BEAST UPDATES: முதலிடம் பிடித்த அரபிக் குத்து பாடல்

0
215

BEAST UPDATES: முதலிடம் பிடித்த அரபிக் குத்து பாடல்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகின்றன. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை தொடர்ந்து, நேற்று மாலை 6 மணிக்கு முதல் பாடலான அரபிக் குத்து பாடல் வெளியானது. பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். அனிருத், ஜோனிட்டா காந்தி பாடியுள்ளனர். இந்நிலையில் அந்த பாடல் தற்போது 2 கோடி பார்வையாளர்களை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பாடலுக்கு 20 லட்சம் லைக்குகள் கிடைத்திருக்கிறது. இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.