எங்க வீட்ல பார்ட்டி சினிமா விமர்சனம் : எங்க வீட்ல பார்ட்டி முகநூல் பழக்கம் ஆபத்தை ஏற்படுத்தும் வீபரீத நட்பு

0
162

எங்க வீட்ல பார்ட்டி சினிமா விமர்சனம் : எங்க வீட்ல பார்ட்டி முகநூல் பழக்கம் ஆபத்தை ஏற்படுத்தும் வீபரீத நட்பு

ஜி.பி.ஆர்.எஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவப்பிரகாஷுடன் சோமனூர் மஞ்சுளா ரவிக்குமார் இணைந்து தயாரித்துள்ள எங்க வீட்ல பார்ட்டி படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் கே.சுரேஷ் கண்ணா.

இதில் சிவப்பிரகாஷ், யாத்ரா, சாசனா, ஹன்சி வர்கீஸ், சக்தி, ஒமேரா மேத்வின், தயூப், சாய் சதீஷ், கார்த்திகேயன், சிபு சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :ஒளிப்பதிவு -ஆர்.பாலா இசை-வி.கோபி ஸ்ரீ, பின்னணி இசை – சுரேஷ் சர்மா, பாடல்கள்- சுரேஷ் நாராயணன், தளபதி ராம்குமார், எடிட்டிங் – பாலாஜி, நடனம் – ஆர்.கே சரவணன், இணை தயாரிப்பு – சோமனூர் மஞ்சுளா ரவிக்குமார், மக்கள் தொடர்பு – வெங்கட்

முகநூல் மூலம் அறிமுகமான நண்பர்கள் ஒரு வருடத்தை கொண்டாடும் வகையில் அனைவரும் ஒன்று கூடி மது அருந்தி கொண்டாடுகின்றனர். இரவு நேரமாகிவிடுவதால் நண்பர் வீட்டில் தங்க முடிவெடுக்கின்றனர். ஐந்து ஆண்கள், இரண்டு பெண்கள் என்று ஒன்றாக நண்பர் வீட்டில் தங்குகிறார்கள். அனைவரும் உறங்கி மறுநாள் விழித்தெழுகிறார்கள். அங்கு தங்கிருந்த இரண்டு பெண்களில் ஒருவர் அடிபட்டி குளியலரையில் இறந்து கிடக்கிறார். இதனால் அதிர்ச்சியாகும் ஐந்து நண்பர்களும் யார் கொலை செய்தார்கள் என்று சந்தேகப்பட்டு குழப்பத்தில் சண்டையிட்டு கொள்கின்றனர். இந்த சமயத்தில் அந்த வீட்டிற்கு வேலை செய்யும் பெண், பால்காரர், பிளம்பர், மாடி வீட்டு பெண், மாடி வீட்டிற்கு விருந்தினராக வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் இவர்களின் கூச்சலைக் கேட்டு வந்து விசாரித்து செல்கின்றனர். இவர்களையெல்லாம் சமாளித்து அனுப்பி வைக்கும் ஐந்து நண்பர்களை உயிருடன் இருக்கும் தோழி போலீசில் புகார் அளித்து மாட்டிவிடப் போவதாக எச்சரிக்கிறார். அந்த தோழியை சமாதானப்படுத்தும் ஐந்து நண்பர்களும், இறந்த பெண்ணை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்த திட்டமிடுகின்றனர். இவர்களின் திட்டம் நிறைவேறியதா? மாட்டிக் கொண்டார்களா? இறந்த தோழியின் பாய்பிரண்ட் அங்கு வந்தாரா? போலீஸ் இவர்களை நெருங்கியதா? கொலை செய்தது யார்? என்பதே படத்தின் இறுதி முடிவு.

இன்ஸ்பெக்டராக தயாரிப்பாளர் சிவப்பரகாஷ் கொலை நடந்த வீட்டில் ஆறு நண்பர்களையும் விசாரித்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் விதத்தில் தேர்ந்த நடிப்பை வழங்கி, ஒரு பாட்டுக்கும் நடனம் ஆடி தன் ஆசையை பூர்த்தி செய்து கொள்கிறார். ஒரே இடத்தில் சொச்ச படத்தையும் மீதி விசாரணையும் மிச்சம் வைக்காமல் முடித்து குற்றவாளியையும் கைது செய்து பட்ஜெட்டையும் சிக்கனமாக iயாண்டிருக்கிறார்.

