‘தேவதாசின் தேவதை’ : காதல் மணம் கமழும் ஆல்பம் பாடல்!

0
237

‘தேவதாசின் தேவதை’ : காதல் மணம் கமழும் ஆல்பம் பாடல்!

ஆல்பங்கள், தனிப்பாடல்கள் புதுமையாக இருக்கும் போது கவனம் பெறுகின்றன. தற்காலத்தில் இவை திரை நுழைவுக்கு ஒரு படிக்கட்டாகவும் அமைகின்றன.மாஸ் ரவியின் ஒளிப்பதிவு இயக்கத்தில் ‘தேவதாசின் தேவதை’ என்றொரு தலைப்பில்
காதல் மணம் கமழும்
ஆல்பம் பாடல் உருவாகி உள்ளது.ரம்யா ,கவி சுஜய், ஆனந்த் ரெய்னா இதில் நடித்துள்ளனர். தயாரிப்பு ஷீரடி ஓம் சாய்ராம்,ட்ராக் மியூசிக் இந்தியா வெளியிட்டுள்ளது.

‘தூக்கத்தை தூக்கிட்டுப் போனாளே,

தூரத்தில் நின்றென்னைக் கொன்றாளே ‘

என்று தொடங்கும் இந்த ஆல்பம் பாடலை இயக்கியுள்ள மாஸ் ரவி சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’,விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர்.

இந்த
மாஸ் ரவி ‘காத்து வாக்குல ஒரு காதல்’ படத்தை இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ளார் அப்படம் வெளிவர உள்ளது.மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடித்து இயக்கி வருகிறார். பாடலாசிரியர் கவி சுஜய், ஆதிஷ் இசையமைத்துள்ளார். பாடலை ஏ. கே. சசிதரன் பாடியுள்ளார். படத்தொகுப்பு மற்றும் விளம்பர வடிவமைப்பு ஆறுமுகம் டீ. . நிற வடிவமைப்பு செய்துள்ளார் மணிகண்டன் . மக்கள் தொடர்பு -சக்தி சரவணன்.

இந்தப் பாடல் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
#தேவதாசின்தேவதை ❤ Beautiful Angel Song #DevathasinDevathaiAlbumsong Out Now🎵

DOP & Directed ✨ @MaasRavi