உயிர் தமிழுக்கு விமர்சனம் : ‘உயிர் தமிழுக்கு’ காதல் கற்றுக்கொடுக்கும் அரசியல் ஆர்ப்பாட்டம் | ரேட்டிங்: 3/5

0
414

உயிர் தமிழுக்கு விமர்சனம் : ‘உயிர் தமிழுக்கு’ காதல் கற்றுக்கொடுக்கும் அரசியல் ஆர்ப்பாட்டம் | ரேட்டிங்: 3/5

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்கி தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’

அமீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசையமைக்க, பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.ஒளிப்பதிவு-தேவராஜ், எடிட்டர்-அசோக். இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார். பிஆர்ஒ ஜான்.

தேனி மாவட்டத்தில் கேபிள் டி.வி ஆப்ரேட்டராக பாண்டியன் ஊர் மக்களுக்கு உதவிகள் செய்து எம்ஜிஆர் பாண்டி என்று பெயர் எடுக்கிறார். இந்நிலையில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் நண்பர் சுடலை (இமான் அண்ணாச்சி)யுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய செல்லும் பாண்டியன் அங்கே எதிர்கட்சி அமைச்சர் பழக்கடை ராமச்சந்திரனின் (ஆனந்தராஜ்) மகள் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தமிழ்செல்வியை (சாந்தினி ஸ்ரீதரன்) பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார்.அதனால் இமான் அண்ணாச்சிக்கு பதிலாக மக்கள் முன்னணி கட்சி சார்பாக அமீர் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதன்பின் தமிழ்செல்வியை சந்தித்து பேசலாம் என்ற எண்ணத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இறுதியில் கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்செல்வியை காதலித்தாலும், அரசியல் தந்தையின் எதிர்ப்பு வலுக்கிறது. இந்நிலையில் மர்ம நபர்களால் பழக்கடை ராமச்சந்திரன் கொல்லப்பட, இதற்கு காரணம் பாண்டியன் தான் என்று உறுதியாக போலீஸ், எதிர்கட்சி நம்ப தமிழ்செல்வியும் பாண்டியன் தான் தன் தந்தையை கொன்றார் என்று அழுத்தமாக நம்பி பாண்டியனை வெறுக்கிறார்.இறுதியில் தான் நிரபராதி என்று பாண்டியன் எப்படி நிரூபிக்கிறார்? அதன் பின் தமிழ்ச்செல்வி காதலை ஏற்றுக் கொண்டாரா? பாண்டியன் தமிழ்ச்செல்வி இணைந்தார்களா? என்பதே படத்தின் முடிவு.

அமீர் பாண்டியனாக கதர் வேட்டி, சட்டை அணிந்து பேசி நக்கல், நையாண்டிதனத்துடன் அரசியல் வசனம் பேசி காதலிக்காக அரசியலில் நுழைந்து பின்னர் அரசியல் கற்று முழு நேர அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தி  சமகால அரசியலை கிண்டலடித்து செய்யும் அளப்பறைகள், வாக்கு சாவடி குளறுபடிகள் என்று இயல்பான நடிப்பாலும், எம்ஜிஆர் பாடல் நடனத்திலும் கவர்கிறார். பாராட்டுக்கள்.

சாந்தினி ஸ்ரீதரன் தமிழ்செல்வியாக இவரைச் சுற்றித்தான் கதைக்களம் நகர்ந்தாலும், அழகு பதுமையாக மட்டுமே வந்து போகிறார். பாண்டியனிடம் மாட்டிக் கொண்டு திண்டாடும் அப்பாவி சுடலையாக இம்மான் அண்ணாச்சி, ஆனந்தராஜ் பழக்கடையார் ராமச்சந்திரனாக, தலைவராக (திருச்செல்வம்) ராஜ் கபூர்,சேதுவாக சரவண சக்தி, மாரி முத்து டி.என்.எஸ், பரமனாக கஞ்சா கருப்பு, சுப்ரமணியம் சிவா என்று ஏகப்பட்ட நட்சித்திர பட்டாளத்துடன் களமிறங்கி அரசியல் நகைச்சுவைக்கு உத்திரவாதம் கொடுத்துள்ளனர்.

பா.விஜய்யின் பாடல் வரிகளுக்கு சிறப்பாக இசையமைத்துள்ளார் வித்யாசாகர்.

ஒளிப்பதிவு-தேவராஜ் அரசியல் சார்ந்த கதைக்கு ஏற்றவாறு காட்சிக்கோணங்களில் திறமையை நிரூபித்துளார்.

எடிட்டர்-அசோக் வாக்கு சாவடி எண்ணிக்கை காட்சிகளில் கொஞ்சம் தோய்வு ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம்.

உயிர் தமிழுக்கு என்ற டைட்டிலைப் பார்த்தவுடன் தமிழ் மொழியை காப்பாற்ற அமீர் களமிறங்கி நடித்துள்ளார் என்று தப்பு கணக்கு போட்டு விடக் கூடாது. தன் காதலி தமிழ்செல்விக்காக அரசியலில் நுழையும் சாதாரண இளைஞனின் வாழ்க்கைப்பற்றிய படத்தை அரசியல் நகைச்சுவை கலந்து எழுதி இயக்கியிருக்கிறார் ஆதம்பாவா. கடந்த காலத்தில் அரங்கேறிய அரசியல் நாடகங்களை கிண்டலடித்து, கொலை, பழிக்குபழி, கள்ளப்பணம் பதுக்கல் என்று திரைக்கதையமைத்து சிறப்பாக கொடுக்க முயற்சித்துள்ளார் தயாரிப்பாளர் இயக்குனர் ஆதம்பாவா.

மொத்தத்தில் மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்கி தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’ காதல் கற்றுக்கொடுக்கும் அரசியல் ஆர்ப்பாட்டம்.