Cinematographer Vijay Milton eகன்னட திரையுலகில் நுழையும் இயக்குநர் விஜய் மில்டன்nters Kannada cinema

0
2307

கன்னட திரையுலகில் நுழையும் இயக்குநர் விஜய் மில்டன்

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் ஜோடியாக அஞ்சலி. இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் படம் இன்று பூஜை.

‘கோலி சோடா’ மூலம் தமிழ் சினிமாவில் டைரக்டராக, தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அந்த அடையாளத்தோடு கன்னட திரையுலகில் நுழைகிறார். கன்னடத்தில் வெற்றி இணையான சிவராஜ் குமார் மற்றும் டாலி தனஞ்செயாவை இயக்குகிறார்.

இப்படத்தில் சிவராஜ் குமார் ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். கன்னடத்தில் இப்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகர் டாலி தனஞ்செயா இன்னொரு வேடத்தில் நடிக்கிறார். மேலும் ப்ரதீவ், உமாஸ்ரீ மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தைத் தமிழில் ‘கோலிசோடா’, ‘கடுகு’ போன்ற படங்களைத் தயாரித்த ரஃப்நோட் நிறுவனம் , கன்னடத்தில் கிருஷ்ண சர்த்தக்-ன் கிருஷ்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எஸ்.டி.விஜய்மில்டன். ஜெ.அனூப் சீலின் இசையமைக்கிறார். பிரகாஷா புட்டசாமி கலை இயக்குநராக பணிபுரிகிறார். சுப்ரீம் சுந்தர் சண்டை பயிற்சி செய்கிறார். Pro ஜான்சன்.

இப்படத்தின் பூஜை பெங்களூரில் இன்று நடந்தது. வரும் 23ஆம் தேதி முதல் படப்பிடிப்பு பெங்களூரில் சான்ஸ்க்ரிட் ( Sanskrit collage ) கல்லூரியில் ஆரம்பமாகிறது. படப்பிடிப்பு பெங்களூரில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

ALSO READ:

Cinematographer Vijay Milton enters Kannada cinema