GV.பிரகாஷ் உடன் இணைந்து சூப்பர்ஸ்டார் சூர்யா அமேசான் ஒரிஜினல் திரைப்படம் புத்தம் புது காலையின்இசை வீடியோவை வெளியிட்டுள்ளார்

0
336

GV.பிரகாஷ் உடன் இணைந்து சூப்பர்ஸ்டார் சூர்யா அமேசான் ஒரிஜினல் திரைப்படம் புத்தம் புது காலையின்இசை வீடியோவை வெளியிட்டுள்ளார்

இந்த மியூசிக் வீடியோவெளியீட்டைத் தொடர்ந்து, அமேசான் ஒரிஜினல் திரைப்படமான புத்தம் புது காலை-ன்5-பாடல்கள் கொண்ட இசை ஆல்பம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது

புத்தம் புது காலை-ன் டை்டில் சவுண்ட்டிராக்கிற்கு, பிரபல இசை அமைப்பாளர் GV. பிரகாஷ் இசையமைத்துள்ளார் மற்றும் இது காதல், புதிய தொடக்கங்கள் மற்றும் இரண்டாவது வாய்ப்புகள் ஆகிய கருத்தாக்கங்களை மையமாகக் கொண்டுள்ளது 

புத்தம் புது காலை அக்டோபர் 16 ஆம் தேதி 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் ப்ரீமியர் செய்யப்படவுள்ளது 

சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, அமேஸான் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேஸான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை கேட்டல், இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகுவசதி, பிரைம் ரீடிங் வழியாக அன்லிமிடெட் ரீடிங் மற்றும் பிரைம் கேமிங் வழியாக மொபைல் கேமிங் உள்ளடக்கம் போன்ற அற்புதமான மதிப்புமிக்க வசதிகளை பிரதி மாதம் வெறும் ரூ.129கட்டணத்தில் பிரைம் வழங்குகிறது. 

மும்பை, இந்தியா, அக்டோபர் 8, 2020– அமேசான் பிரைம் வீடியோ இன்று வரவிருக்கும் அமேசான் ஒரிஜினல் தமிழ் திரைப்படமான புத்தம் புது காலை-ன், மனதை வருடும் இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளது. இது, ஐந்து குறும்படங்களின் தொகுப்பாகும். ஆல்பம் வெளியீட்டைச் சிறப்பிக்கும் வகையில், சூப்பர் ஸ்டார் சூர்யா, டைட்டில் பாடலின் இசை வீடியோவை வெளியிட்டார். இதற்கு பிரபலமாக, விருதுகள் பல வென்ற இசையமைப்பாளர் GV. பிரகாஷ் அவர்கள் இசையமைத்துள்ளார்.இப்புதிய, இனிமையான ஆல்பத்தில் பல்வேறு மனநிலைகளுக்கான 5 அதிசிறந்த பாடல்கள் அடங்கியுள்ளன. அவை, புதிய தொடக்கங்கள், காதல், இரண்டாவது வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கை ஒளிக்கீற்று ஆகிய கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

புத்தம் புது காலையில் 5 தனிப்பட்ட கதைகள் கூறப்பட்டாலும், தலைப்பு பாடல் அனைத்து தனித்துவமான கதைகளுக்கும் ஏற்றவாறும் மற்றும் ஒட்டுமொத்த கருத்தாக்கமாக புதிய தொடக்கங்களை மையமாகவும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் அதன் சொந்த, தனித்துவமான இசை பாணி இருந்தாலும், படம் வழங்க முயற்சிக்கும் ஒட்டுமொத்த செய்தியை தலைப்பு பாடல் முன்னிலைப்படுத்தும்.

மாறுபட்ட கதைக்களம் மற்றும் நடையுடன், சுஹாசினி மணி ரத்னம் (Coffee, Anyone?), சுதா கொங்கரா (Ilamai Idho Idho), கௌதம் வாசுதேவ் மேனன் (Avarum Naanum/Avalum Naanum), ராஜீவ் மேனன் (Reunion)மற்றும் கார்த்திக் சுப்புராஜ் (Miracle)உள்ளிட்ட தமிழ் சினிமா துறையைச் சேர்ந்த 5 பிரபல இயக்குனர்களின் ஒருங்கிணைந்த படைப்பே இந்த ஆன்தாலஜி திரைப்படமாகும். ஐந்து மாறுபட்ட கதைகளாக இருப்பினும், புதிய தொடக்கங்கள் என்னும் ஒரு பொதுவான கருத்தாக்கத்தை அவை அனைத்தும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

