கலகத்தலைவன் விமர்சனம்: கலகத்தலைவன் கார்ப்பரேட் கம்பெனிகளை கதிகலங்கடித்து சிந்திக்க தூண்டும் த்ரில்லிங் அனுபவத்துடன் திருப்பங்கள் தந்து வெற்றி காணும் படைத்தலைவன் | ரேட்டிங்: 3.5/5

0
250

கலகத்தலைவன் விமர்சனம்: கலகத்தலைவன் கார்ப்பரேட் கம்பெனிகளை கதிகலங்கடித்து சிந்திக்க தூண்டும் த்ரில்லிங் அனுபவத்துடன் திருப்பங்கள் தந்து வெற்றி காணும் படைத்தலைவன் | ரேட்டிங்: 3.5/5

ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத்தலைவன் படம் வெளியாகியுள்ளது.
இதில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், கலையரசன், ஆரவ், அங்கனாராய், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், அனுபமாகுமார், ஜீவா ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இணை தயாரிப்பு: எம்.செண்பக மூர்த்தி, ஆர்.அர்ஜூன் துரை, இசை:-ஸ்ரீகாந்த் தேவா, அரோல் கரோலி, ஒளிப்பதிவு: கே. தில்ராஜ், பி.ஆர்.ஒ: ஏய்ம் சதீஷ்.

ஃபாரிதாபத்தில் புகழ்பெற்ற வஜ்ரா நிறுவனம் புதுரக கனரக வாகனத்தை அறிமுகப்படுத்துகிறது. அதில் மாசு கட்டுப்பாடு அதிக அளவில் இருக்க, அதை மறைத்து அறிமுகப்படுத்தியதன் மூலம் பங்குகள் மதிப்பு ஏறுமுகமாக இருக்கிறது. திடீரென்று மாசு கட்டுப்பாட்டின் ரகசியம் வெளியே கசிந்து பங்குகள் சரிந்து நஷ்டத்தை சந்திக்கிறது. இதனை கசிய விட்ட தன் நிறுவனத்தின் ஊழியர் யார் என்பதை கண்டுபிடிக்க அண்டர்கிரவுண்டில் உளவு வேலை செய்யும் ஆரவ்வை நியமிக்கிறது. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே நிறுவனத்திற்கு எதிராக சதி செய்யும் நபரை ஆரவ் கண்காணித்து நெருங்கினாரா? இறுதியில் அந்த நபரை கண்டுபிடித்தாரா?  அவரை அழித்தாரா? என்பதே படத்தின் விறுவிறு க்ளைமேக்ஸ்.

அமைதி, தீர்க்கமான பார்வை, உளவு பார்க்கும் தொழலாளியாக தன் நிலையை நியாயப்படுத்தும் அழுத்தமான திரு கதாபாத்திரத்தில் மனக்குமறல்கள், காதல், பிரிவு, நட்பு, கோபம், இயலாமை ஆகியவற்றை திறம்பட கொடுத்து உதயநிதி ஸ்டாலின் முத்திரை பதித்து நடிப்பில் அசத்தியுள்ளார்.

ஸ்டைலிஷ் வில்லன் ஆரவ் ஒவ்வொரு நொடியையும் தாமதிக்காமல் எடுக்கும் முடிவு, சாமர்த்தியம், சாதுர்யமாக கணித்து தேடும் நபரை நெருங்குவது என்று உறுதியான, ஆக்ரோஷமான கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு உளவு வேலை பார்க்கும் அதிரடி ஆக்ஷனிலும், உண்மையை கொண்டு வர எடுக்கும் முயற்சிகளும் அதிர்ச்சி கொடுத்து அதிர்வை ஏற்படுத்தி மனதில் அழுத்தமாக பதிந்த விடுவதில் வெற்றி பெறுகிறார்.
டாக்டர் காதலியாக நிதி அகர்வால், நண்பராக கலையரசன்,  அங்கனாராய், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், அனுபமாகுமார், ஜீவா ரவி ஆகியோர் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.

தில் ராஜ் ஒளிப்பதிவும் பெயருக்கேற்றவாறு தில்லாக, போல்டாக காட்சிகளை கொடுத்து திருச்சி ரயில்வே ஸ்டேஷன் காட்சிகளும், க்ளைமாக்ஸ_ம் ஒருவித பிரமிப்பை ஏற்படுத்தி வெற்றி வாகை சூட வழி செய்திருக்கிறார். வெல்டன்.
ஸ்ரீPகாந்த் படத்தொகுப்பும் கதைக்கு இன்னும் மெறுகூட்டுகிறது. பின்னணி இசையில் ஸ்ரீPகாந்த் தேவா மிரட்டலை கூட்ட, பாடல்களுக்கு இசையமைத்திருக்கும் ஆரோல் கரோலி கை தட்டல் வாங்கி செல்கிறார்.

கார்ப்பரேட் கம்பெனிகள் அரசு நிறுவனங்களை வாங்குவதால் அடிமட்டத்தில் இருக்கும் எளிய மக்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைப் பற்றி கவலைப்படாமல் கோடிகளில் புரளும் கார்ப்பரேட் கம்பெனிகள் அத்தகைய வலியை உணர செய்ய அவர்களின் ரகசியங்களை போட்டி கம்பெனிகளுக்கு விற்று சவுக்கடி கொடுக்கும் வேலையை செய்யும் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வரும் இளைஞர்களை பற்றிய படத்தை பலவித திருப்பங்களுடன் அதிரடி ஆக்ஷன் கலந்து, இறுதிக்காட்சியில் கொஞ்சம் அறிவியல் ரசாயனத்தையும் கலந்து தோய்வில்லாமல் கொடுத்து அசத்தி படத்திற்கு நல்ல திருப்புமுனை திரைக்கதையுடன் இயக்கியுள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி. பெண்களிடத்தில் நடத்திடும் வன்முறை காட்சிகளை பலவற்றை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இயக்குனர் மகிழ் திருமேனி தனது திரைக்கதைக்கு ஏற்ற நடிகரை தேர்வு செய்யும் விதமும் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிறப்பாகவும், புத்திசாலித்தனத்துடன் தனித்துவமான பாணியில் வடிவமைக்கப்பட்ட ஆக்ஷன் த்ரில்லரை திருப்புமுறையுடன் திரைக்கதையமைத்து தடம் பதித்திருக்கிறார்.

மொத்தத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கலகத்தலைவன் கார்ப்பரேட் கம்பெனிகளை கதிகலங்கடித்து சிந்திக்க தூண்டும் த்ரில்லிங் அனுபவத்துடன் திருப்பங்கள் தந்து வெற்றி காணும் படைத்தலைவன்.