18 வருடங்களுக்கு பிறகு இது மகிழ்ச்சியான நாள்.. பாலா குறித்து சூர்யா

0
76

18 வருடங்களுக்கு பிறகு இது மகிழ்ச்சியான நாள்.. பாலா குறித்து சூர்யா

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு சூர்யா நடிக்கவிருக்கும் 41-வது படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்திருக்கின்றனர். இந்நிலையில் சூர்யா 41-வது படத்தை இயக்குனர் பாலா இயக்கவுள்ளதாகவும் இன்று படப்பிடிப்பு தொடங்கியதாகவும் சூர்யா அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதற்குமுன் இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது இவர்கள் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

சுமார் 18 வருடங்களுக்கு பிறகு சூர்யாவும் பாலாவும் இந்த் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை சமூக வலைத்தளத்தில் நெகிழ்ந்து பதிவிட்ட சூர்யா, எனது மென்டர் டைரக்டர் பாலா ஆக்சன் சொல்வதற்காக காத்திருக்கிறேன். 18 வருடங்களுக்கு பிறகு இது மகிழ்ச்சியான நாள். இந்த நேரத்தில் உங்கள் அனைவருடைய வாழ்த்துக்கள் தேவை என அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.