அங்காரகன் திரைப்பட விமர்சனம் : ‘அங்காரகன்’ குழப்பமானவன் | ரேட்டிங்: 2/5
ஜூலியன் மற்றும் ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரித்திருக்கும் ‘அங்காரகன்’படத்தை இயக்கியிருக்கிறார் மோகன் டச்சு.
இதில் சத்யராஜ், ஸ்ரீPபதி, நியா, மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப குழுவினர்:-இசை கு.கார்த்திக், ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் : மோகன் டச்சு, திரைக்கதை (கிரியேடிவ்) ஸ்ரீPபதி, ஒளிப்பதிவாளர் (2வது) – மாநில அரசு விருது பெற்ற ஆர்.கலைவாணன்,வசனம் – கருந்தேள் நாகராஜ், படத்தொகுப்பு – மதுரை வளர் பாண்டியன், சண்டை காட்சிகள் – ஜாக்கி ஜாக்சன், நடனம் – வாசு நவநீதன், கலை இயக்குனர் – கே மாதவன், நிர்வாக தயாரிப்பாளர் – கிறிஸ்டி,தயாரிப்பு வடிவமைப்பு – விவேக், மக்கள் தொடர்பு – ஏ.ஜான்
ஆரவாரமில்லாத அமைதியான குறிஞ்சி வன ரிசார்ட்டில் தங்களின் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டு தஞ்சம் அடைய நினைக்கும் சுற்றுலாப் பயணிகளின் குழுவுடன் கதை தொடங்குகிறது. குறிஞ்சி மலை எஸ்டேட்டை நிர்வகிக்கும் குடும்பத்தினரிடம் மேனேஜராக பணி செய்கிறார் சிவா (மகேஷ்). அங்கு தங்க வரும் சுற்றுலா பயணிகளின் நண்பர்களில் இருவர் மர்மமான முறையில் காணாமல் போனதால் அவர்களின் அமைதி சீக்கிரமே சிதைகிறது. அவர்களை இடைவிடாமல் தேடிய பின்னர், சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்கின்றனர். போலீஸ் விசாரணையில் ரிசார்ட்டில் இருந்து ஒருவர் காணாமல் போனது இது முதல் முறையல்ல என்பது தெரியவருகிறது. உண்மையில், அவர்கள் அந்த வளாகத்தில் காணாமல் போன மற்றொரு நபரின் உடலைக் கண்டுபிடிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் தங்களைச் சுற்றி விசித்திரமான மற்றும் அமைதியற்ற செயல்களை அனுபவிக்கத் தொடங்க அனைவருமே பயப்படுகின்றனர். அவர்கள் அந்த ரிச்சர்ட்டை விட்டு வெளியேற விரும்ப, ஆனால் விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி அதிவீரபாண்டியன் (சத்யராஜ்)அவர்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். பேய்கள் நிறைந்த ரிசார்ட்டில் ஒரு இரவை பயத்துடன் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அந்த குழுவிற்கு ஏற்படுகிறது. பன்னிரண்டு மணி நேர விசாரணையில் குறிஞ்சி மலை எஸ்டேட்டின் முதல் உரிமையாளரான மறைந்த ரெனிடா மார்ட்டின் ராணியுடன் தொடர்புடைய அமானுஷ்ய நடவடிக்கைகளின் பல மறைக்கப்பட்ட ரகசியங்கள் வெளிப்படுகிறது. இந்த ஆமானுஷ்யங்களிடமிருந்து பயணிகள் தப்பித்தார்களா? காணாமல் போனவர்களை உயிரோடு கண்டுபிடித்தார்களா? மறைந்த ரெனிடா மார்ட்டின் ராணியின் கதை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
கம்பீரமான போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். ஸ்ரீPபதி, நியா, மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் அனைவருமே முடிந்தவரை சிறப்பாக செய்ய முயற்சித்துள்ளனர்.
இசை கார்த்திக்,ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் மோகன் டச்சு, திரைக்கதை ஸ்ரீPபதி, ஒளிப்பதிவாளர் ஆர்.கலைவாணன், வசனம் கருந்தேள் நாகராஜ், படத்தொகுப்பு மதுரை வளர் பாண்டியன் ஆகியோரின் கடின உழைப்பு படத்தின் வேகத்தடை காரணமாக தடுமாறுகிறது.
பிரியாடிக், இன்ஸ்வேஸ்டிகேடிவ் த்ரில்லரில் கொஞ்சம் பயம், சஸ்பென்ஸ், திகில், த்ரில்லாக கொடுக்க நினைத்து அனைத்தும் ஒரு சேர பல கதைகள் பயணிக்கும் போது குழப்பத்துடன் பதட்டத்துடன் எப்படி முடிப்பது என்று தடுமாறியிருக்கிறார் இயக்குனர் மோகன் டச்சு.
மொத்தத்தில் ஜூலியன் மற்றும் ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரித்திருக்கும் ‘அங்காரகன்’ குழப்பமானவன்.