‘200 ரூபாயில் ஆரம்பித்த பயணம்..’ மேடையில் உருக்கமாக பேசிய ஹாரிஸ் ஜெயராஜ்..!
200 ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்த இசைப்பயணம் இன்று உலக சாதனை படைக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளதாக மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் மலேசியாவில் 4 மாதங்களுக்குள் 4 இசைக்கச்சேரிகள் நடத்தியுள்ளார். இவற்றின் அனைத்து டிக்கட்டுகளும் விற்பனையாகி உலக சாதனை படைத்தது. ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ், பாடகர்கள் கார்த்திக், கிரிஷ், ஹரிணி, ஹரிசரண், நரேஷ் ஐயர் மற்றும் பலர் கோலாலம்பூரில் ரசிகர்களால் நிரம்பிய ஆடிட்டோரியத்தில் இசைக்கச்சேரி நடத்தி அசத்தினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக செய்தித் தொடர்பாளர் அப்சரா ரெட்டி, திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் மலேசியாவின் முன்னணி தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து டத்தோ அப்துல் மாலிக் மற்றும் சுபைர் ஆகியோர் மேலும் 3 இசைகச்சேரிகளை ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்து நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.