ஒத்த ஓட்டு முத்தையா சினிமா விமர்சனம்: ஒத்து ஒட்டு முத்தையா அரசியல் குடும்ப உறவுகளின் பித்தலாட்டம் | ரேட்டிங்: 2/5

0
331

ஒத்த ஓட்டு முத்தையா சினிமா விமர்சனம்: ஒத்து ஒட்டு முத்தையா அரசியல் குடும்ப உறவுகளின் பித்தலாட்டம் | ரேட்டிங்: 2/5

சினி கிராஃப்ட் புரொடக்ஷன் சார்பில் ரவிராஜா தயாரித்திருக்கும் ஒத்து ஒட்டு முத்தையா படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சாய் ராஜகோபால்.

இதில் கதையின் நாயகனாக காமெடி கிங் கவுண்டமணி(முத்தையா), யோகிபாபு (எக்மோர்), ரவிமரியா (சாய் கிருஷ்ணா),ஒஏகே சுந்தர் (சரவணப் பாண்டியன்), மொட்ட ராஜேந்திரன் (சித்தப்பா), சிங்கமுத்து (கொப்பர சாமி), சித்ரா லஷ்மண்(பெரியப்பா), வையாபுரி மற்றும் முத்துக்காளை ( பி.ஏக்கள்), டி.ஏ. சீனிவாசன் (ஆமை மூஞ்சி ஆறுமுகம்), வாசன் கார்த்திக் (குணா), அன்பு மயில்சாமி (சத்யா), கஜேஸ் நாகேஷ் (தேவா), கூல் சுரேஷ் (பாளையங்கோட்டை), சென்ட்ராயன் (திகார்), சதீஸ் மோகன் (வேலூர்), இயக்குனர் சாய் ராஜகோபால் (மிலிட்டரி மேஜர் சுந்தர்ராஜன்), நட்புக்காக டெம்பிள் சிட்டி குமார் (கருப்பழகன் கோபால்), ராஜேஸ்வரி (கவுண்டர் மனைவி அபிராமி), தாரணி (சிங்கமுத்து மனைவி), லேகா ஸ்ரீ (டிஎஸ்ஆர்; மனைவி), டாக்டர் காயத்ரி (ஜானகி மிலிட்டரி ஒய்ப்), மணிமேகலை (ஓஏகே சுந்தர் மனைவி), மணவை பொன் மாணிக்கம் (அரசியல்வாதி) ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.​

தொழில்நுட்ப கலைஞர்;கள்:- இணைத் தாயாரிப்பு : கோவை லஷ்மி ராஜன்,ஒளிப்பதிவு – எஸ்.ஏ. காத்தவராயன், எடிட்டர்- ராஜா சேதுபதி மற்றும் நோயல், கலை – மகேஷ் நம்பி, இசை-சித்தார்த் விபின், பாடல்கள்- சினேகன்,மோகன்ராஜா,சாய்ராஜகோபால், சண்டை-ஃபயர் கார்த்திக் மற்றும் வீர் விஜய், நடனம்- சங்கர் மற்றும் நோபல் மாஸ்டர், பிஆர்ஒ-நிகில் முருகன்.

