ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஷ் வெளியிடும் திரில்லர் படம் ‘எக்ஸிட்’!
‘பசங்க’ திரைப்படம் மூலம் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சற்றே வளர்ந்து :கோலி சோடா’ வில் பேசப்பட்டு ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து அங்கீகாரம் பெற்றவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘எக்ஸிட்’ இது ஒரு நாள் இரவில் நடக்கும் கதை.
இது ஒரு சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கிறது. எக்ஸிட் என்றால் வெளியேறும் வழி. உயிரைப் பலி கேட்கும் ஓர் ஆபத்தான சூழலில் இருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, கதாநாயகன் எப்படி வெளியேறுகிறான் என்பதுதான் கதை.
இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷாஹீன் இயக்கி உள்ளார். ப்ளூம் இண்டர்நேஷனல் சார்பில் வேணுகோபாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.
கதாநாயகன் ஸ்ரீராம், வில்லனாக விஷாக் நாயர், ரனிஷா ரஹிமான்,ஹரிஷ் பெராடி,வைஷாக் விஜயன், ஆஸ்லின் ஜோசப், சூரஜ் பாப்ஸ், ஸ்ரீரியாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்திற்குத் திரைக்கதை – அனீஷ் ஜனார்தன் – ஷாஹீன்,கதை – அனீஷ் ஜனார்தன்,
ஒளிப்பதிவு – ரியாஸ் நிஜாமுதீன், படத்தொகுப்பு – நிஷாத் யூசுப், இசை – தனுஷ் ஹரிகுமார், விமல்ஜித் விஜயன், ஒலி வடிவமைப்பு – ரெங்கநாத் ரவி,கலை – எம். கோயா, ஆடை வடிவமைப்பு – சரண்யா ஜீபு என சினிமாவின் மீது தாகம் கொண்ட தொழில் நுட்பக் கலைஞர்களின் கூட்டணி இணைந்து பணியாற்றியுள்ளது.
பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாகும் எக்ஸிட் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஷ் கைப்பற்றியுள்ளார்.