எண். 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு திரைப்பட விமர்சனம் : ‘எண்-6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ அதிகார துஷ்பிரயோகத்தை பழி வாங்கி முடிவுக்கு கொண்டு வரும் விளையாட்டு குழு | ரேட்டிங்: 3/5

0
341

எண். 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு திரைப்பட விமர்சனம் : ‘எண்-6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ அதிகார துஷ்பிரயோகத்தை பழி வாங்கி முடிவுக்கு கொண்டு வரும் விளையாட்டு குழு | ரேட்டிங்: 3/5

உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் செ.ஹரி உத்ரா, டாக்டர் எஸ்.ப்ரித்தி சங்கர் , ஆர் உஷா தயாரித்திருக்கும் எண். 6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு  படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் செ.ஹரி உத்ரா.

இதில் ஷரத், அய்ரா,மதன் தட்சிணாமூர்த்தி, கஞ்சா கருப்பு, சோனா ஹைடன்,நரேன், மகேந்திரன், இளையா, கஜராஜ், ராசி அழகப்பன், தஸ்மிகா லட்சுமணன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘எண் 6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு’.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – வினோத் ராஜா, இசை – ஏஜே அலிமிர்சாக் , படத் தொகுப்பு -கிஷோர், பாடல்கள் –  வித்யாசாகர், பா. இனியவன், செ. ஹரி உத்ரா, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி.ஒன்.

கால்பந்தாட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மதன் தனக்கு ஏற்பட்ட கால் காயத்தால் நடக்க முடியாமல் அவருடைய கனவு சிதைந்து விடுகிறது. அதனால்; கூலி வேலை செய்யும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நன்கு பயிற்சி கொடுத்து வாத்தியார் என்ற பெயரில் கால்பந்தாட்டக் குழுவை உருவாக்குகிறார். இதில் ஷரத் மற்றும் நண்பர்கள் உத்வேகத்துடன் விளையாடி நன்கு பயிற்சி எடுத்துக் கொள்கின்றனர். இவர்களின் ஆட்டத்தை பார்த்து பொறாமைப்படும் அரசியல் பலம், அதிகார பலத்துடன் தாதாவாக வலம் வரும் நரேன் வளர விடாமல் இருக்க திட்டம் போடுகிறார். மதன் மாநில அளவில் தேர்ந்தெடுக்கும் கமிட்டிக்கு வாத்தியார் குழுவை தேர்ந்தெடுக்கும்படி கோரிக்கை வைக்கிறார். இதை பரிசீலனை செய்து தேர்ந்தெடுக்கும் வேளையில் நரேன் உள்ளே நுழைந்து வாத்தியார் குழுவை நிராகரிக்க செய்து விடுகிறார். இதை கேள்விப்படும் மதன் கோபமாக நரேனிடம் முறையிட சண்டையில் இறந்து விடுகிறார். மதனின் இறப்பு வாத்தியார் கால்பந்தாட்டக் குழுவிற்கு பேரடியாக இருக்கிறது. அதன் பின்னர் ஷரத் என்ன முடிவு செய்கிறார்? யாரை பழி வாங்கினார்? அனைவரும் நரேனை எதிர்த்து என்ன செய்தார்கள்? இறுதியில் இவர்களின் கனவு நனவானதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகன் ஷரத் கால்பந்தாட்ட வீரராக எப்போழுதும் விரைப்பான பார்வை சோகத்துடன் ஏதோ பறிகொடுத்தது போல்; முகபாவனையுடன் வருகிறார். முதல் பாதி ஆக்ரோஷத்துடன் கொலை செய்வதும், இரண்டாம் பாதியில் போராடும் விளையாட்டு வீரராகவும் வந்து அழுத்தமான பதிவை செய்துள்ளார்.

காதலி அய்ரா சில காட்சிகள் ஒரு பாடலுக்கு வந்து விட்டு போகிறார்.

மதன் தட்சிணாமூர்த்தி கால் பாதிப்புடன் கண்டிப்பான நெஞ்சுறுதி மிக்க கால்பந்தாட்ட பயிற்சியாளராக இறக்கும் தருவாயில் உணர்ச்சிகரமான வசனங்கள் பேசி இயல்பாக சிறப்பாக நடித்துள்ளார். கஞ்சா கருப்பு, சோனா ஹைடன்,நரேன், மகேந்திரன், இளையா, கஜராஜ், ராசி அழகப்பன், தஸ்மிகா லட்சுமணன் ஆகியோர் பக்க மேளங்கள்.

வினோத் ராஜா ஒளிப்பதிவு முதல் பாதி இருட்டிலேயே துரத்தல், பழி வாங்குதல் காட்சிகளை படமாக்கி, இரண்டாம் பாதியில் கால் பந்தாட்ட களத்திற்குகேற்றவாறு காட்சிக் கோணங்களை அமைத்து தெளிவுடன் கொடுத்துள்ளார்.

ஏஜே அலிமிர்சாக் இசை பரவாயில்லை ரகம். குழு வீரர்களின் ஆக்ரோஷ பேச்சுக்கள் அடிக்கடி படத்தில் மீ;ண்டும் காட்டுவதை தவிர்த்திருக்கலாம் எடிட்டர் கிஷோர்.

மேல் சாதி கீழ் சாதினருக்கு இடையே நடைபெறும் விளையாட்டு மோதலைப்பற்றிய படத்தில் ரவுடி, கொலை, பழி வாங்குதலை மையப்படுத்தி எழுதி இயக்கியிருக்கிறார் செ.ஹரி உத்ரா. அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் எளிய மக்களின் போராட்டம் இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாக மாற்றி விடுகிறது என்பதை இன்னும் அழுத்தமான பதிவாக முயற்சித்திருக்கலாம் இயக்குனர் செ.ஹரி உத்ரா.

மொத்தத்தில் உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் செ.ஹரி உத்ரா, டாக்டர் எஸ்.ப்ரித்தி சங்கர் , ஆர் உஷா தயாரித்திருக்கும் எண். 6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு அதிகார துஷ்பிரயோகத்தை பழி வாங்கி முடிவுக்கு கொண்டு வரும் விளையாட்டு குழு.