மதில் விமர்சனம்

0
874

மதில் விமர்சனம்

எஸ்.எஸ். க்ரூப் சிங்கசங்கரன் தயாரித்து கதை, திரைக்கதை, எழுதி இயக்கியிருக்கிறார் மித்ரன் ஆர்.ஜவஹர்.தமிழ்ப் புத்தாண்டு தின ஸ்பெஷலாக மதில் திரைப்படம் ஜீ-5 ஓடிடி தளத்திற்காக தயாரித்து வெளியாகியுள்ளது.
இதில் கே.எஸ்.ரவிக்குமார், திவ்யா துரைசாமி, மைம் கோபி, பிக்பாஸ் புகழ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-ஜி.பாலமுருகன், படத் தொகுப்பு -எம்.தியாகராஜன், வசனம் – எழிச்சூர் அரவிந்தன், இசை-எல்.வி.முத்து கணேஷ், பிஆர்ஒ-எய்ம் சதீஷ்.
சொந்த வீடு இல்லாமல் தன் தந்தையின் மரணத்தில் ஏற்பட்ட அவமானத்திற்காக, வாழ்நாளில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற துடிப்புடன் நாடக கம்பெனி நடத்தி சம்பாதித்து சொந்தமாக அழகான ஒரு வீட்டை கட்டுகிறார் கே.எஸ்.ரவிக்குமார். புது வீட்டில் சந்தோஷமாக குடியேற தேர்தல் வந்து அவரது அமைதியை புரட்டி போட்டு விடுகிறது. அவரது சுவரில் அரசியல்வாதி மைம்கோபி தன் கட்சிக்காக அந்த சுவரை ரிசர்வ் செய்து கட்சியின் பெயரை எழுத சொல்லி விட்டு போய் விடுகிறார். கே.எஸ்.ரவிக்குமார் சுவரில் கட்சியின் பெயரை பார்த்து விட்டு கொதிப்படைந்து அதை அழித்துவிடுகிறார். இருந்தும் மறுநாள் கட்சித் தலைவரின் படத்தை பெரிதாக வரைந்து விட்டு போய் விடுகின்றனர். பின்னர் பெயிண்டரை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் அதனையும் அழித்து விடுகிறார். இதனால் பெரும் கோபமடையும் மைம்கோபி மின்சாரத்தை துண்டித்து விட, கே.எஸ்.ரவிக்குமார் தன் நண்பர்களுடன் சேர்ந்து போராடி நாடகமாடி மின்சாரத்தை போட வைக்கிறார். இவர்களின் சண்டை வலுப்பெற, மைம் கோபி சுவரையே இடித்து தள்ளி விடுகிறார். அதன் பின் கோபத்தில் மைம் கோபி கே.எஸ்.ரவிக்குமாரை அடித்தும் விடுகிறார். இதனை சற்றும் எதிர்பாராத கே.எஸ்.ரவிக்குமார் அரசியல் பலத்தை தனி ஒரு ஆளாக நின்று எதிர்க்க முடியாது என்பதை உணர்ந்து என்ன முடிவு எடுக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் தன் அறிவு கூர்மையை பயன்படுத்தி மைம் கோபியை மன்னிப்பு கேட்க செய்தாரா? மீண்டும் சுவரை கட்ட வைத்தாரா? என்பதே க்ளைமேக்ஸ்.
கே.எஸ்.ரவிக்குமார் படம் முழுவதும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி, அப்பாவாக, மாமனாராக, முதலாளியாக, மனிதநேயம் மிக்கவராக கண்டிப்பு நிறைந்த குரலில், தன் காரியத்தை சாதுர்யமாக கையாளும் நடுத்தர மனிதராக அரசியல்வாதிக்கு சவால் விடும் கதாபாத்திரத்தில் அனைத்திலும் தன் நடிப்பு திறமையால் தனித்து நிற்கிறார்.
தந்தைக்கு பக்கபலமாக தூணாக நின்று தைரியம் கொடுக்கும் மகளாக திவ்யா துரைசாமி, அரசியல்வாதியாக மைம் கோபி, பிக்பாஸ் புகழ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன் மற்றும் பலர் படத்தின் உயிரோட்டமாக கதைக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
ஜி.பாலமுருகனின் ஒளிப்பதிவு, எம்.தியாகராஜனின் படத்தொகுப்பு, எல்.வி.முத்து கணேஷின் இசை ஆகிய மூன்றும் கதையோட்டத்திற்கு கச்சிதம்.
எழிச்சூர் அரவிந்தனின் வசனம் மட்டுமே படத்திற்கு மைனஸ். ஓடிடி தளத்தில் வெளிவருவதால் அனைத்து வயதினரும் பார்க்கும் படத்தை ஆபாச வார்த்தைகளை தவிர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
கதை, திரைக்கதை, இயக்கம்- மித்ரன் ஆர்.ஜவஹர். என் சுவர் என் உரிமை என்ற குரலின் எதிரொலியாக இந்தப் படத்தின் திரைக்கதையை அரசியல் பின்னணி கலந்து இயக்கியிருக்கிறார் மித்ரன் ஆர்.ஜவஹர். படத்தின் சிறப்பான அம்சமே கே.எஸ்.ரவிக்குமாரின் நடிப்பு படத்திற்கு ப்ளஸ். படத்தின் கதையோட்டத்தை தடைகற்களாக இருப்பது மின் வாரிய அலுவலகத்தில் நாடகம் ஆடுவதும், சில இடங்களில் ஆபாச வசனங்களை பேசுவதும்,இதனை எடிட்; செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் மதில் மனதில் நின்று நிலைக்கும்.