ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் ‘ப்ரதர்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
இதில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாகவும், நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு விவேகானந்த் சந்தோஷம்.
ஜெயம் ரவி ‘பிரதர்’ படம் குறித்தும் தன் குடும்பத்தில் தற்பொழுது நிகழும் சூழல் பற்றியும் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
“நான் ஜெயம் படம் மூலம் சினிமா துறையில் அறிமுகமாகி இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் பல்வேறு வேடங்களில் பல படங்களில் நடித்திருந்தாலும் ‘ஜெயம்’, ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ ஆகிய குடும்ப கதையம்சம் உள்ள திரைப்படங்கள் எனது திரையுலக பயணத்தில் மிகவும் ரசிக்கப்பட்ட கொண்டாடப்பட்ட படங்கள்.
இத்தகைய கதையம்சம் கொண்டு குடும்ப செண்டிமெண்ட் கலந்த பொழுதுபோக்கு படத்தில் நடித்து வெகு நாளாகி விட்டதை உணர்ந்து எம்.ராஜேஷ் என்னிடம் அக்கா, தம்பி கதையை சொன்னவுடன் உடனே ஒப்புக்கொண்டேன். ஆனால் ஒரு மாற்றத்தை மற்றும் முன் வைத்தேன், முழுவதும் காமெடியாக எடுத்துச் செல்லாமல் அனைத்து அம்சங்களும் சமமாக இருக்குமாறு திரைக்கதை அமைக்கச் சொன்னேன். நான் நினைத்தபடியே ‘பிரதர்’ படத்தை இயக்குனர் எம்.ராஜேஷ் கொடுத்திருப்பதில் மகிழ்ச்சி. இதில் பூமிகா அக்காவாகவும், நான் பாசமுள்ள தம்பியாக நடிக்கிறேன். நட்டி மாமாவாகவும், நகைச்சுவைக்கு விடிவி கணேஷ் நடிக்கின்றனர். ஊட்டி, சென்னையில் நடக்கும் கதைக்களத்தில் காமெடி, ஆக்ஷன், செண்டிமென்டுடன் அனைவரும் விரும்பும் வண்ணம் ஜனரஞ்சகமாக வந்துள்ளது. இந்த படத்தில் பாடல்களில் கஷ்டப்பட்டு நன்றாக நடனம் ஆடியிருக்கிறேன் மனதை உறுத்தாத ஆக்ஷனும் உண்டு அனைவரும் ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
வரலாற்று சம்பந்தப்பட்ட படங்களில் எனக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் அமைந்தால் நடிப்பேன். என் ரசிகர்கள் நான் வில்லனாக நடிப்பதை விரும்புவதில்லை, தனி ஒருவனில் அமைந்த வில்லன் கேரக்டர் போல் ஸ்கோப் உள்ள படங்கள் இருந்தால் நடிக்க முயற்சி செய்வேன். எனக்கு இயக்குனர் சிகரம் பாலசந்தர், இயக்குனர் இமயம் பாரதிராஜா படங்கள் பிடிக்கும். இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் நடிக்க ஆசை. இந்த வருடம் இறுதிக்குள் நான் நடித்த புதிய இரண்டு படங்கள் வெளி வர தயாராக இருக்கிறது” என்றார்.