நடுவன் விமர்சனம்
க்யூ எண்டர்ட்யின்மெண்ட் சார்பில் லக்கி ஜாஜர் நடுவன் படத்தை தயாரித்து சோனி லைவ் வெளியீட்டில் ஒடிடி தளத்தில் வந்துள்ளது.
கோகுல் ஆனந்தின் முதலீட்டில் பரத்தின் உழைப்பில் நண்பர்கள் இருவரும் தேயிலை தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்திவருகிறார்கள். கோகுல்ஆனந்த் குடி போதைக்கு அடிமையானவர் என்பதால் தொழிற்சாலையின் பொறுப்பு அத்தனையும் நேரம் காலம் பார்க்காமல் பரத் செய்து வருகிறார். இதன்; காரணமாக பரத் அவரது மனைவி அபர்ணா வினோத் மற்றும் குழந்தையிடம் நேரம் ஒதுக்கி செலவிடாமல் வேலை ஒன்றே குறிக்கோளாக அலைகிறார். இந்த சூழ்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட அதை சமாதானப்படுத்த முற்படும் நண்பர் கோகுல் ஆனந்திடம் அபர்ணாவிற்கு கள்ள தொடர்பு ஏற்படுகிறது. இவற்றை அறியாத பரத் தன் உறவினர் அருவி பாலாவை வீட்டில் தங்க வைத்து தொழிற்சாலையில் வேலைக்கு அனுப்புகிறார். அருவி பாலாவிற்கு இந்த கள்ள தொடர்பு தெரிய வர இதனை பரத்திடம் சொல்ல தடுமாறுகிறார். இறுதியில் அருவிபாலா உண்மையை சொன்னாரா? பரத் எடுத்த அதிரடி முடிவு என்ன? என்பதே படத்தின் க்ளைமேகஸ்.
நடுவன் படத்தில் பரத் நிவாஸ், அபர்ணா வினோத் தவிர கோகுல் ஆனந்த், யோக் ஜேய்பி, ஜார்ஜ், பாலா, தசரதி குரு, கார்த்திக், சுரேஷ் ராஜு மற்றும் ஆரத்யா ஸ்ரீ ஆகியோர் திறம்பட நடித்துள்ளனர்.
தரண் குமார் இசை, யுவா ஒளிப்பதிவு, சன்னி சவ்ரவ் படத்தொகுப்பு, சசி குமார் கலை இயக்கம் ஆகியவற்றை கச்சிதமாக செய்துள்ளனர். மதன் கார்கி மற்றும் டாக்டர் பர்ன் எழுதியுள்ள பாடல்கள் படத்திற்கு பலம்.
நட்பு, கள்ள தொடர்பு, திருட்டு, கொலை, கொள்ளை என்று அத்தனை அம்சங்களையும் கலந்த க்ரைம் த்ரில்லரை கொடுக்க நினைத்து அவை அனைத்துமே திரைக்கதையில் ஒட்டாமல் ஏனோ தானோ என்று வடிவமைக்கப்பட்டு கதையை முடித்திருக்கிறார் இயக்குனர் ஷரங். படம் முடிந்த பின் திரும்பவும் வரும் படக்காட்சி எதனால் என்று யூகிக்க முடியவில்லை. இருந்தாலும் கொடைக்கானலில் அருமையான ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக உள்ளது.காலை அதிகாலை பாடல் அசத்துகிறது.
மொத்தத்தில் நடுவன் படம் எதிர்பார்ப்பை கூட்டவில்லை.