​அலங்கு சினிமா விமர்சனம் : அலங்கு உயிரை காப்பாற்ற ஆபத்து நிறைந்த ஜீவனுள்ள பாச போராட்டம் | ரேட்டிங்: 3.5/5

0
362

அலங்கு சினிமா விமர்சனம் : அலங்கு உயிரை காப்பாற்ற ஆபத்து நிறைந்த ஜீவனுள்ள பாச போராட்டம் | ரேட்டிங்: 3.5/5

டி.ஜி.பிலிம் கம்பெனி, மேக்னஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சபரிஷ், சங்கமித்ரா சௌமியா அன்புமணி தயாரித்திருக்கும் அலங்கு படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.பி.சக்திவேல்.

இதில் தர்மன் – குணாநிதி, மலையன் – காளி வெங்கட், அகஸ்டின் – செம்பன் வினோத், பிலிப் – சரத் அப்பானி, பச்சை – சவுந்தர்ராஜா, தங்கம் – ஸ்ரீPரெகா, காவல் ஆய்வாளர் – சண்முகம் முத்துசாமி, சாக்கோ – ரெஜின் ரோஸ், கருப்பு – இதயக்குமார், சிலுவை – மாஸ்டர் அஜய்,ம​லர் – கொட்ரவை, ஏஞ்சல் – தீக்ஷா, முருகன் – மஞ்சுநாதன், கான்ஸ்டபிள் தர்மலிங்கம் – ஆவுடை  நாயகம், எஸ்.ஐ. ஜார்ஜ் – அப்புனி சசி, கிளி – தீபம் பிலிபோஸ், கந்தவேல் – அற்புதநாத், மல்லி – கங்காதரணி, கனகன் மாமா – சக்தி, வன அதிகாரி – குமார், உண்ணி – ஜோஃபி, தோழர் – ஆனந்த், பள்ளி முதல்வர் – கலை, கல்வி அதிகாரி – தசரதன், கஞ்சாகாரன் – கிரிஷ், மலையன் மனைவி – நிரோஷா, கருப்பு மனைவி – அர்ச்சனா, தர்மன் – தீதன், அதிகாரி – ரென்ஸி, செய்தி நிருபர் – ம.இலையமாறன், ஊர்காரன் 1 – சரவண புதியவன், ஊர்காரன் 2 – மதுரவீரன், ஊமையன் – தாமரை ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் : விநியோகஸ்தர் : சக்தி பிலிம் பேக்டரி பி.சக்திவேலன், இசை : அஜீஷ், ஒளிப்பதிவு : பாண்டிக்குமார், படத்தொகுப்பு : சான் லோக்கேஷ், கலை இயக்குனர் : ஆனந்த், சண்டை : தினேஷ் காசி, நிர்வாக தயாரிப்பாளர் : ஷங்கர் பாலாஜி, பிஆர்ஒ : இரா.குமரேசன்

தமிழ்நாடு – கேரள வனப்பகுதி எல்லையில் மாறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்ட இருவரைச் சுற்றிய கதை தான் ‘அலங்கு’.   மலைவாழ் இளைஞர் தர்மன்(குணாநிதி) பாலிடெக்னிக் படிக்கும் போது அங்கே நடக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளை தட்டிக் கேட்க, அதனால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். படிப்பிற்காக வீட்டை அடமானம் வைத்த தாய்க்கு உதவியாக வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார். தன் நண்பர்களுடன் செல்லும் போது புறக்கணிக்கப்பட்ட காளி என்ற நாயை காப்பாற்றி தத்தெடுத்து பாசத்துடன் வளர்த்து வருகிறார். இந்நிலையில் குடும்பச் சூழல் காரணமாக தாய்மாமன் மலையன் (காளி வெங்கட்) உதவியால் தன் நண்பர்களுடன் கேரளாவில் நகராட்சித் தலைவராக இருக்கும் அகஸ்டின் (செம்பன் வினோத்) ரப்பர் தோட்டத்தில் கூலி வேலைக்கு செல்ல காளியையும் தன்னுடன் அழைத்து செல்கிறார்.  ரப்பர் முதலாளி அகஸ்டியனுக்கு பல வருடங்களுக்கு பிறகு பிறந்த மகள் என்பதால் அவள் மேல் உயிரை வைத்திருக்கிறார்.ஒரு நாள் நாய் ஒன்று அகஸ்டியன் மகளை கடித்து விட,  நகரத்தில் உள்ள நாய்களை இரக்கமின்றி கொல்லுமாறு அகஸ்டின் தனது உதவியாளர் பிலிப்பிடம் (சரத் அப்பானி) கட்டளையிடுகிறார். இந்த சிக்கலில் மாட்டிக் கொள்ளும் காளியை காப்பாற்ற போராடும் தர்மனிடம் நடக்கும் சண்டையில் பிலிப்பின் கை தூண்டிக்கப்படுகிறது. இதனால் தர்மனையும் அவனது நண்பர்களையும் கொல்ல துரத்துகிறார்கள். இறுதியில் பலம் வாய்ந்த அக்ஸ்டியன் மற்றும் பிலிப்பிடமிருந்து தப்பிக்க முடிந்ததா? தடங்கல்களை தாண்டி தர்மன் தன் நண்பர்களையும், காளியையும் காப்பாற்றி தன் சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்றாரா? என்பதே மீதிக்கதை.

