உழைக்கும் கைகள் விமர்சனம்: உழைக்கும் கைகள் எம்.ஜி.ஆரின் மங்காப்புகழை இன்றைக்கும் நினைவில் நிலைக்க வைத்து மலைக்க வைக்கிறது | ரேட்டிங் – 2.5|5

0
194

உழைக்கும் கைகள் விமர்சனம்: உழைக்கும் கைகள் எம்.ஜி.ஆரின் மங்காப்புகழை இன்றைக்கும் நினைவில் நிலைக்க வைத்து மலைக்க வைக்கிறது | ரேட்டிங் – 2.5|5

கே. எம்பையர் மூவீஸ் சார்பில் டாக்டர் மு. சூர்யாகுமரகுருபரன் தயாரித்து திரைக்கதை, வசனம் எமுதி இயக்கியிருக்கிறார் நாமக்கல் எம்.ஜி.ஆர்.
இதில் நாமக்கல் எம்.ஜி.ஆர்., செந்தில்நாதன்,கிரண்மை,ஜாகுவார் தங்கம்,பிரேம்நாத், மோகன்,போண்டாமணி, ஷர்மிளா, விஜயலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை-சங்கர்கணேஷ், சண்டை பயிற்சி ; ஜாகுவார் தங்கம், விஜய் ஜாகுவார், கேமரா- சிவா, படத்தொகுப்பு- எஸ்.ஜே..பாரதி, தயாரிப்பு மேற்பார்வை- செங்கோட்டை கணேஷ்,தயாரிப்பு வடிவமைப்பு- சதாசிவ மூர்த்தி, டைரக்சன் மேற்பார்வை – செந்தில்நாதன், மக்கள்; தொடர்பு- விஜயமுரளி,கிளாமர் சத்யா.

கிராமத்தின் பெரிய பணக்கார பண்ணையாரின் மகனாக முத்தையா இருந்தும் விவசாயத்தில் ஈடுபாடு கொண்டு ஏழை மக்களுக்கு உதவும் நல்லெண்ணம் கொண்டவராக விளங்குகிறார். ஆனால் தந்தை தொழிலாளிகளை ஏமாற்றி நெல் கொள்முதல் செய்வது, அநியாய வட்டிக்கு பணம் கொடுத்து மக்களை மிரட்டுவதைப் பார்த்து முத்தையாவிற்கும், தந்தைக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. அதே சமயம் பக்கத்து ஊர் பண்ணையார் வேலுபாண்டியன் ஏழை விவசாயிகளின் நிலங்களை மிரட்டி வாங்கி தொழிற்சாலை கட்ட முடிவெடுக்கிறார். பண்ணையார் வேலுபாண்டியன் மனைவியின் தங்கையை முத்தையா காதலிக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வேலுபாண்டியன் முத்தையாவை தீர்த்துக் கட்ட முடிவெடுக்கிறார். இந்த சதியிலிருந்து முத்தையா தப்பித்தாரா? முத்தையாவின் தந்தை திருந்தினாரா? காதலியை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் கதை.

இதில் நாமக்கல் எம்.ஜி.ஆர்., செந்தில்நாதன், கிரண்மை, ஜாகுவார் தங்கம், பிரேம்நாத், மோகன், போண்டாமணி, ஷர்மிளா, விஜயலட்சுமி மற்றும் பலர் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

நல்ல நல்ல நிலம் பார்த்து,இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள,காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது, கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி .. விவசாயி. என்ற பாடல்களை ரீமேக் செய்து பழைய பாடல்களின் தன்மை மாறாமல் இன்றைக்கும் ரசித்து கேட்கும் வண்ணம் இசையமைத்துள்ளார் சங்கர்கணேஷ்.

சண்டை பயிற்சி ; ஜாகுவார் தங்கம், விஜய் ஜாகுவார், கேமரா- சிவா, படத்தொகுப்பு- எஸ்.ஜே..பாரதி அனைவருமே படத்திற்கேற்ற பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.

1967 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் விவசாயி. இதில் கே.ஆர்.விஜயா, வி.கே.ராமசாமி, நாகேஷ், மனோரமா ஆகியோர் நடித்திருந்த படத்தின் ரீமேக் தான் நாமக்கல் எம்ஜிஆர் நடித்து.திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் உழைக்கும் கைகள். படத்தின் கதாபாத்திரங்கள் பெயர்கள், சம்பவங்கள், பாடல்கள் அத்தனையும் அப்படியே தக்கவைத்து இன்றைய சூழலுக்குகேற்றவாறு காட்சிகளை கொடுத்து, விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ள படத்தை தன்னால் முடிந்தவரை எம்.ஜி.ஆர் போல் நடை,உடை,பாவனையோடு சிறப்பாக கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் நாமக்கல் எம்.ஜி.ஆர்.

மொத்தத்தில கே. எம்பையர் மூவீஸ் சார்பில் டாக்டர் மு. சூர்யாகுமரகுருபரன் தயாரித்துள்ள உழைக்கும் கைகள் எம்.ஜி.ஆரின் மங்காப்புகழை இன்றைக்கும் நினைவில் நிலைக்க வைத்து மலைக்க வைக்கிறது.