விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழிப் படத்தில் ராஜ் தருண் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ரஃப் நோட் புரொடக்ஷன் அடுத்த தயாரிப்பை அறிவிக்கிறது.
கதை உள்ளடக்கம் மிக்க சினிமாவை வழங்கி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ள ரஃப் நோட் புரொடக்ஷன், தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. தற்காலிகமாக படத்தின் தலைப்பாக “புரொடக்ஷன் நம்பர் 5” என வைக்கப்பட்டுள்ளது. இந்த இருமொழிப் படத்தை புகழ்பெற்ற இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்குகிறார். இந்தப் படம், தெலுங்கு திரையுலகில் பெரும் கவனம் பெற்ற நடிகர் ராஜ் தருணின் கோலிவுட் அறிமுகமாகும்.
இந்த அறிவிப்பு, நடிகர் ராஜ் தருணின் பிறந்தநாளுக்கான சிறப்பு பரிசாக வெளியாகியுள்ளது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே இந்த வலுவான கூட்டணியை அறிமுகப்படுத்துவதில் ரஃப் நோட் புரொடக்ஷன் மகிழ்ச்சியடைகிறது.
உய்யாலா ஜம்பாலா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற ராஜ் தருண், குமாரி 21F, சினிமா சூப்பிஸ்த மாமா போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர். இப்போது, தமிழ் சினிமாவிற்கு ஒரு புது பரிமாணத்துடன் காலடி எடுத்து வைக்கிறார். இந்தப் படத்தில் அவர் புதிய தோற்றத்திலும், வித்தியாசமான கதாபாத்திரத்திலும் ரசிகர்களை கவரத் தயாராக இருக்கிறார்.
விஜய் மில்டன், வலுவான கதைகளுடன் காணக் கூடிய காட்சிப்படிமங்களை இயக்குவதில் முன்னோடியாகத் திகழும் இயக்குநர். அவரது முந்தய படங்களான 10 எண்ணுறதுக்குள்ள, கோலி சோடா, கோலி சோடா 1.5, கடுகு, பைரகி உள்ளிட்ட படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக வெற்றியடைந்தன. ஒளிப்பதிவாளராகவும், சிவராஜ்குமார், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் 40-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்தப் படம் குறித்து விஜய் மில்டன் கூறுகையில்:
“இந்த படம் எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். கோலி சோடா பாணியை தொடர்ந்து- இது ஒரு சக்திவாய்ந்த, உணர்ச்சிமிக்க, உண்மையான கதையை கொண்டு வருகிறது . ராஜ் தருண் மிகவும் புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் தோன்றுகிறார்; தமிழ் ரசிகர்களை அவருடைய நடிப்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என எனக்கு நம்பிக்கை உள்ளது.”
புரொடக்ஷன் நம்பர் 5 படமானது, கோலி சோடா திரைப்படங்கள் போலவே, நியாயமான ஆனால் தாக்கம்மிக்க காட்சிப்படுத்தலோடு தொடரும். தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களை இணைக்கும் முயற்சியாகவும், வலுவான கதையம்சம் மற்றும் பிரதான கதாநாயகனின் அர்ப்பணிப்பு நிறைந்த நடிப்பை வழங்கும் நோக்கத்துடனும் உருவாக்கப்படுகிறது.
மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். ராஜ் தருண் போன்ற ஒரு சக்திவாய்ந்த, திறமைமிக்க நடிகரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துவதில் ரஃப் நோட் புரொடக்ஷன் பெருமை கொள்கிறது. மேலும் இந்தப் படத்தைப் பற்றிய தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறது.