ஃபேமலி படம் சினிமா விமர்சனம் : ஃபேமிலி படம் – அனைவரும் பாசக்கார குடும்பத்துடன் பார்க்கலாம் ரசிக்கலாம் | ரேட்டிங்: 3/5
யு.கே. கிரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரித்திருக்கும் ஃபேமலி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் செல்வகுமார் திருமாறன்
இதில் தமிழனாக உதய் கார்த்திக், சரத் குமாராக விவேக் பிரசன்னா, யமுனாவாக சுபிக்ஷா காயாரோஹணம், விஜியாக ஸ்ரீPஜா ரவி, பார்த்திபன் குமார் பார்த்தியாக, ஏழுமலையாக மோகனசுந்தரம், டி.கே.சத்யனாக அரவிந்த் ஜானகிராமன், பிரேமாவாக ஆர்ஜே பிரியங்கா, தவகுமாராக சந்தோஷ் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவு – மெய்யேந்திரன், இசை – அன்வீ, எடிட்டர்- சுதர்சன் பின்னணி இசை – அஜேஷ்ஆர்ட் – கேபி நந்து ஸ்டண்ட் – சுகன் ஆடை வடிவமைப்பாளர் – போர்ச்செழியன் பாடலாசிரியர் – அஹமத ஷ்யாம், அன்வீ, பிஆர்ஒ-நிகில் முருகன்.
திருவல்லிக்கேணியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தை மையப்படுத்தி அவர்களின் வாழ்க்கை, லட்சியங்களை அடைய எடுக்கும் ஒற்றுமையான முயற்சிகள் பற்றிய கதைக்களம். இயக்குனராக பெரு முயற்சி எடுக்கும் தமிழ் (உதய்; கார்த்திக்) இவரின் லட்சியத்திற்காக முழு குடும்பமும் ஒத்துழைப்பு தருகின்றனர். இவருக்கு இரண்டு அண்ணன்கள். திருமணமான அண்ணன் குமார் (விவேக் பிரசன்னா) ஒரு வழக்கறிஞர், இரண்டாவது அண்ணன் பார்த்தி (பார்த்திபன் குமார்) இரவு நேர ஐடி கம்பெனியில் வேலை. தமிழின் தாத்தா ஏழுமலை (மோகனசுந்தரம்), அவரது அப்பா தவகுமார் (சந்தோஷ்), அம்மா விஜி (ஸ்ரீஜா ரவி) ஆகியோர் அடங்கிய மகிழ்ச்சியான குடும்பம். தயாரிப்பாளர் ஒருவர் தமிழின் கதை பிடித்து போக படம் தயாரிக்க முன் வருகிறார். தமிழ் இயக்குனர் கனவு நனவனாதை நினைத்து சந்தோஷப்படும் போது, தயாரிப்பாளர் தன் தம்பியை வைத்து ஹீரோவாக படம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்த, வேறு வழியின்றி சம்மதிக்கிறார். சில நாட்கள் கழித்து கதையை தானே இயக்குவதாக தயாரிப்பாளர் கூற அதிர்ச்சியாகும் தமிழ் வேறுவழியின்றி தன் கதையை கொடுத்துவிட்டு வெளியேறுகிறார். இதனை கேள்விப்படும் குடும்பத்தினர் மிகுந்த கோபமடைந்தாலும் தங்கள் இயலாமையை நினைத்து வருந்துகின்றனர். தமிழ் தன் வாழ்க்கை பறி போய் விட்டதாக வறுத்தப்பட, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தமிழுக்காக படம் தயாரிக்க முன் வருகின்றனர். குடும்பத்தினர் எவ்வாறு படம் தயாரிக்க பணத்தை ஏற்பாடு செய்கிறார்கள்? தமிழ் இயக்குனரானாரா? வாழ்க்கையில் ஜெயித்தாரா? காதல் கைகூடியதா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
தமிழாக உதய் கார்த்திக் இயக்குனர் கனவு, அதை அடைய எடுக்கும் முயற்சிகள், சந்திக்கும் அவமானங்கள், ஏமாற்றப்படும் போது மனஉளைச்சலில் தவிப்பது, காதலியை மதுரையில் சந்திப்பது,தாயிடம் கோபித்து கொண்டு செல்வது, பின்னர் சமாதானமடைந்து ஒன்று சேர்ந்து படத்தை எடுப்பது என்று அனுபவ நடிப்பை உணர்ச்சிகள் ததும்ப செய்துள்ளார்.
