இந்த க்ரைம் தப்பில்ல விமர்சனம் : இந்த க்ரைம் தப்பில்ல சமூக அக்கறையோடு சொல்ல வந்த கருத்தில் தெளிவில்லை | ரேட்டிங்: 2/5

0
281

இந்த க்ரைம் தப்பில்ல விமர்சனம் : இந்த க்ரைம் தப்பில்ல சமூக அக்கறையோடு சொல்ல வந்த கருத்தில் தெளிவில்லை | ரேட்டிங்: 2/5

மதுரியா புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் கிருஷ்ணசாமி தயாரித்திருக்கும் இந்த க்ரைம் தப்பில்ல திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தேவகுமார்.

இதில் ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், முத்துக்காளை, வெங்கட் ராவ், கிரேசி கோபால், காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவாளர் -ஏஎம்எம் கார்த்திகேயன், இசை-பரிமளவாசன், படத்தொகுப்பாளர்-ராஜேஷ்,கண்ணன், அஜிக்குமார், சண்டை-கணேஷ்,உடை-என்.முரளிதரன், மேக்கப்-போபன் வரப்புழா, மக்கள் தொடர்பு-ஏய்ம் சதீஷ்.

கிராமத்திலிருந்து வந்து செல்போன் கடையில் வேலை செய்யும் மேக்னாவை மூன்று இளைஞர்கள் துரத்தி துரத்தி காதலிக்கிறார்கள். இவர்கள் மூவரையும் காதலிப்பதாக பொய் சொல்லி ஏமாற்றி மேக்னா ஒரு இடத்திற்கு வரவழைக்கிறார். அதே சமயம் முன்னாள் ராணுவ வீரரான ஆடுகளம் நரேன் பாண்டி கமல் தலைமையில் சில இளைஞர்;களை ஒருங்கிணைத்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்களையும் கடத்தி வந்து அடித்து துன்புறுத்தி கொலை செய்கின்றார். இறுதியில் மேக்னா மூவரையும் வரவழைக்கும் காரணம் என்ன? மேக்னாவின் ஏமாற்று வேலையை கண்டுபிடித்தார்களா? அவர்கள் என்ன ஆனார்கள்? ஆடுகளம் நரேன் ஏன் இவ்வாறு செய்கிறார்? அதற்கான பின்னணி என்ன? மேக்னாவும், ஆடுகளம் நரேனும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், முத்துக்காளை, வெங்கட் ராவ், கிரேசி கோபால், காயத்ரி ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் -ஏஎம்எம் கார்த்திகேயன், இசை-பரிமளவாசன், படத்தொகுப்பாளர்-ராஜேஷ்,கண்ணன், அஜிக்குமார், சண்டை-கணேஷ் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் இன்னும் சுவாரஸ்யமாக செய்திருக்கலாம்.

பாலியல் வன்முறை செய்தவர்களை கண்டுபிடித்து தகுந்த தண்டனையை மக்களே கொடுக்கலாம் இந்த க்ரைம் தப்பில்லை என்பதைப் பற்றிய திரைக்கதையில் காட்சிகள் ஒன்றொடொன்று சம்பந்தம் இல்லாமல் தனித்தனியாக பயணிப்பதால் எதைச் சொல்ல வருகிறார்கள், என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை தெளிவாக கொடுக்க தவறி அனைத்தையும் நாடகத்தன்மையோடு இருபது வருடங்களுக்கு முன்பு வந்திருக்க வேண்டிய படம் போல் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் தேவகுமார்.

மொத்தத்தில் மதுரியா புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் கிருஷ்ணசாமி தயாரித்திருக்கும் இந்த க்ரைம் தப்பில்ல சமூக அக்கறையோடு சொல்ல வந்த கருத்தில் தெளிவில்லை.