ரஜினியுடன் பேசிய ஆடியோ லீக்கானது வருத்தமளிக்கிறது – தேசிங்கு பெரியசாமி

0
280

ரஜினியுடன் பேசிய ஆடியோ லீக்கானது வருத்தமளிக்கிறது – தேசிங்கு பெரியசாமி

துல்கர் சல்மான், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், தேசிங்கு பெரியசாமியை தொலைபேசியில் அழைத்து பாராட்டியிருந்தார். அதை தனது ட்விட்டரில் பக்கத்திலும் ரஜினிகாந்த் பெயரைச் சொல்லாமல் பதிவிட்டிருந்தார் தேசிங்கு பெரியசாமி. ஆனால் இருவரும் பேசிய உரையாடல் இணையத்தில் லீக்காகி வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, வாழ்த்து தெரிவித்த எல்லோருமே ‘என்கிட்டயே தலைவர் பேசுனது மாதிரி அவ்வளவு சந்தோஷம் என்று சொல்றாங்க’ உங்களுடைய அன்புக்கு நன்றி. ஆனால் தனிப்பட்ட முறையில் போன் உரையாடல் லீக் ஆனதில் சந்தோஷம் இல்லை. ஏனென்றால் அது மிகவும் பெர்சனலான தொலைபேசி உரையாடல்.

ஆகையால் தனது ட்வீட்டில் கூட நான் தலைவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக நடந்துவிட்டது. எல்லாம் நன்மைக்கே. மீண்டும் உங்களுடைய அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று தேசிங்கு பெரியசாமி தெரிவித்துள்ளார்.