மற்றும் யாத்ரா, சாசனா, ஹன்சி வர்கீஸ், சக்தி, ஒமேரா மேத்வின், தயூப், சாய் சதீஷ், கார்த்திகேயன், சிபு சரவணன் ஆகியோர் புதுமுகங்கள் என்றாலும் ஒரு இடத்தில் நடக்கும் சம்பவத்தை தோய்வில்லாமல் எடுத்துச் செல்வதில் பெரும் பங்கு வகித்துள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டில் அட்டாச்ட் பாத்ரூம் உள்ள அறை, உணவு அருந்தும் அறை, ஒரு கட்டில் மற்றும் சோபா இருக்கும் ஹால் என்று குறுகிய வட்டத்திற்குள் நடக்கும் கொலை, நண்பர்களின் பரிதவிப்பு, இடர்பாடுகள், போலீஸ் விசாரணை, குற்றத்தின் பின்னணி என்று சமார்த்தியமாக தன் காட்சிக்கோணங்களால் சமாளித்து இடர்பாடுகள் இல்லாமல் முடிந்த வரை 95 சதவீத படத்தை முடித்து, கொஞ்சம் வெளிப்புற படப்பிடிப்பை கையாண்டு சிறப்பாக கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஆர்.பாலா.

சுரேஷ் நாராயணன் மற்றும் தளபதி ராம்குமார் ஆகியோரின் இரண்டு பாடல்களில் வி.கோபி ஸ்ரீயின்; இசை படத்தின் இடையே ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. சுரேஷ் சர்மாவின் பின்னணி இசையும் பரவாயில்லை ரகம்.

முதல் பாதி எடிட்டிங்கில் பாலாஜி கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம், இரண்டாம் பாதி ஒகே.

இணையதள வளர்ச்சியில் நல்லதும் இருக்கும் ஆபத்தும் இருக்கும். அன்று  இணையதள வளர்ச்சி இல்லாத நேரத்தில் முகம் பார்த்து பேசியே நாம் யோசித்து யோசித்து முகம் அறியா நட்பை தவிர்த்ததால், தவறான நட்பால் தடம் மாறுவது என்பது அரிதான ஒன்றாக தான் இருந்தது. இன்று இதை எல்லாம் வாட்ஸ்-அப், பேஸ்-புக்கில்  குறுந்தகவலாக அனுப்பி உறவுகளையும், நட்புகளையும் நம்மை நோக்க விடாமல் செல்போனில் முடங்கி வைப்பதால் ஒரே அறைக்குள் இருந்து கொண்டு முகம் பார்க்காமல் இருக்கும் இதுபோன்ற கலாசாரம் இன்றைக்கு குறிப்பாக இளைஞர்களை இணைத்து ஒரு பேராபத்தை நோக்கி அழைத்து செல்கிறது என்பதை ஒரு கொலை விசாரணையை மையமாக வைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் கே.சுரேஷ் கண்ணா. இதை தான் ‘முகநக நட்பது நட்பன்று’ என்று வள்ளுவர் அன்றே நமக்கு உணர்த்தி உள்ளார். இன்றைய இளைஞர்களின் குணாதியங்கள், பழக்க வழக்கங்கள், ஒரினச் சேர்க்கை குணம் கொண்டவர்கள் என்பதை பேஸ்புக் மூலம் பழகும் நண்பர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அத்தகைய பேராபத்தை உணராமல் பழகும் நண்பர்களுக்கு ஏற்படும் விபரீத பாதக விளைவுகளே படத்தின் கதையாக  முதல் பாதியை விட இரண்டாம் பாதி தோய்வில்லாமல் எடுத்துச் செல்கிறார் இயக்குனர் கே.சுரேஷ் கண்ணா.

மொத்தத்தில் ஜி.பி.ஆர்.எஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவப்பிரகாஷுடன் சோமனூர் மஞ்சுளா ரவிக்குமார் இணைந்து தயாரித்துள்ள எங்க வீட்ல பார்ட்டி முகநூல் பழக்கம் ஆபத்தை ஏற்படுத்தும் வீபரீத நட்பு.