நானே என் முதல் படத்திற்கு மொக்கை கதையை தான் வைத்திருந்தேன் – EMI பட விழாவில் இயக்குனர் பாக்கியராஜ் கலகலப்பு!
சபரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் ” EMI ” மாதத் தவணை “. இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுக்க முழுக்க காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது.
தற்போதைய உலகில், 20,000 ரூபாயில ஒரு மொபைல் வாங்கவேண்டுமானால் கூட, அதை முழு பணத்தைக் கொடுத்து யாரும் வாங்குவது இல்லை, எல்லோரும் இஎம்ஐ ல போட்டுத் தான் வாங்குகிறார்கள். இப்போது லோ கிளாஸ், மற்றும் மிடில் கிளாஸ், ஹைகிளாஸ் என அவங்க அவங்க தகுதிக்கு தகுந்த மாதிரி ஏதோ ஒன்னு, காரோ, பைக்கோ, இஎம்ஐ போட்டு தான் வாங்குகிறார்கள். இந்த மாதிரி இஎம்ஐ வாங்கவேண்டுமானால் அவங்களுக்கு சூருட்டி கையெழுத்து ஒருத்தர் போடவேண்டும், அப்போதான் தான் அவர்களுக்கு இஎம்ஐ -ல ஈசியா லோன் கிடைக்கும்.
இந்த மாதிரி லோன் எடுத்துட்டு போயிட்டு ரெண்டு மூணு மாசம் தவணை கட்டவில்லையென்றால் மேனேஜர்ல இருந்து, கடைசி ஸ்டாப் வரைக்கும் கால் பண்ணி டார்ச்சர் பண்ண ஆரம்பிப்பாங்க. இதை அனுபவிக்காமல் கண்டிப்பா 90% மக்கள் இருக்க முடியாது. அவர்களின் கதை தான் இந்தப்படம்.
ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது….
EMI டைட்டிலே எளிதாக புரிகிறது. சில நேரம் பட டைட்டிலே புரியாது, இந்த டைட்டிலிலேயே எல்லாம் புரிந்து விடுகிறது. தயாரிப்பாளர் மல்லையன், இயக்குநரையே நடிகராகத் தைரியமாக ஆக்கியுள்ளார் அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இசையமைப்பாளர் மிக அருமையாகப் பாடலை தந்துள்ளார், தொழில் நுட்ப கலைஞர்கள் மிக நன்றாக வேலை பார்த்துள்ளனர். விஷுவல் பார்க்க நன்றாக வந்துள்ளது. ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்துள்ள இந்த குழுவிற்கு என் வாழ்த்துக்கள். நானே முதல் படத்திற்கு ஒரு மொக்கை கதையைத் தான் வைத்திருந்தேன் ஆனால் உதவி இயக்குநராக வேலை பார்க்க ஆரம்பித்த பிறகு, அதைத் தூக்கிப் போட்டுவிட்டேன். நம் வாழ்க்கையிலிருந்து கதையை எடுப்போம் என கதை செய்தேன். நம் வாழ்க்கையை எடுத்தால் படம் ஜெயிக்கும். EMI எல்லோரும் அனுபவிப்பது தான். இதில் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காமெடி சென்ஸோடு படத்தைச் சொல்லியிருந்தால் மக்கள் ஆதரிப்பார்கள், படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி.
கதாநாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார். மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், OAK சுந்தர் லொள்ளுசபா மனோகர், TKS, செந்தி குமாரி, ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளார்
சிம்பு குரலில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ” என் நண்பனே ” என்ற இசை ஆல்பதிற்கு இசையமைத்த ஸ்ரீநாத் பிச்சை இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் இந்த படத்தின் பாடல்களை பேரரசு மற்றும் விவேக் இருவரும் எழுதியுள்ளனர்.
ஒளிப்பதிவு – பிரான்சிஸ், விடுதலை படத்தின் எடிட்டர் R. ராமர் இந்த படத்தையும் எடிட் செய்துள்ளார், நடன இயக்கத்தை தீனா, சுரேஷ் ஜீத் இருவரும் செய்துள்ளனர்.
ஸ்டண்ட் – மிராக்கில் மைக்கேல் / தயாரிப்பு மேற்பார்வை – தேக்கமலை பாலாஜி. மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரிப்பு – மல்லையன்.