22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

0
190

22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

தமிழக அரசின் நிதி​யுதவி​யுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் சார்​பில் 22-வது சென்னை சர்வதேச திரைப்​பட​ விழாவை. சென்னை, ராயப்​பேட்​டையில் உள்ள சத்யம் திரையரங்கில் செய்தித்​துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்​தார்.

விழாவில் அமைச்சர் பேசி​ய​தாவது: இந்தியா​வின் முன்னணி திரைப்பட விழாவாக சென்னை சர்வதேச திரைப்பட விழா மாறியிருப்பது மகிழ்ச்​சி​யளிக்​கிறது. 2008-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, திரைப்பட விழாவுக்கு முதன்​முதலாக நிதி​யுதவி வழங்​கினார். 2023-ம் ஆண்டு நிதியுதவியை ரூ.85 லட்சமாக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் உயர்த்தி வழங்​கினார். இதேபோல் கோவா திரைப்பட விழாவுக்​கும் ரூ.15 லட்சமாக நிதி​யுதவி உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

திமுக அரசு ஆட்சி பொறுப்​பேற்றது முதல் திரைப்​படத்​துறை​யினருக்கு ஏராளமான நலத்​திட்​டங்கள் செயல்​படுத்​தப்​பட்​டுள்ளன. திரைப்​படத்​துறை​யினரின் நலவாரி​யத்​தில் 27 ஆயிரம் பேர் பதிவு செய்​துள்ளனர். இவ்வாரியம் சார்​பில் வழங்​கப்​படும் நலத்​திட்ட உதவிகளை சரியாகப் பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும். நிலுவையில் உள்ள திரைப்பட விருதுகள், சின்னத்​திரை விருதுகள் வழங்க தேர்​வுக்​குழு அமைக்​கப்​பட்டு விரு​தாளர்கள் தேர்வு செய்​யப்​பட்டு வருகின்​றனர்.

திரு​வள்​ளூர் மாவட்டம் பூந்​தமல்​லி​யில் ரூ.500 கோடி மதிப்​பீட்​டில் 150 ஏக்கர் பரப்​பள​வில் நவீன திரைப்பட நகரம் அமைக்​கப்​படும் என முதல்வர் அறிவித்​தார். இதற்கான திட்ட மதிப்​பீடு தயாரிக்​கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக கடந்த வாரம் துணை முதல்​வரும் நானும் ஆய்வு கூட்டம் நடத்​தினோம். விரை​வில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்​யப்​பட்டு, ஒப்பந்​தப்புள்ளி கோரி பணிகள் முடிவடை​யும். எம்ஜிஆர் திரைப்​படக் கல்லூரி​யில் அதிநவீன வசதி​யுடன் கூடிய படப்​பிடிப்பு தளங்கள் ரூ.40 கோடி மதிப்​பீட்​டில் தொடங்​க​வுள்​ளோம். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நிகழ்​வில், இந்திய திரைப்பட திறனாய்வு கழகத் தலைவர் சிவன் கண்ணன், துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசுவாமி, பொதுச் ​செய​லாளர் ஏவிஎம்​கே.சண்​முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்​றனர். சென்னை சர்வதேச திரைப்பட விழா டிச.19 வரை நடைபெறுகிறது.

இதில் பல்வேறு நாடு​களின் 180 திரைப்​படங்கள் திரை​யிடப்​படு​கின்றன. குறிப்பாக விருதுகள் பெற்ற திரைப்​படங்கள் மட்டுமின்றி, பிரபல திரைப்பட விழாக்​களில் திரை​யிடப்​பட்ட படங்​களும் திரை​யிடல் செய்​யப்​படு​கின்றன. விழா​வின் நிறைவில் சிறந்த படங்​களுக்கு விருதுகளும் வழங்​கப்​பட​வுள்ளன. மேலும், ​திரைப்​படத்​துறை ஆளு​மை​களின் கருத்​தரங்​கம், ப​யிற்சி வகுப்புகள், கலந்​துரை​யாடல் உள்​ளிட்​ட​வை​யும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளன.