அரியவன் விமர்சனம்: அரியவன் காதலித்து ஏமாந்த பெண்களுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுத்து அசுர பலத்தை விதைப்பவன் | ரேட்டிங்: 3.5/5
எம்ஜிபி மாஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் அரியவன் படத்தை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் மித்ரன் ஆர் ஜவஹர்.
இதில் புதுமுகம் இஷான், ப்ரணாலி, டேனியல் பாலாஜி, சத்யன், சூப்பர் குட் சுப்ரமணி, ரமா, ரவி, வெங்கட்ராமன், கல்கி ராஜா, நிஷ்மா செங்கப்பா, ரமேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-கே.எஸ்.விஷ்ணு!ஸ்ரீ, எடிட்டிங்-எம்.தியாகராஜன், இசை- ஜேம்ஸ் வசந்தன், வேத்ஷங்கர், கிரி நந்த், பாடியவர்கள்- ஹரிஹரன், கே.எஸ்.சித்ரா, ஹரிசரண் சேஷாத்ரி, வந்தனா ஸ்ரீனிவாசன், தயாரிப்பு மேற்பார்வை-அறந்தை பாலா, தயாரிப்பு நிர்வாகி-ரமேஷ் சக்கரவர்த்தி, துணை தயாரிப்பு நிர்வாகி-அன்பு, கதை-மாரிசெல்வன், வசனம்-ஜெகஜீவன், மாரிசெல்வன், பாடல்கள்-மோகன்ராஜன், தமயந்தி, உடை-சிவா, மீனாட்சி ஸ்ரீதரன், ஒப்பனை-எம்.என்.பாலாஜி, சஞ்சு, விவேக், நிதின், கலை-பாலுமகேந்திரா, சண்டை-மகேஷ் மாத்யூ, நடனம்-அசோக் ராஜா, எம்.ஷெரிஃப், பிஆர்ஒ-சதீஷ் குமார்- சிவா (ஏய்ம்)
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கபடி வீரர் ஜீவா(இஷா);-அனாதை இல்லத்தில் வளர்ந்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் மித்ரா (ப்ரணாலி) இருவரும் காதலர்கள். மித்ரா அறையில் தங்கியிருக்கும் உயிர் தோழி ஜெஸ்ஸி தற்கொலைக்கு முயற்சி செய்ய, மித்ரா காப்பாற்றுகிறார். ஜெஸ்ஸி காதலனை நம்பி ஏமாந்த கதையையும், தன்னை வீடியோ எடுத்து காதலன் தனியாக சந்திக்க வருமாறு மிரட்டுவதாகவும் கூற, மித்ரா ஜெஸ்ஸியை அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு செல்கிறார். அங்கே ரவுடிகளுடன் ஜெஸ்ஸியின் காதலன் பப்பூ இருக்க, தட்டிக் கேட்கும் மித்ராவையும் சீண்டுகிறான். ஏற்கனவே மித்ரா காதலன் ஜீவாவை குறிப்பிட்ட இடத்திற்கு வர சொல்லியிருக்க, ரவுடிகளிடமிருந்து காப்பாற்ற நடக்கும் சண்டையில் ஜீவா பப்பூவின் கையை வெட்டி விட்டு பெண்கள் இருவரையும் காப்பாற்றி அழைத்துச் செல்லும் போது பப்பூவின் செல்போனையும் எடுத்துச் செல்கிறார். அந்த செல்போனை ஆராயும் போது பல பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து, அதன் மூலம் முக்கியமான அனைத்து வீடியோ ஆதரங்களை திரட்டி தன்னுடன் எடுத்துச் செல்கிறார் ஜீவா. இந்நிலையில் ரவுடி கும்பலின் தலைவன் துறைபாண்டி (டேனியல் பாலாஜி) தம்பி பப்பூவின் நிலையை பார்த்து ஆத்தரமடைகிறான். அதே நேரத்தில் ஆதாரங்களும் ஜீவாவிடம் இருப்பதை அறிந்து, பழி வாங்க திட்டம் போடுகிறான். பாதிக்கப்பட்ட பெண்களை தற்கொலைக்கு தூண்டியும், அவர்களை கொல்லவும் ஆட்களை துறைபாண்டி அனுப்புகிறான். அந்த பாதிக்கப்பட்ட பெண்களையெல்லாம் ஒன்று திரட்ட ஜீவா போட்ட திட்டம் என்ன? அவர்களை எப்படி காப்பாற்றினார்?துறைபாண்டிக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்கள் சேர்ந்து செய்த செயல் என்ன? என்பதே படத்தின் இறுதி முடிவு.