அறிமுக நடிகர் குணாநிதி, தாழ்த்தப்பட்ட மலைவாழ் பழங்குடியின தர்மனாக கல்லூரி படிப்பை விட்டுவிட்டு கேரளாவில் கூலி வேலைக்குச் செல்லும் காட்சிகளில் மிகவும் இயல்பாக செய்திருக்கிறார்.  வில்லனிடமிருந்து நாயை (காளி) காப்பாற்ற போராடும் இடங்களிலும், ஆபத்தான தருணங்களிலும், உணர்ச்சிகள் நிறைந்த ஆக்ரோஷமான நடிப்பு படத்திற்கு பலம்.

கண்களில் பொல்லாத வெறியுடன் மனிதர்களையோ நாய்களையோ வேட்டையாடி கொல்லும் வில்லனின் இரக்கமற்ற உதவியாளராக அப்பானி சரத் அற்புதம்.

செம்பன் வினோத் ஒரு பயங்கரமான கேங்ஸ்டராக மிரட்டினாலும் தன் மகளின் மேல் பாசத்தை பொழியும் தந்தையாக இருவெறு பரிமாணங்களில் ஜோலிக்கிறார்.

காளி வெங்கட் வழக்கம் போல் ஹீரோவின் அன்பான மாமாவாக ஸ்கோர் செய்கிறார், அதே நேரத்தில் தாயாக வரும் ஸ்ரீரேகா கண்களாலேயே மிரட்டி அசத்தியுள்ளார்.

இவர்களுடன் சண்முகம் முத்துசாமி, ரெஜின் ரோஸ், சவுந்தர்ராஜா, கொட்ரவை, தீக்ஷா, மஞ்சுநாதன், ஆவுடை  நாயகம், அப்புனி சசி, தீபம் பிலிபோஸ், அற்புதநாத், கங்காதரணி, சக்தி, குமார், ஜோஃபி, ஆனந்த், கலை, தசரதன், கிரிஷ், நிரோஷா, அர்ச்சனா, தீதன், ரென்ஸி, ம.இலையமாறன், சரவணபுதியவன், மதுரவீரன், தாமரை ஆகியோர் பக்கமேளங்கள்.

பாண்டிகுமாரின் கேமரா கேரளா மற்றும் தமிழகத்தின் பின்னணியில் உள்ள எழில் காட்சிகளையும், துரத்தும் ஆபத்துக்களையும் அருமையாக படம் பிடித்துள்ளது.

அஜேஷின் பின்னணி இசை படத்தின் டென்ஷனை இறுதிவரை தக்க வைக்க உதவும் மற்றொரு அம்சம்.

சான் லோகேஷின் வேகமான படத்தொகுப்பும், தினேஷ் காசியின் ஆக்‌ஷன் கோரியோகிராஃபியும் முக்கியமான காட்சிகளுக்கு கூடுதல் பலத்தை சேர்க்கின்றன.

ஒருவர் சுயநலத்திற்காக ஒரு உயிரை கொல்ல நினைக்க, மற்றொருவர் சமூக அக்கறையோடு ஒரு உயிரை காப்பாற்ற நினைக்க இருவரின் மோதலில் யார் ஜெயித்தனர் என்ற திரைக்கதையை வலுவான உணர்ச்சி கலந்த தொகுப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் எஸ்.பி.சக்திவேல். இதில் சமூக பிரச்சனைகள், இரு மாநிலத்தின் அரசியல்,  நாய் காளியின் பங்களிப்பு என்று வலுவில்லாத காட்சிகளை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் டி.ஜி.பிலிம் கம்பெனி, மேக்னஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சபரிஷ், சங்கமித்ரா சௌமியா அன்புமணி தயாரித்திருக்கும் அலங்கு உயிரை காப்பாற்ற ஆபத்து நிறைந்த ஜீவனுள்ள பாச போராட்டம்.