3.33 விமர்சனம்: 3.33 திகில் த்ரில் இரண்டும் கலந்த புது முயற்சி
பேம்பூ ட்ரீஸ் பிரொடக்ஷன்ஸ் சார்பில் டி. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில் 3.33 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நம்பிக்கை சந்துரு.
இதில் பிரபல நடன இயக்குனர் சாண்டி, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்ருதி செல்வம், ரேஷ்மா, மைம் கோபி, சரவணன், ரமா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்;கள்:-ஒளிப்பதிவு – சதீஷ் மனோகரன், இசை – ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், படத்தொகுப்பு – தீபக் எஸ்.துவாரகநாத், விஎஃப்எஃஸ் சூப்பரவைசர் – அருண், ஸ்டண்ட் – ஸ்டன்னர் ஷாம், பிஆர்ஒ-ஏய்ம் சதீஷ்.
சாண்டி, அக்கா ரேஷ்மா, அவரது மகள், அம்மா ரமா ஆகியோருடன் புது வீட்டிற்கு குடி போகிறார். அப்பொழுது அவருடைய காதலி ஸ்ருதி எலக்ட்ரானிக் கடிகாரத்தை பரிசாக கொடுக்கிறார். அதற்கு பிறகு அவர் பிறந்த நேரமான 3.33 மணிக்குள் வினோதமாக கனவு காண்கிறார். அந்த குறிப்பிட்ட டைம் பயமுறுத்த ஆரம்பிக்கிறது. அதிலிருந்து அவர் மீள உளவியல் மருத்துவரிடம் செல்கிறார். பின்னர் அதைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் கௌதம் வாசுதேவ் மேனனனை சந்திக்கிறார். அந்த டைம் பயமுறுத்திலிருந்து தப்பிக்க அந்த நேரத்தில் அதன் சாவியை எடுத்து திறந்து வந்து விட்டால் தப்பித்து விடலாம் என்று கௌதம் வாசுதேவ் மேனன் சொல்கிறார். அதிலிருந்து சாண்டி வெளியே வந்தாரா? அவரால் பாதிக்கப்படும் குடும்பத்தார் என்ன ஆனார்கள்? என்பதே மீதி.
சாண்டி வித்தியாசமாகவும், சீரியஸாகவும் கண்களை உருட்டி மிரட்சி பய பார்வையுடன் அசத்தலான நடிப்பை கொடுத்து பயமுறுத்தியிருக்கிறார்.
இயக்குனர்; வாசுதேவ மேனன், மைம் கோபி, சரவணன் அனைவருமே சிறு காட்சிகளில் மட்டுமே தோன்றிவிட்டு சென்று விடுகிறார்கள். ரமா, ரேஷ்மா, குழந்தை ஆகியோர் மட்டுமே படம் முழுவதும் வந்து சிறப்பாக நடித்துள்ளனர்.ஸ்ருதி செல்வம் காதலியாக பங்களிப்பு கச்சிதம்.
ஒரே வீட்டில் விதவிதமான கோணத்தில் காட்சிக்கோணங்களை வைத்து ஹாரர் அனுபவத்தை கொடுப்பது என்பது கடினம், ஆனால் அலுப்பு ஏற்படாமல் விறுவிறுப்பாக கொடுத்திருப்பதில் ஜெயித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ் மனோகரன், இவர் தான் படத்தின் கதைநாயகன்.
இசை – ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், படத்தொகுப்பு – தீபக் எஸ்.துவாரகநாத் ஆகிய இருவருமே படத்தில் திகில் அனுபத்தை கொடுத்துள்ளனர்.
3 என்பது தெய்வ சக்தி, அதனுடன் அசுர சக்தி 33 சேர அந்த நேரத்தில் பிறந்தவர்கள் பல நெகடிவ் தன்மை கொண்டவர்களாக அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற புள்ளி விவரங்களுடன் விவரித்து திரைக்கதையமைத்திருக்கிறார் நம்பிக்கை சந்துரு. குறிப்பிட்ட டைம் நாயகனை படாது பாடு படுத்தி சிக்கலுக்கு உள்ளாக்குவதை வித்தியாசமாக அணுகுமுறையில் சொல்லி பயமுறுத்த முயற்சித்து அதில் பாதியளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் நம்பிக்கை சந்துரு.
மொத்தத்தில் பேம்பூ ட்ரீஸ் பிரொடக்ஷன்ஸ் சார்பில் டி. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில் 3.33 திகில் த்ரில் இரண்டும் கலந்த புது முயற்சி.