சதீஷ் குமார் இயக்கத்தில், பிப்ரவரி 14 அன்று வெளியான ‘பயர்’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் பாலாஜி, சந்தினி தமிழரசன், ரச்சிதா மஹாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி சான், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஜேஎஸ்கே பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டிகே இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ‘பயர்’ திரைப்படம் திரையரங்குகளில் 50 நாளை கடந்து வெற்றிகரமாக பவனி வருகிறது.
இந்த பிரம்மாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக கேக் வெட்டப்பட்டது. நடிகர்-நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு, சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் மற்றும் இயக்குநர் ராம் சிறப்பு ஷீல்டு வழங்க தயாரிப்பாளர் இயக்குநர் JSK கவுரவித்தார்.