பிரபலமான அரசியல்வாதி ஒத்த ஒட்டு முத்தையா, தேர்தலில் தோல்வியடைந்து தனக்கு பதவி கிடைக்காமல் போனாலும் பணபலம் படைத்தவர் அரசியல் செல்வாக்கு மிக்கவர். அடுத்த தேர்தலில் வெற்றி பெற கடும் முயற்சியில் இருக்கும் முத்தையாவிற்கு முதலில் டிரைவராக வந்து அரசியல் எதிரியாக வரும் எக்மோர்( யோகிபாபு) பெரும் தலைவலியாக இருக்கிறார். இதனிடையே முத்தையாவிற்க்கு மூன்று தங்கைகள் அவர்களுக்கு அண்ணன், தம்பிகள் இருக்கும் ஒரே குடும்பத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஏகப்பட்ட வரன்கள் தங்கைளுக்கு வந்தாலும், தன் கொள்கையில் பிடிவாதமாக இருக்கிறார். இதனால் திருமணம் தடைபட, தங்கைகள் மூவரும் தங்களுக்கு பிடித்தமானவர்களை தேட ஆரம்பிக்கின்றனர். இவர்கள் மூவருக்கும் மூன்று காதலர்கள் கிடைக்க, அவர்களை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று அண்ணன் முத்தையாவை நம்ப வைக்க பார்க்கிறார்கள். இதற்காக இருவர் குடும்பத்திலிருந்தும் தந்தை, தாயை தனியாக வரவழைத்து நடந்ததை சொல்லி நடிக்க சம்மதம் வாங்கி முத்தையா வீட்டிற்கு சம்பந்தம் பேச அனுப்புகின்றனர்.இதில் மூவரும் வெற்றி பெற்றார்களா? முத்தையா ஏன் ஒரே குடும்பத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறார்? இவர்களின் நாடகம் அம்பலமானதா? முத்தையா தங்கைகளை காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதித்தாரா? அதன் பின் அரசியலில் ஏற்பட்ட சிக்கல்களை சமாளித்து வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

காமெடி கிங் கவுண்டமணி அரசியல்வாதி முத்தையாவாக கதையில் நாயகனாக படம் முழுவதும் வந்து தன்னுடைய கவுண்டர் டயலாக்குகளால் ரசிக்க வைத்தாலும் முந்தைய கம்பீரம் உடல்மொழி மிஸ்ஸிங். இருந்தாலும் இந்த வயதிலும் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்துள்ளார்.

யோகிபாபு, ரவிமரியா,ஒஏகே சுந்தர், மொட்ட ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லஷ்மண், வையாபுரி மற்றும் முத்துக்காளை, டி.ஏ. சீனிவாசன், வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஸ் நாகேஷ், கூல் சுரேஷ், சென்ட்ராயன், சதீஸ் மோகன், இயக்குனர் சாய் ராஜகோபால், நட்புக்காக டெம்பிள் சிட்டி குமார், ராஜேஸ்வரி, தாரணி, லேகா ஸ்ரீ, டாக்டர் காயத்ரி, மணிமேகலை என்று ஏகப்பட்ட அனுபவ நடிகர்களின் காமெடி நட்சத்திர பட்டாளங்களின் அணிவகுப்பு அரசியல் நய்யாண்டி செய்து சிரிக்க வைப்பதில் தோற்று போகிறார்கள்.  இவர்களுடன் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான மணவை பொன் மாணிக்கம் அரசியல்வாதியாக சில காட்சிகளில் வந்து போகிறார்.

ஒளிப்பதிவு – எஸ்.ஏ. காத்தவராயன், எடிட்டர்- ராஜா சேதுபதி மற்றும் நோயல், கலை – மகேஷ் நம்பி, இசை-சித்தார்த் விபின், பாடல்கள்- சினேகன்,மோகன்ராஜா,சாய்ராஜகோபால், சண்டை-ஃபயர் கார்த்திக் மற்றும் வீர் விஜய், நடனம்- சங்கர் மற்றும் நோபல் மாஸ்டர் ஆகியோர் தங்களால் முடிந்த படத்திற்கேற்ற பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இயக்கியிருக்கும் சாய் ராஜகோபால் காமெடி கிங் கவுண்டமணி, யோகிபாபுவை வைத்து இன்னும் அழுத்தமான காட்சிகளையமைத்து அரசியல் நய்யாண்டி கலந்த குடும்ப பொழுதுபோக்கு படத்தை சிறப்பாக கொடுக்க முயற்சி செய்திருக்கலாம்.

மொத்தத்தில் சினி கிராஃப்ட் புரொடக்ஷன் சார்பில் ரவிராஜா தயாரித்திருக்கும் ஒத்து ஒட்டு முத்தையா அரசியல் குடும்ப உறவுகளின் பித்தலாட்டம்.