கதிர் விமர்சனம்: வாழ்க்கையை செதுக்கிய காண கிடைக்காத நட்பை பாராட்டலாம், அனைவரும் பார்த்து ரசிக்கலாம் | RATING – 2.5 STAR

0
165

கதிர் விமர்சனம்: வாழ்க்கையை செதுக்கிய காண கிடைக்காத நட்பை பாராட்டலாம், அனைவரும் பார்த்து ரசிக்கலாம் | RATING – 2.5 STAR

துவாரகா ஸ்டுடியோஸ் சார்பில் தினேஷ் பழனிவேல் தயாரித்து கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் கதிர்.
இதில் வெங்கடேஷ்,சந்தோஷ் பிரதாப்,ரஜினி சாண்டி,பாவ்யா ட்ரிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை – பிரஷாந்த் பிள்ளை,ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன், படத்தொகுப்பு – தீபக் த்வாரகநாத், பாடல்கள் – கார்த்திக் நேத்தா, உமா தேவி, சண்டை பயிற்சி – ஸ்டன்னர் சாம்,சவுண்ட் டிசைன் – மிக்ஸிங் – ஸின்க் சினிமா, மக்கள் தொடர்பு – ஏய்ம் சதிஷ்.

வெங்கடேஷ் கோயமுத்தூரில் இன்ஜினியரிங் படிக்கும் போது பாவ்யா ட்ரிகாவை காதலிக்கிறார். இந்தக் காதல் கல்லூரி இறுதியாண்டில் எதிர்பாராதவிதமாக முறிந்து விடுகிறது. அதன் பின் தந்தையின் நச்சரிப்பை தாங்க முடியாமல் சென்னைக்கு வேலை தேடி நண்பனின் வீட்டில் தங்குகிறார். அங்கே அந்த வீட்டின் உரிமையாளர் ரஜினி சாண்டியை சந்திக்க நேரிட முதலில் மோதல் ஏற்பட்டாலும் பின்னர் ரஜினி சாண்டியிடம் நட்பாக பழகுகிறார். பல இடங்களில் வேலை தேடியும் ஆங்கில புலமை இல்லாததால் நிராகரிக்கப்படுகிறார். அதன் பின் ரஜினி சாண்டி ஆங்கிலம் கற்று கொடுத்து வேலை கிடைக்க அந்த இடத்தி;ல் தன் முன்னாள் காதலியை பார்த்து வேலையை விட்டுவிட்டு வந்து விடுகிறார். அதன் பின் தன் சொந்த ஊருக்கு பாட்டி ரஜினி சாண்டியுடன் திரும்பச் செல்கிறார். அங்கே எதிர்பாராதவிதமாக நண்பன் கடன் தொல்லையால் இறக்க மனமுடையும் வெங்கடேஷிற்கு ஆறுதல் வார்த்தை கூறி ரஜினி சாண்டி அறிவுரை கூறுகிறார். தன் வாழ்க்கையில் நடந்த சோகத்தையும் பகிர்ந்து கொள்கிறார். இதனால் மனம் மாறும் வெங்கடேஷ் நண்பர்களுடன் சேர்ந்து இணையதளம் வாயிலாக நன்செய் என்ற விவசாயிகளிடமிருந்து நேரிடையாக உணவு பொருட்களை வாங்கி விநியோகம் செய்யும் தொழிலை தொடங்குகிறார். இந்த தொழிலில் வெங்கடேஷ் வெற்றி பெற்றாரா? தடங்கல்களை கடந்து சாதித்தாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

வெங்கடேஷ் புதுமுகம் என்ற அறிமுகமில்லாதவாறு தன்னுடைய இயல்பான நடிப்பால் கலகலப்பு, காதல், சோகம், நட்பு என்று கல்லூரி முதல் வேலை தேடும் வரையில் அவர் செய்யும் அலப்பறைகள், நண்பர்கள் இவரிடம் மாட்டிக்கொண்டு தவிப்பது, ரஜினி சாண்டியிடம் சண்டையிட்டு பின்னர் சமாதானமாகி அவரின் நல்லெண்ணத்தை உணர்ந்து திருந்துவது என்று ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியுள்ளார். பாட்டிக்கும் இவருக்கும் தொடங்கும் நட்பு  மற்றும் காட்சிகள் படத்தின் ஹைலைட். வெல்டன்.
பாட்டியாக ரஜினி சாண்டி மலையாள நடிகை என்றாலும் தன்னுடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். கம்பீரம், உருட்டல், மிரட்டல் என்று படம் முழுவதும் தன்னுடைய ஆளுமையால் கட்டி போட்டு அதிர வைத்து கை தட்டல் பெறுகிறார்.
ரஜினிசாண்டியின் இளமைக்காதல் கதையில் வரும் காதலர் சந்தோஷ் பிரதாப் போராளியாக சிறிய வேடம் என்றாலும் நச்சென்ற நடிப்பு மிரட்டலுடன் உள்ளது.

பாவ்யா ட்ரிகா புதுவரவாக படத்தில் காதலியாக வந்து மனதில் நிற்கிறார். இவருடன் படத்தில் நடித்த கல்லூரி நண்பர்கள், இளவயது ரஜினி சாண்டியாக வரும் பெண், கிராமத்து மக்கள் அனைவரும் படத்தின் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளனர்.

கார்த்திக் நேத்தா, உமா தேவி பாடல் வரிகளில் பிரஷாந்த் பிள்ளையின் இசை அசத்தல் ரகம்.

ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு பிரமாதமாகவும், கிராமம், நகரம் என்று இரு வேறு கோணங்களில் காட்சிக் கோணங்களை அமைத்து சிறப்பாக செய்துள்ளார்.

தீபக் த்வாரகநாத் எடிட்டங்கும், ஸ்டன்னர் சாம்pன் சண்டை கச்சிதம்.
கதிர் என்ற சாதாரண இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களை சுவாரஸ்யம் குறையாமல் இயக்கியுள்ளார் தினேஷ் பழனிவேல். கல்லூரி வாழ்க்கை, வேலை தேடல், பாட்டியின் நட்பு, பாட்டியின் கடந்த கால காதல்கதை, அதன் பின்னர் கதிரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்று படம் முழுவதும் தெளிந்த நீரோடை போல் இயக்கியுள்ளார்.

விவாசாயத்தின் முக்கியத்துவத்தை படம் முழுவதும் சொல்லாமல் அதை சில காட்சிகளில் விவரித்து, அதற்கான தேடல்கள், காமெடி கலந்த விளம்பரம் என்று எதிர்பாராத கோணத்தில் படம் பயணிப்பதால் தோய்வின்றி திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பதற்கு இயக்குனர் தினேஷ் கதிர்வேலை பாராட்டலாம். சொந்தங்களில் தான் நட்பு மலரும் என்பதைக் காட்டிலும் சம்பந்தமே இல்லாத இருவர் வாழ்க்கையில் வயது வித்தியாசம் பார்க்காமல் வரும் புனிதமான நட்பை சிறப்பாக சொல்லியிருக்கிறார் தினேஷ் பழனிவேல். ஹாட்ஸ் ஆஃப்.

மொத்தத்தில் துவாரகா ஸ்டுடியோஸ் சார்பில் தினேஷ் பழனிவேல் தயாரித்திருக்கும் கதிர் வாழ்க்கையை செதுக்கிய காண கிடைக்காத நட்பை பாராட்டலாம், அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.