வரலட்சுமி காட்சிகள் வித்தியாசமாகவும், சுவராஸ்யமாகவும் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
ஆத்மிகா , சோனம் பாஜ்வா அழகு பதுமைகளாக வந்து போகிறார்கள். ஜான் விஜய், லொல்லு சபா மனோகர், பொன்னம்பலம், கருணாகரன் ரவி மரியா, குட்டி கோபியின் நகைச்சுவைகள் சிரிப்பை வரவழைக்க முயற்சித்திருக்கிறார்கள்.
இசை: எஸ்.என்.பிரசாத், ஒளிப்பதிவு: விக்னேஷ் வாசு ஆகியோர் பயமுறுத்தும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.
பிரவீன் கே.எல் எடிட்டிங் இன்னும் ஷார்பாக கொடுத்திருக்கலாம்.
நான்கு வருடங்கள் தாமதமாக வந்திருக்கும் படம் என்பதால் பயமுறுத்தும் கான்செப்ட் காலவாதியாகி விட்ட நிலையில் இந்த கதை கொஞ்சம் துளியாவது வித்தியாசமாக இருக்கும்படியாக கொடுத்திருக்கலாம். ஒரே ஆறுதல் அட்சய பாத்திர கிணறு காட்சிகள் தான், என்ன கொடுக்கிறமோ அதற்கேற்ற தங்கத்தை பண்டம் மாற்றம் காட்டேரியின் பயமுறுத்தல் அம்புலிமாமா கதை போல் கொடுத்திருக்கிறார். அடல்ட் காமெடியுடன் கதைக்களம் இருக்க இயக்குனர் டிகே இன்னும் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் பேசப்பட்டிருக்கும்.
‘ஸ்டூடியோ கிரீன்’ சார்பில் ஞானவேல் ராஜா, அபி மற்றும் அபி பிக்சர்ஸ் சார்பில் அபினாஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் காட்டேரி கொஞ்சம் பயமுறுத்துகிறது.