நடிகை கங்கனா ரனாவத்திற்கு கொரோனா தொற்று
தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை நடிகை கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால், தனிமைப்படுத்திக் கொண்டேன். கொரோனாவிலிருந்து விரைவில் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. கொரோனாவுக்கு பயந்தால் அது மேலும் பயமுறுத்தும். அதனால், பயப்படக்கூடாது. வாருங்கள் மக்களே, கொரோனாவை அழிப்போம்” என்று கூறியுள்ளார். கங்கனாவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதால், கங்கனா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.