கடமை விமர்சனம் : கடமை சாதிக்க வயதில்லை | ரேட்டிங்: 2/5
கேஎஸ்என்எஸ் பலிம் இன்டர்நேஷனல் சார்பில் கே. சீராளன் தயாரித்திருக்கும் கடமை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுக்ரன் சங்கர்.
இதில் கே.சீராளன், சந்தியா, பீமாராவ், சுக்ரன் சங்கர், தேவராஜ் சுப்ரமணியம், பான் சி கோபி, டெலிபோன் தேவா, கோடம்பாக்கம் நாகராஜ், பிரபாகரன், சரோஜாதேவி, நிம்மி, சி.பி.அசோக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்;கள்:- ஒளிப்பதிவு பாபு, இசை-பிரசாத் கணேஷ், படத்தொகுப்பு-பன்னீர் செல்வம், சுக்ரன் சங்கர், பாடல்கள்-பாட்டரசன், சமரன், பாடியவர் கள்-பாலக்காடு ஸ்ரீராம், செந்தில் தாஸ், சுதா வள்ளி, பிஆர்ஒ- விஜயமுரளி, கிளாமர் சத்யா.
ஆசிஸ்டென்ட் கமிஷனரான சீராளன் நேர்மையான போலீஸ் அதிகாரி. குற்றவாளிகளை சாமர்த்தியமாக பிடித்து தண்டனை வாங்கி கொடுக்க நினைக்கிறார். சமூக விரோத செயலில் ஈடுபடும் தீனா, பெண்களை ஏமாற்றி திருமணம் செய்யும் மகாதேவன், சங்கிலி பறிக்கும் திருடன் கோல்டு கோபி போன்றவர்களை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார். ஆனால் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஒவ்வொரு முறையும் குற்றவாளிகள் உயர் அதிகாரிகளின் சிபாரிசு, நீதிபதியின் ஆதரவோடு குற்றமற்றவர்கள் என்று நிரூபித்து வெளியே வந்து மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் தன் பதவிக்காலம் முடியும்வரை காத்திருக்கிறார். அதன் பின் குற்றங்சாட்டபட்டவர்களை தேடி கண்டுபிடித்து தண்டனை கொடுக்க நினைக்கிறார். இறுதியில் சீராளனால் குற்றவாளிகளிகளை தண்டிக்க முடிந்ததா? உயர் அதிகாரிகளால் எப்படி பழி வாங்கப்பட்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
தயாரிப்பாளரே கதாநாயகன் கே.சீராளன் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக அதட்டல், விரட்டல், ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பொருந்தாத காதல் காட்சியிலும் முடிந்தவரை நடித்துள்ளார்.
இவருடன் சந்தியா, பீமாராவ், சுக்ரன் சங்கர், தேவராஜ் சுப்ரமணியம், பான் சி கோபி, டெலிபோன் தேவா, கோடம்பாக்கம் நாகராஜ், பிரபாகரன், சரோஜாதேவி, நிம்மி, சி.பி.அசோக்குமார் ஆகியோர் பக்கமேளங்கள்.
ஒளிப்பதிவு பாபு, இசை-பிரசாத் கணேஷ், படத்தொகுப்பு-பன்னீர் செல்வம், சுக்ரன் சங்கர் ஆகியோர் பட்ஜெட் படத்திற்கேற்ற பங்களிப்பு.
போலீஸ் பணியை வேலையாக செய்யாமல் கடமையாக நினைத்து செய்யும் நேர்மையான அதிகாரி அவருக்கு எதிராக செயல்படும் உயர்அதிகாரிகளாலும், எதிரிகளாலும் ஏமாற்றப்பட்டு பழி வாங்கப்படும் சம்பவங்களை வேலைக்கு முன்னும் பின்னுமாக கதைக்களமாக அமைத்து இயக்கியும் நடித்தும் இருக்கிறார் சுக்ரன் சங்கர்.
மொத்தத்தில் கேஎஸ்என்எஸ் பலிம் இன்டர்நேஷனல் சார்பில் கே. சீராளன் தயாரித்திருக்கும் கடமை சாதிக்க வயதில்லை.