எக்ஸ்ட்ரீம் சினிமா விமர்சனம்: எக்ஸ்ட்ரீம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5
சீகர் பிக்சர்ஸ் சார்பில் கமலா குமாரி , ராஜ்குமார்.என் தயாரித்திருக்கும் எக்ஸ்ட்ரீம் படத்தை எழுதிய இயக்கியிருக்கிறார் ராஜவேல் கிருஷ்ணா.
இதில் ரக்சிதா மஹாலஷ்மி – ஸ்ருதி (காவல் அதிகாரி), அபி நக்ஷத்ரா – திவ்யா, ராஜ் குமார் நாகராஜ் – சத்திய சீலன், அனந்த் நாக் – ஜெய்,அமிர்தா ஹல்டர் – ஸ்ரேயா, சிவம் தேவ் – திரு ,ராஜேஸ்வரி ராஜி – சுகா, சரிதா – அலமேலு, பரோட்டா முருகேசன் – முருகேஷ், ராஜசேகர் – சேகர்,ஜெயராஜ் ஜெய- ஜெயராஜ், குட்டி கமலாத்மிகா – ஸ்ரீ,மாஸ்டர் கோகுல், தன சேகர் – தனா, ஓட்டேரி சிவா – சிவா,சந்திர மௌலி ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்;கள்:-; ஒளிப்பதிவாளர் – டிஜே பாலா, எடிட்டர் – ராம்கோபி, இசை – ஆர்.எஸ்.ராஜ்பிரதாப், நடன இயக்குனர – பி.ராக் ஷங்கர்,ஸ்டண்ட் மாஸ்டர் – சிவம் எஸ்இவி, அசோசியேட் ஒளிப்பதிவாளர் – கிஷோர், ராமச்சந்திரன்,ஸ்டில்ஸ் - சுரேந்தர், பிஆர்ஒ – புவன்.
திருமுல்லைவாயிலில் புதிய கட்டுமான கட்டிடத்தில் இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட, அதன் பின் காவல் அதிகாரிகள் ராஜ்குமார் மற்றும் ரக்சிதா ஆகியோரின் போலீஸ் விசாரணை தொடங்குகிறது. அந்த இளம்பெண் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்யும் பெண் ஒருவரின் மகள் அபி நட்சத்திரா என்றும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்திருப்பது தெரிய வருகிறது. இதன் பின் அதிர்ச்சியூட்டும் பல சம்பவங்கள் நடக்க போலீஸ் விசாரணையில் பல சம்பவங்கள் வெளிவருகின்றன. அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் காதல் ஜோடி, குடியிருப்புவாசிகள், போதைப்பொருள் ஆசாமி என்று மர்ம முடிச்சுக்கள் நீண்டு கொண்டே போக, யார் தான் குற்றவாளி என்ற கண்டுபிடிக்காத குழப்பத்தில் போலீஸ் தினறுகிறது. இறுதியில் எதற்காக இந்த கொலை நடந்தது? என்ன காரணம்? மக்களுடனே மிகவும் சர்வசாதாரணமாக நல்லவர்கள் போல் சுற்றித் திரியும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது தான் ‘எக்ஸ்டிரீம்’ படத்தின் கதை.
ரக்சிதா மஹாலஷ்மி போலீஸ் அதிகாரியாக கம்பீர தோற்றத்துடன் கடமை உணர்ச்சியுடன் தன் பணியை செய்து முடிக்கும் கதாபாத்திரம்,இளம் பெண் திவ்யாவாக நாகரீக உலகில் பலிகாடாக மாட்டும் அப்பாவியான அபி நக்ஷத்ராவின் கொலை தான் படத்திற்கு முக்கிய கருவாக அமைந்துள்ளது. சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனை, பணிச்சுமை இரண்டையும் சமாளிக்கும் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக சத்திய சீலன், காதலனாக அனந்த் நாக், கவர்ச்சி விருந்து படைக்கும் காதலியாக அமிர்தா ஹல்டர், சிவம் தேவ்,ராஜேஸ்வரி ராஜி, சரிதா, பரோட்டா முருகேசன், ராஜசேகர் ,ஜெயராஜ் ஜெய, குட்டி கமலாத்மிகா ,மாஸ்டர் கோகுல், தன சேகர் , ஓட்டேரி சிவா ,சந்திர மௌலி ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து செவ்வென செய்துள்ளனர்.
படத்தில் டிஜே பாலா ஒளிப்பதிவு கதையின் பதற்றத்தையும் நெருக்கடியையும் திறம்பட கையாண்டுள்ளார்.
ராம்கோபியின் துல்லியமான எடிட்டிங் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து தடையற்ற அனுபவத்தை உறுதி செய்கிறது.
இசை ஆர்.எஸ்.ராஜ்பிரதாப், நடனம் பி.ராக் ஷங்கர்,ஸ்டண்ட் மாஸ்டர் சிவம் ஆகியோரின் கூட்டு முயற்சி பலனளித்துள்ளது.
“எக்ஸ்ட்ரீம்” சஸ்பென்ஸை சமூகப் பொருத்தமான செய்தியுடன் இணைத்து, கொலையின் பின்னணியில் உள்ள மர்மத்தை அவிழ்த்து, இன்றைய சிக்கலான சமூகத்தில் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கைமணி அடித்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு மற்றும் சவால்களை கதை பிரதிபலித்து பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், இவர்களின் செயல் வயது வித்தியாசமின்றி எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும், போதை துஷ்பிரயோகம் போன்ற சிக்கல்களை கலந்து கொலை விசாரணை மூலம் பொழுது போக்கு அம்சங்களுடன் கொடுத்துள்ளார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா.
மொத்தத்தில் சீகர் பிக்சர்ஸ் சார்பில் கமலா குமாரி , ராஜ்குமார்.என் தயாரித்திருக்கும் எக்ஸ்ட்ரீம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் க்ரைம் த்ரில்லர்.