கடாவர் விமர்சனம்: காடவர் ஒரு புதிய உணர்வைக் கொடுத்து நிச்சயம் அனைவரையும் கவரும் | ரேட்டிங்: 3.5\5
அமலா பால் கதாநாயகியாகவும், முதன் முறையாக தயாரிப்பாளராகவும் களமிறங்கி நடிக்கும் புதிய தமிழ் படம் ‘காடவர்’.
அபிலாஷ் பிள்ளை எழுதி, அனூப் எஸ் பணிக்கர் இயக்கிய இப்படத்தில் அமலாவுடன் அருண் ஆதித், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், அதுல்யா ரவி, ரித்விகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் ‘காடவர்’. டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்
பத்ரா ஒரு தீவிர துப்பறியும் போலீஸ் அதிகாரி ஆக விரும்ப, ஆனால் அவரது தந்தை தனது மகள் மருத்துவராக வேண்டும் என்று விரும்ப இறுதியில் இருவரின் விருப்பங்களையும் நிறைவேற்றி, போலீஸ் சர்ஜன் ஆகிறார். அதன் பின் பத்ரா ஒரு பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணராகிறார். இறந்த உடல்களை ஆராய்வது மற்றும் முடிவுகளை எடுப்பது தவிர, உடற்கூறு ஆய்வு செய்து தொடர்புகளை இணைப்பதன் மூலம் குற்றம் மற்றும் பாதிக்கப்பட்டவரை கணிக்க கூடிய வல்லமை பெற்றவர். பிணவறைக்கு வரும் இறந்த உடல்களின் பிரேதப் பரிசோதனைகளைத் தவிர, பத்ரா குற்றம் நடந்த இடத்திற்குச் சென்று வழக்கின் விசாரணையில் உதவுகிறார். அப்போதுதான் சில விசித்திரமான கொலைகள் நடக்கின்றன. சந்தேக நபராக இருப்பவர் சிறையில் இருக்கிறார். அவர் கொலைகளை முன்னறிவித்து சவால் விடுகிறார். வெளியுலகத் தொடர்பு இல்லாமல் சிறையில் இருப்பவர் எப்படி கொல்ல முடியும்? வேறு யாராவது அவரைக் கொன்றிருந்தால், அவருக்கு எப்படி முன்கூட்டியே தெரியும்? இப்படி ஒரு மர்மமான வழக்கை விசாரிக்கும் போலீஸ் குழுவில் பத்ரா சேருவதும் அதைத் தொடர்ந்து கிடைத்த கண்டுபிடிப்புகளும் தான் ‘காடவர்’.
ஒரு உயர்மட்ட கொலையின் மர்மத்தை முறியடிக்க முயற்சிக்கும் போலீஸ் சர்ஜனாக, ஒரு விசாரணை – த்ரில்லர் படத்தில் அமலா பால் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்து மிகவும் வித்தியாசமாக அமலா பால் புதிய தோற்றத்தில் நடித்துள்ளார். ஹேர் ஸ்டைல், டிரஸ்ஸிங், நடிப்பு… எல்லாமே புதுசு. கவர்ச்சி வேடங்களுக்கு மட்டுப்படுத்தாமல், நடிப்பில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்கும் அவரது ஆர்வத்திற்கு ‘காடவர்’ மற்றொரு உதாரணம்.
திரிகன் வாசு கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். ஹரிஷ் உத்தமன் போலீஸ் வேடத்துக்குப் பொருந்துகிறார்.
முனிஷ்காந்த், திரிகன், ரித்விகா, வினோத் சாகர், ஜெய ராவ், வைஷ்ணவி பிள்ளை, பசுபதி, நிழல்கள் ரவி, புஷ்பராஜ், வேலு பிரபாகர் ஆகியோர் தங்கள் கேரக்டரில் திறம்பட நடித்துள்ளனர்.
அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும், ரஞ்சன் ராஜின் இசையும் படத்திற்கு நல்ல உறுதுணையாக உள்ளது.
ஒரு இளம் போலீஸ் பெண் அதிகாரி ஒரு சடலத்தைப் பயன்படுத்தி ஒரு கொலை மர்மத்தைத் தீர்ப்பதில் உறுதியாக இருக்க அதற்காக தன் சகாக்களை சமாதானப்படுத்தி அதற்காக அமைப்புடன் போராடி வெற்றி பெறுவதே கடாவர் படத்தின் கதைக்களம். தேவையில்லாத சஸ்பென்ஸ், பில்டப், ஜம்ப் பயமுறுத்தும் தருணங்கள் எதுவுமின்றி கதையை அழகாக முன்வைத்து த்ரில்லர் வகை கதைக்குத் அபிலாஷ் பிள்ளை எழுதிய திரைக்கதைக்கு, தேவையான விகிதத்தில் கதாபாத்திரங்களை உருவாக்கி நியாயம் செய்து திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் அனூப் எஸ் பணிக்கர்.
மொத்தத்தில் அமலா பால் தயாரிப்பில் காடவர் ஒரு புதிய உணர்வைக் கொடுத்து நிச்சயம் அனைவரையும் கவரும்.