புதுமுக அறிமுக நாயகனாக இஷான் கபடி வீரரான வந்து காதல், ஆக்ஷன் களத்தில் தேர்ந்த நடிப்பை கொடுத்துள்ளார். படத்தில் தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் அளவான நடிப்பையும், பாடல் காட்சிகளில் ஆடி பாடி, ஆக்ஷன் காட்சிகளில் தன் உயரத்திற்கு ஏற்றவாறு காலை உபயோகித்து பெரும்பாலும் சண்டையிட்டு இறுதிக் காட்சியில் ஹீரோயிசத்தை காட்ட முயற்சிக்காமல், பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தண்டனையை அவர்களே கொடுக்குமாறு கதைக்களத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. வரும் காலங்களில் தனக்கேற்ற கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் முக்கிய நடிகராக வலம் வருவது உறுதி.
புதுமுகமாக காதலியாக ப்ரணாலி அழகாகவும், அழுத்தமாகவும் நடிப்பை வெளிப்படுத்தி படம் முழுவதும் வந்து முக்கிய அங்கமாக திகழ்கிறார்.
பெண்களை காதலித்து ஏமாற்றி வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பிரபலங்களுக்கு விருந்தாக்க இளைஞர்களை தயார் செய்து அனுப்பும் ரவடிகளின் தலைவன் துறைபாண்டியாக டேனியல் பாலாஜி மிரட்டலும், அதட்டலும், விரட்டல் வில்லனாக அதகளம் பண்ணுகிறார்.
இவர்களுடன் காமெடிக்கு சத்யன், சூப்பர் குட் சுப்ரமணி, ரமா, ரவி, வெங்கட்ராமன், கல்கி ராஜா, நிஷ்மா செங்கப்பா, ரமேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் துணை கதாபாத்திரங்களாக கதை ஒட்டத்திற்கு ப்ளஸ்.
ஜேம்ஸ் வசந்தன், வேத்ஷங்கர், கிரி நந்த் ஆகியோரின் இணைந்த இசையும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.
கே.எஸ்.விஷ்;ணு!ஸ்ரீ; ஒளிப்பதிவு திரைக்கதையில் முக்கிய பங்களிப்பு படத்திற்கு உயிர் நாடி. இறுதிக்காட்சியில் ஆக்ரோஷமாக தன் காட்சிக்கோணங்களால் வித்தியாசப்படுத்தி கொடுத்துள்ளார்.
எடிட்டர்-எம்.தியாகராஜன், கலை இயக்குனர் பாலுமகேந்திரா ஆகியோர் கச்சிதமாக செய்துள்ளனர்.
மாரிசெல்வனின் கதையும், ஜகஜீவன் வசனத்துடன் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் அரியவன் படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார். காதல் வலையில் பெண்களை சிக்க வைத்து, நயமாக பேசி இணங்க வைத்து, பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து, அந்த வீடியோவை வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி அவர்களை மீண்டும் வரவழைத்து பிரபலங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பலவந்தமாக விருந்தாக்கி பணம் பார்க்கும் கும்பலை எதிர்க்க முடியாமல் சிக்கி தவித்து மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் பாதிக்கப்பட்ட பெண்களின் முடிவை மாற்றி யோசிக்க வைத்து தன்னம்பிக்கை கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார் மித்ரன் ஆர் ஜவஹர். இதில் தெரியாமல் சிக்கிக் கொள்ளும் பெண்களின் நிலை பரிதாபமானது, அதிலிருந்து மீண்டு வர பயத்தை விட்டு விட்டு, பலத்துடன் துணிந்து எதிர்த்து நின்று போராடி தைரியத்துடன் எதிர்கொண்டு அவர்களை வீழ்த்த வேண்டும் என்பதை ஆணித்தரமாகவும், அழுத்தமாகவும் இறுதிக் காட்சியில் கொடுத்து அசத்தியுள்ளார் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர்.
மொத்தத்தில் எம்ஜிபி மாஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் அரியவன் காதலித்து ஏமாந்த பெண்களுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுத்து அசுர பலத்தை விதைப்பவன்.