இங்க நான் தான் கிங்கு விமர்சனம் : இங்க நான் தான் கிங்கு சிரிக்க வைக்க கடன் வாங்க வேண்டியதில்லை கலாட்டா காமெடிக்கு கியாரண்டி | ரேட்டிங்: 3/5

0
244

இங்க நான் தான் கிங்கு விமர்சனம் : இங்க நான் தான் கிங்கு சிரிக்க வைக்க கடன் வாங்க வேண்டியதில்லை கலாட்டா காமெடிக்கு கியாரண்டி | ரேட்டிங்: 3/5

கோபுரம் பிலிம்ஸ் ஜி.என். அன்புச்செழியன் வழங்க சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரித்த இங்க நான் தான் கிங்கு படத்தை இயக்கியிருக்கிறார் ஆனந்த் நாராயண்

இதில் சந்தானம் – வெற்றிவேல், ப்ரியாலயா – தேன்மொழி, தம்பி ராமையா – விஜயகுமார் (ஜமீன்), பாலா சரவணன் – பாலா (சின்னா ஜமீன்), விவேக் பிரசன்னா – அமல்ராஜ், முனிஷ்காந்த் – பாடி பல்ராம், சுவாமிநாதன் – சுவாமி, மாறன் – ரோலக்ஸ்,சேசு – வினோத் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு – ஓம் நாராயண்,இசையமைப்பாளர் – டி.இமான், எடிட்டர் – எம்.தியாகராஜன், எழுத்தாளர் – எழிச்சூர் அரவிந்தன், கலை இயக்குனர் – சக்தி வெங்கட்ராஜ்.எம், நடன இயக்குனர் – பாபா பாஸ்கர், கல்யாண், ஃபைட் மாஸ்டர் – மிராக்கிள் மைக்கேல், பாடலாசிரியர் – விக்னேஷ் சிவன், முத்தமிழ், தயாரிப்பு நிர்வாகி – எம்.செந்தில் குமார், தயாரிப்பு மேற்பார்வை – எம்.பச்சியப்பன், ஆடை வடிவமைப்பாளர் – ஆர்.கே. நவதேவி ராஜ்குமார், உடை – ஆர்.முருகானந்தம், சவுண்ட் மிக்ஸ் – டி.உதயகுமார், நாக் ஸ்டுடியோ, ஷேட் 69 ஸ்டுடியோஸ், மேக்கப் மேன் – அ.கோதண்டபாணி, ஸ்டில்ஸ் – எஸ்.முருகதாஸ், வண்ணக்கலைஞர் – பிரசாத் சோமசேகர்,வடிவமைப்புகள் – என்.டி. பிராதூல், கிரியேட்டிவ் எக்ஸிகியூட்டிவ் – ஜெயவேல்முருகன்,தலைமை தயாரிப்பு நிர்வாகி – அனில் குமார்.எம்.கே, பிஆர்ஒ – நிகில் முருகன்.

அனாதையான நைன்டீஸ் கிட் வெற்றி (சந்தானம்) சொந்த வீடு இல்லாததால் திருமணம் தள்ளிக் கொண்டே போக, 25 லட்சத்தை தன் நண்பன் அமல்ராஜிடம் (விவேக் பிரசன்னா) கடன் பெற்று வீடு வாங்குகிறார். வீடு வாங்கியும் கடன் இருப்பதால் திருமணம் தடைபட அமல்ராஜ் நடத்தும் திருமணத் தகவல் மையத்தில் சேர்ந்து கடனையும், திருமணத்தையும் ஒரு சேர முடிக்க நினைக்கிறார் வெற்றி. புரோக்கர் மனோபாலா பணக்கார ரத்னபுரி ஜமீன் விஜய்குமார் (தம்பி ராமையா) என்று சொல்லி அவரது மகள் தேன்மொழியை (பிரியாலயா) வெற்றிக்குத் திருமணம் செய்து வைக்கிறார். ஆனால், திருமணத்துக்குப் பிறகுதான் ஜமீன் குடும்பம் ஏற்கனவே கோடியில் கடனை வைத்து இருப்பதும் தெரிய வர, தேன்மொழியோடு ஜமீன் விஜய்குமாரும் அவரது மகன் பாலாவும் (பால சரவணன்) வெற்றியின் வீட்டில் ‘வீட்டோடு மாமனார், மச்சானாக’ சென்னைக்கு வந்து விடுகிறார்கள். அதே சமயம் சென்னையில் வெடிகுண்டு வைத்து நாசவேலைகளில் ஈடுபட ஒரு தீவிரவாத கும்பல் வர, அந்த கும்பலைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் அமல்ராஜ் போல் இருக்க, வெற்றியின் வீட்டில் எதிர்பாராமல் வந்து மாட்டிக்கொண்டு கரண்ட் ஷாக் அடித்து இறந்து விடுகிறார். இதனால் அதிர்ச்சியாகும் வெற்றியின் குடும்பம் என்ன செய்வதென்று தெரியாமல் (முனிஷ்காந்த்) பாடி பல்ராமிடம் அந்த உடலை ஒப்படைக்கின்றனர். அமல்ராஜ் தான் இறந்து விட்டதாக வெற்றி நினைக்க, உயிருடன் இருக்கும் அமல்ராஜை பார்த்தவுடன் உருவ ஒற்றுமை உண்மையை தெரிந்து கொள்கிறார். அந்த  தீவிரவாதி உடலை ஒப்படைத்தால் 50 லட்சம் கிடைக்கும் என்று போலீஸ் தரப்பில் அறிவிப்பு வர, வெற்றியும் அவரது குடும்பமும் சேர்ந்து பாடி பல்ராமை தொடர்பு கொள்கின்றனர். ஆனால் அந்த தீவிரவாதி உடல் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியாகும் வெற்றி, தன் நண்பர் அமல்ராஜை வைத்து அந்த தீவிரவாத கும்பலை பிடித்து தர வியூகம் அமைக்கிறார். இதில் பிரச்சனையிலிருந்து வெற்றி எப்படி மீள்கிறார்? தன் குடும்பத்தினர் உதவியுடன் எப்படி சதிவேலை செய்யும் கும்பலை பிடிக்கிறார்? 25 லட்சம் கடனை அவரால் அடைக்க முடிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

