டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ‘ஹார்ட் பீட் – ரிதம் ஆஃப் லைஃப்’ சீரிஸை அறிவித்துள்ளது!

0
107

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ‘ஹார்ட் பீட் – ரிதம் ஆஃப் லைஃப்’ சீரிஸை அறிவித்துள்ளது!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸுக்கு ஹார்ட் பீட் என்று பெயரிட்டுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியீடாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட, ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்களான “மத்தகம் மற்றும் லேபிள்” சீரிஸ்கள், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்தது. இந்நிலையில், தற்போதைய புதிய சீரிஸான ‘ஹார்ட் பீட்’ சீரிஸுக்கு, ரசிகர்களிடம் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த சீரிஸின் டைட்டிலை ஒரு அழகான சிறிய வீடியோவில், டைட்டில் தொடரின் பெயர் மற்றும் அதன் கவர்ச்சியான, ‘ரிதம் ஆஃப் லைஃப்’ எனும் டேக் லைனுடன் வெளியிட்டது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த சீரிஸ் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.