சரத் குமாராக விவேக் பிரசன்னா வழக்கறிஞராக தன் தம்பிக்காக எதையும் செய்ய துணியும் பாசக்கார அண்ணனாக, படத்தை எடுக்க முடிவு செய்யும் போது பணத்திற்காக அலைவது, படத்தின் தயாரிப்பாளர் என்று அலம்பல் பண்ணுவது என்று படத்தில் முழு ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.
காதலி யமுனாவாக சுபிக்ஷா காயாரோஹணம் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார். தாய் விஜியாக ஸ்ரீPஜா ரவி பாசக்கார அம்மாவாக, பிள்ளைகளை கண்டிப்பது, அன்பை பொழிவது, அவர்களின் லட்சியங்களுக்கு உறுதுணையாக இருப்பது குடும்பத்தின் ஆணிவேறாக படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்.
இரண்டாவது அண்ணன்; பார்த்தியாக பார்த்திபன் குமார் பெண் பார்க்க போகும் போது கேட்கும் கேள்வி, மாமாவின் இழி பேச்சுக்கு பதிலடி கொடுப்பதும், தம்பிக்காக ரவுடிகளை உதைப்பது, படம் எடுக்க உதவி செய்வது என்று தேர்ந்த நடிகராக வலம் வருகிறார்.
நறுக் வசனத்தில் தாத்தா ஏழுமலையாக மோகனசுந்தரம், டி.கே.சத்யனாக அரவிந்த் ஜானகிராமன், பிரேமாவாக ஆர்ஜே பிரியங்கா, தவகுமாராக சந்தோஷ் என்று அனைவரும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – மெய்யேந்திரன், இசை – அன்வீ, எடிட்டர்- சுதர்சன், பின்னணி இசை – அஜேஷ், ஆர்ட் – கேபி நந்து, ஸ்டண்ட் – சுகன், ஆடை வடிவமைப்பாளர் – போர்ச்செழியன், பாடலாசிரியர் – அஹமத ஷ்யாம், அன்வீ ஆகிய தொழில்நுட்ப கலைஞர்;கள் தங்கள் பங்களிப்பை கச்சிதமாக கொடுத்து படத்திற்கு உறுதுணையாக இருக்கின்றனர்.
தயாரிப்பாளர் கேட்கும் கேள்வி தான் படத்தின் மொத்த கதையையும் தாங்கி பிடிக்கிறது. அறிமுகமில்லாத நபரை நம்பி பணம் நான் போடும் போது தம்பியை நம்பி பணம் போடுவீர்களா என்று கேள்வி கேட்கும் அண்ணனை பார்த்து தயாரிப்பாளர் கேட்க, ஏன் அதை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று அண்ணன் நினைக்க உருவானது தான் ஃபேமிலி படத்தின் கதை. தம்பியின் லட்சிய கனவை நிறைவேற்ற மொத்த குடும்பமும் ஒத்துழைப்பு நல்கி, பணம் ஏற்பாடு செய்து எடுக்கும் படம் வெள்ளித்திரையில் வெற்றிகரமாக ஒடியதா? என்ற கேள்விக்கு விடை தான் படத்தின் திரைக்கதை.குடும்பம் ஆதரவு தராமல் தன்னந்தனியாக இயக்குனராக படும் கஷ்டங்களை பல படங்களில் பார்த்திருக்கிறோம், ஆனால் இந்தப் படத்தில் மொத்த குடும்பமும் பாசத்தால் இணைந்து ஆதரவு தந்து இயக்குனர் கனவை நினைவாக்க எடுக்கும் முயற்சியை பாசிடிவ்வான களத்துடன் ரசிக்கும் வண்ணம் அருமையான படைப்பாக கொடுத்து கவனம் ஈர்க்கும் வசனங்களுடன் அசத்தியுள்ளார் இயக்குனர் செல்வகுமார் திருமாறன்.
மொத்தத்தில் யு.கே. கிரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரித்திருக்கும் ஃபேமிலி படம் – அனைவரும் பாசக்கார குடும்பத்துடன் பார்க்கலாம் ரசிக்கலாம்.