இசை வீடியோ / இசை ஆல்பத்தை இங்கே காணலாம்:

ஒலிப்பதிவு விவரங்கள்:

பாடல் பெயர் இசையமைப்பாளர் பாடலாசிரியர் பாடகர் பிற பங்களிப்புகள்
புத்தம் புது காலை – டைட்டில் டிராக் GV.பிரகாஷ் குமார் கபீர் வாசுகி GV.பிரகாஷ் குமார் புரோகிராமர் – S. கணேசன், சவுண்ட் இன்ஜீனியர் – ஜெஹோவாசன் அழகர்
கண்ணா தூது போ டா கோவிந்த் வசந்தா  கார்க்கி பாம்பே ஜெயஸ்ரீ ஃபுளுட் – விஷ்ணு, பெர்குஷன்- ஷ்ருதிராஜ்
மன்மதன் நான் தானா GV.பிரகாஷ் குமார் கபீர் வாசுகி SPB சரண் புரோகிராமர் – S. கணேசன், சவுண்ட் இன்ஜீனியர் – ஜெஹோவாசன் அழகர்
ஓஹோ எந்தன் பேபி GV.பிரகாஷ் குமார் கபீர் வாசுகி SPB சரண், GV பிரகாஷ் குமார், பவானி ஸ்ரீ புரோகிராமர் – S. கணேசன், சவுண்ட் இன்ஜீனியர் – ஜெஹோவாசன் அழகர்
குல்ஃபி குச்சி GV.பிரகாஷ் குமார் கபீர் வாசுகி GV.பிரகாஷ் குமார், பவானி ஸ்ரீ புரோகிராமர் – S. கணேசன், சவுண்ட் இன்ஜீனியர் – ஜெஹோவாசன் அழகர்
கண்ணம் அதில் வண்ணம் GV.பிரகாஷ் குமார் கபீர் வாசுகி GV.பிரகாஷ் குமார், பவானி ஸ்ரீ புரோகிராமர் – S. கணேசன், சவுண்ட் இன்ஜீனியர் – ஜெஹோவாசன் அழகர்

இந்தியாவில் மற்றும் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் அமேஸான் பிரைம் வீடியோவில் Putham Pudhu Kaalai  , அக்டோபர் 16, 2020 முதல்பிரத்தியேகமாகக் கண்டு களிக்கலாம்.

Putham Pudhu Kaalaiஆயிரக்கணக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில், இந்தியத் திரைப்படங்களான V, CU Soon, Gulabo Sitabo, Shakuntala Devi, Ponmagal Vandhal, French Biriyani, Law, Sufiyum Sujatayum, மற்றும் Penguin இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Bandish Bandits, Breathe: Into The Shadows, Paatal Lok,The Forgotten Army – Azaadi Ke Liye, Four More Shots Please S1மற்றும் 2, The Family Man, Mirzapur, Inside Edge S1, மற்றும் S2, மற்றும் Made In Heaven ஆகியவைகளும்உலகளாவிய அளவிலான பாராட்டுதல்களைப் பெற்றுள்ள உலகளாவிய அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag மற்றும் The Marvelous Mrs. Maisel உட்பட பல்வேறு மிகச்சிறந்த உள்ளடக்கங்கள் பிரைம் உறுப்பினர்தன்மையின் ஒரு பகுதியாகக் கிடைக்கப்பெறுகிறது. பிரைம் வீடியோவில், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் வங்காளம் ஆகியவைகள் உட்பட, பல்வேறு மொழிகளில் பல்வேறு உள்ளடக்கங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

Putham Pudhu Kaalai–, பிரைம் உறுப்பினர்கள் தற்போதுஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி ஏர்டெல், வோடோஃபோன் போன்றவற்றில், எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பார்க்கலாம். பிரைம் உறுப்பினர்கள் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் உள்ள பிரைம் வீடியோ ஆப்பில், பிரைம் உறுப்பினர்கள் அத்தியாயங்களை பதிவிறக்கம் செய்து, எப்போது வேண்டுமானாலும் ஆஃப்லைனில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி பார்த்து மகிழலாம்.

இந்தியாவில் தற்போது எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பினர்களுக்கு, ஆண்டிற்கு வெறும் ₹999 அல்லது மாதம் ₹129 கட்டணத்தில் கிடைக்கப்பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/primeபார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30-நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்.

Also Read:

SUPERSTAR SURIYA ALONG WITH GV PRAKASHUNVEILS THE MUSIC VIDEO OF AMAZON ORIGINAL MOVIEPUTHAM PUDHAI KAALAI