வெற்றிவேலாக சந்தானம் படம் முழுவதும் தன்னுடைய தோளில் சுமந்து கச்சிதமாக நடித்து கொடுத்துள்ளார். கடனை சொல்லி பெண் கேட்பது, திருமணம் நடந்தவுடன் ஏற்படும் கடன் சுமை நினைத்து புலம்புவது, மாமனார் குடும்பத்தை திட்டவும் முடியாமல் சமாளிக்கவும் முடியாமல் தவிப்பது, அவர்களால் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க முடியாமல் திணறுவது என்று ஒரு புறம் இருக்க, மறுபுறம் கொஞ்சம் நடனம், காதல், சண்டை, காமெடி, ஒன்லைன் பஞ்ச் வசனம் என்று சமபங்கு தன் முழு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மற்றவர்களுக்கும் படத்தில் காமெடி ஸ்கோர் செய்ய இடம் கொடுத்திருப்பதற்கு பாராட்டுக்கள்.

புதுமுகம் ப்ரியாலயா தேன்மொழியாக அறிமுகமாக இருந்தாலும் வசீகரத்தாலும், நடனத்தாலும் கவர்ந்து கொஞ்சம் நகைச்சுவையிலும் சிறப்பாக செய்துள்ளார்.

பெரிய ஜமீன் விஜயகுமாராக தம்பி ராமையா வெள்ளை மனம் படைத்தவர் எதைப்பற்றியும் கவலைப்படாத தனக்கு தோன்றியதை செய்தும், பிறருக்கு பிரச்சனை ஏற்பட்டாலும் கண்டு கொள்ளாமல் செய்யும் அளப்பறைகள் அவருடன் சேர்ந்து  பாலா சரவணன் சின்ன ஜமீனாக தொல்லையின் மறு உருவமாக வந்து காமெடியில் கவனிக்க வைக்கின்றனர்.

விவேக் பிரசன்னா இரட்டை வேடம் ஆனால் அதற்கு காரணம் சொல்லப்படவில்லை என்பதால் தப்பித்தோம். அதில் ஒன்று வில்லனாக இருந்தாலும் சிரித்துக் கொண்டே இறந்தவர் போல் நடித்து தன்னால் முடிந்தவரை நன்றாக செய்துள்ளார்.

முனிஷ்காந்த் – பாடி பல்ராம், சுவாமிநாதன் – சுவாமி, மாறன் – ரோலக்ஸ்,சேசு – வினோத் ஆகியோர் சில காட்சிகளில் வந்தாலும் ரசிக்கும்படி செய்வதில் தேர்ந்தவர்கள்.

ஓம் நாரயணன் ஒளிப்பதிவில் காட்சிக் கோணங்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. பாடல் காட்சிகளில் கவனிக்க வைத்து ரசிக்க வைத்துள்ளார்.

டி.இமான் இசையில் பாடல்கள், பின்னணி இசை அனைத்தும் மெருகுடன் கொடுத்து இன்றைய இளைஞர்களுக்கு பிடித்த மாதிரி இசையமைத்துள்ளார்.

எடிட்டர் – எம்.தியாகராஜன், கலை இயக்குனர் – சக்தி வெங்கட்ராஜ்.எம், நடன இயக்குனர் – பாபா பாஸ்கர், கல்யாண், ஃபைட் மாஸ்டர் – மிராக்கிள் மைக்கேல் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் விறுவறுப்பை கூட்டியுள்ளது.

எழிச்சூர் அரவிந்தன் கதை எழுத கடன் வாங்கக்கூடாது என்ற கான்சப்டை மையமாக வைத்து பல படங்களில் பார்த்த காட்சிகள் என்றாலும் அதில் கலகல காமெடி, குடும்ப செண்டிமென்ட், தீவிரவாதி மிரட்டல், துரத்தல் என்று திரைக்கதையமைத்து பொழுதுபோக்கிற்கு குறைவில்லாமல், தோய்வு ஏற்படாத வண்ணம் லாஜிக்கை மறந்து சிரிப்பு ஒன்றை மட்டுமே பிரதானமாக வைத்து இயக்கியிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் ஆனந்த் நாராயண்.

கோபுரம் பிலிம்ஸ் ஜி.என். அன்புச்செழியன் வழங்க சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரித்த இங்க நான் தான் கிங்கு சிரிக்க வைக்க கடன் வாங்க வேண்டியதில்லை கலாட்டா காமெடிக்கு கியாரண்டி.