‘13’ ‘ஹாரர் திரைப்படத்தில் நடிக்க தயங்கினேன்’ – ஜி.வி.பிரகாஷ் ஓப்பன் டாக்

0
207

‘13’ ‘ஹாரர் திரைப்படத்தில் நடிக்க தயங்கினேன்’ – ஜி.வி.பிரகாஷ் ஓப்பன் டாக்

‘ஹாரர் திரைப்படங்களில் நடிப்பதில்லை, குறிப்பாக ஹாரர் காமெடி திரைப் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று கூறினேன், ஆனால் ’13’ பட கதையை கேட்டப் பிறகு உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்து நடித்தேன்’ என்று ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து ‘செஃல்பி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அவர்கள் மீண்டும் இணைந்து மற்றொரு படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ‘13’ என்று டைட்டில் வைத்துள்ளனர். ஜி.வி.பிரகாஷூடன் ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா, ஆதித்யா கதிர் உட்பட பலர் நடிக்கின்றனர்.

மெட்ராஸ் ஸ்டூடியோஸ் எஸ்.நந்தகோபால், அன்ஷு பிரபாகர் பிலிம்ஸுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தை கே.விவேக் இயக்குகிறார். சித்து இசையமைக்கிறார். மூவேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். திகில் படமான இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது.

‘13’ திரைப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர் விவேக், தயாரிப்பாளர் நந்தகோபால் மற்றும் திரைப்படத்தின் நாயகிகள் கலந்து கொண்டனர். ‘13’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் ஹாரர் கிரைம் திரில்லர் வகையில் எடுக்கப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

அதேபோல் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசும் பொழுது, தன்னுடைய முதல் படமான ‘டார்லிங்’ ஹாரர் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. அதற்குப்பிறகு ஹாரர் திரைப்படங்களை நடிப்பதை தவிர்த்து விட்டேன். தற்போதைய சூழலில் வாரம் ஒரு ஹாரர் திரைப்படம் வெளியாகிறது. அவை அனைத்தும் கிளிஷேவ் வகையில் உள்ளன. எனவே தயாரிப்பாளர் கதை கேட்க வலியுறுத்தியபோது, ஹாரர் திரைப்படங்களில் நடிப்பதில்லை, குறிப்பாக ஹாரர் காமெடி திரைப் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று கூறினேன் என தெரிவித்தார்.

ஆனால் இந்தக் கதையை கேட்டப் பிறகு உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்து நடித்தேன். அந்த அளவுக்கு கதை சுவாரஸ்யமாக இருந்தது என தெரிவித்தார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. ஜி.வி. பிரகாஷ் கடைசியாக ‘ஐங்கரன்’ என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.