கபடி ப்ரோ திரைப்பட விமர்சனம் : ‘கபடி ப்ரோ’, ‘வெண்ணிலா கபடி குழு’ வரிசையில் மற்றும் ஒரு ஜாலியான படம் | ரேட்டிங்: 3/5

0
319

கபடி ப்ரோ திரைப்பட விமர்சனம் : ‘கபடி ப்ரோ’, ‘வெண்ணிலா கபடி குழு’ வரிசையில் மற்றும் ஒரு ஜாலியான படம் | ரேட்டிங்: 3/5

சதீஷ் ஜெய ராமன் இயக்கத்தில் அஞ்சனா சினிமாஸ் சார்பில் உஷா சதீஷ் தயாரிக்கும் படம்  கபடி ப்ரோ. சுஜன், பிரியா லால், சிங்கம் புலி, சஞ்சய் வெள்ளங்கி, மதுசூதனராவ், ஹானா, மனோபாலா, சண்முகசுந்தரம், மீரா கிருஷ்ணன், அஞ்சலி உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜே.டேனியல் இசை அமைத்துள்ளார், கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். மக்கள் தொடர்பு சிவா.தென்காசி பகுதியில் சின்ன சின்ன தில்லுமுல்லுகளை செய்து வாழ்க்கையை ஒட்டி வரும் கபடி வீரர் வீரபாகு. அவரது நண்பர்கள் அர்ஜெண்ட் முத்து (சிங்கம் புலி), சக்தி (சஞ்சய் வெள்ளங்கி) இருவருடன் சேர்ந்து ஊர் சுற்றி சின்ன சின்ன தில்லு முல்லு களையும்  ஜாலியாக செய்து வரும் வீரபாகு பாயும் புலி என்ற பெயரில் கபடி அணி நடத்துகிறான். இந்த நிலையில் கபடி வீரன் வீரபாகுவுக்கு  இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து (மதுசூதன ராவ்)  மகள் அபிராமி (பிரியா லால்) மீது  காதல் வயப்படுகிறான். தாய்மாமன் மகளை வீரபாகு திருமணம் செய்வான் என்று வீரபாகு குடும்பத்தினர் எதிர்பார்த்து இருந்த நிலையில் வீரபாகு நண்பன் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து காதலி அபிராமியை மணம் முடிக்க முயற்சிக்கிறான். வீரபாகுவின் தில்லு முல்லுகள் காதலியின் தந்தை இன்ஸ்பெக்டர் இசக்கி பாண்டியனுக்கும், அவனது காதலி அபிராமிக்கும் தெரியவருகிறது. அபிராமியும் அவனை உதறி தள்ளுகிறாள். கோபத்தில் இருக்கும் இசக்கிபாண்டியன் வீரபாகுவை ஊரில் நடக்கும் கபடி போட்டியில் பழிவாங்க நினைக்கிறான். வீரபாகு இந்த போட்டியில் நேர்மையாக விளையாடி வெற்றி பெற முடிவு செய்கிறான். பின்பு நடந்தது என்ன..? இசக்கிபாண்டியன் வீரபாகுவை பழி வாங்கினாரா? கபடி போட்டியில் வீரபாகு நேர்மையாக விளையாடி ஜெயித்தாரா? காதலி அபிராமியை கரம் பிடித்தாரா? போன்ற கேள்விகளுக்கு மீதி கதை பதில் சொல்லும்.

வீரபாகு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இளம் நடிகர் சுஜன், புதுமுகம் போல் தெரியாமல் சிறப்பான நடிப்பை தந்து, ஒரு சிறந்த கபடி வீரராகவும் முத்திரை பதித்துள்ளார்.

நண்பர்களாக சிங்கம் புலி காமெடியில் கலக்கி இருக்கிறார், மற்றும் ஒரு கதாநாயகனாக சக்தி கதாபாத்திரத்தில் சஞ்சய் வெள்ளங்கி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக நடித்துள்ளார்.

கிராமத்து பெண்களாக பிரியா லால் மற்றும் ரஜினி இருவரும் முத்திரை பதித்துள்ளார்கள். கல்யாண புரோக்கராக கலகலப்பூட்டும் மறைந்த மனோபாலா, அவர் இன்று நம்மிடம் இல்லாததை நினைவு கூறுகிறார். இன்ஸ்பெக்டர் இசக்கி பாண்டியன் பாத்திரத்தில் வரும் மதுசூதன ராவ் திரைக்கதையில் முக்கிய அங்கம் வகித்து சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். மற்றும் ஹானா, சண்முகசுந்தரம், மீரா கிருஷ்ணன், அஞ்சலி உட்பட அனைத்து நடிகர்களின் தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இசையமைப்பாளர் ஏ.ஜே.டேனியல் இசையில் பாடலாசிரியர்கள் தாமரை, ஞானகரவேல் ஆகியோரின் பாடல் வரிகள் கேட்கும் ரகமாக இருக்கிறது.  கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது.
வழக்கமான காதல் கதை. அதில் இளைஞர்களை கவர காதல், ஆக்ஷன், நகைச்சுவை காட்சிகள் வைத்து ரசிக்கும்படியாக இயக்கி உள்ளார் இயக்குனர் சதீஷ் ஜெயராமன்.
மொத்தத்தில் அஞ்சனா சினிமாஸ் சார்பில் உஷா சதீஷ் தயாரிக்கும் ‘கபடி ப்ரோ’, ‘வெண்ணிலா கபடி குழு’ வரிசையில் மற்றும் ஒரு ஜாலியான படம்.