From Rameswaram to Rashtrapati Bhavan, the journey of a legend begins… India’s Missile Man is coming to the silver screen.
Dream big. Rise higher.
#KALAM – 𝗧𝗵𝗲 𝗠𝗶𝘀𝘀𝗶𝗹𝗲 𝗠𝗮𝗻 𝗼𝗳 𝗜𝗻𝗱𝗶𝗮
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ், 2025 கேன்ஸ் திரைப்பட விழாவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
வெள்ளித்திரையில் இந்தியாவின் ஏவுகணை நாயகன்: 2025 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிக்கப்பட்ட டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கிறார். ஓம் ராவத் இயக்கும் இப்படத்தை, அபிஷேக் அகர்வால் மற்றும் பூஷன் குமார் தயாரிக்கிறார்கள்.
இந்தியாவின் 11வது ஜனாதிபதியும், இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் தேசிய சின்னங்களில் ஒருவருமான பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த ஒரு பிரமாண்டமான திரைப்படம், அதிகாரப்பூர்வமாக தயாரிக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ புகழ் இயக்குனர் ஓம் ராவத் இயக்குகிறார்.
தேசிய விருது பெற்ற நாயகனும், சர்வதேச புகழ் நடிகருமான தனுஷ், இந்தத் திரைப்படத்தில் இந்தியாவே ஒருமனதாக நேசிக்கும் மனிதரான, ஏபிஜே அப்துல் கலாம் பாத்திரத்தை, ஏற்று நடிக்கிறார்.
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தினை தயாரித்த, ‘அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் கீழ் அபிஷேக் அகர்வால் தயாரிக்க, ‘டி-சீரிஸ்’ நிறுவனத்தின் கீழ் பூஷன் குமார் இணைந்து தயாரிக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதையை ‘நீர்ஜா’, ‘மைதான்’ மற்றும் ‘பர்மானு: தி ஸ்டோரி ஆஃப் போக்ரான்’ போன்ற புகழ்பெற்ற வாழ்க்கை வரலாற்றுப் படங்களுக்கு எழுத்துப் பொறுப்புகளை வகித்த சைவின் குவாட்ராஸ் எழுதியுள்ளார்.
ராமேஸ்வரத்திலிருந்து ராஷ்ட்ரபதி பவன் வரை, டாக்டர் கலாமின் வாழ்க்கை, ராக்கெட் அறிவியலின் கலவையாகவும், ஒரு அற்புதமான மனப்பான்மையுடன் இருந்தது. பெரும்பாலும் ‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்று அழைக்கப்படும் அவர், எளிமையான தொடக்கத்திலிருந்து ஒரு புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானியாகவும், தொலைநோக்கு பார்வையாளராகவும், இறுதியில் மக்களின் ஜனாதிபதியாகவும் உயர்ந்தார். அவரது அதிகம் விற்பனையாகும் நினைவுக் குறிப்பான ‘அக்னி சிறகுகள்’ மூலம் அவரது கருத்துக்கள், தலைமுறை தலைமுறையாக நம் மக்களின் மனதைத் தொடர்ந்து தூண்டிவிடுகிறது.
இந்தியாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான தனுஷ், டாக்டர் கலாம் வேடத்தில் நடிக்கிறார். இந்த வேடம் அவரது திரை வாழ்க்கையின் மிக முக்கியமான மைல்கல்லாக இருக்கும். அவரது தனித்துவமான உணர்வுப்பூர்வமான நடிப்பினால் புகழ் பெற்ற தனுஷ், இப்போது இந்தியாவின் மிகவும் பிரியமான தொலைநோக்கு பார்வையாளர்களில் ஒருவரைச் சித்தரிக்கும் மகத்தான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். ஒரு நடிகராகவும், இந்திய கதைசொல்லலுக்கும் இத்திரைப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும்.
கேன்ஸ் திரைப்பட விழா என்பது, ஒரு அரிய உலகளாவிய அரங்கமாகும், அதனால்தான் இந்திய மண்ணில் ஆழமாக வேரூன்றிய, ஆனால் உலகளவில் எதிரொலிக்கும் ஒரு கதைக்கான அறிமுகத்தை, தயாரிப்பாளர்கள் கேன்ஸ் நிகழ்வில் அறித்துள்ளனர். ஓம் ராவத்தும் தனுஷும் படத்தைப் பற்றி விவாதிக்க சந்தித்தபோது, அவர்கள் தங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய படத்தை ஒன்றாக உருவாக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்தனர்.
இந்திய சினிமா மற்றும் சர்வதேச வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்கனவே அலைமோதத் தொடங்கிவிட்டது. இது கடந்த காலத்தைப் பற்றிய ஒரு கதை மட்டுமல்ல. அறிவியல் சேவையையும் அறிவின் மேன்மையும் சந்திக்கும் போது, டாக்டர் கலாம் வாழ்வின் மகிமைகளை, இந்தியா உருவாக்க வேண்டிய எதிர்காலத்தை நினைவூட்டும் ஒரு அற்புதமான கதை.
டாக்டர் கலாமின் மதிப்புகளுக்கு உண்மையாக இருக்கும் இந்தப் படம், ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் ஜனாதிபதி பதவிக்குப் பின்னால் உள்ள மனிதர், கவிஞர், ஆசிரியர், கனவு காண்பவர் என அவரின் பல முகங்களை ஆராயும், அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் அறிவியல் மற்றும் ஆன்மீகம் இரண்டையும் சம அளவில் எடுத்துச் செல்லும். ஒரு அரசியல் வாழ்க்கை வரலாற்றை விட, இந்தத் திரைப்படம் தலைமைத்துவம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல் பற்றிய நுண்ணறிவாக நிலைநிறுத்தப்படும்.

“உண்மையான அரசியல்வாதிகளுக்கு பஞ்சமிகுந்த ஒரு காலத்தில், கலாம் அரசியல் மற்றும் அற்பத்தனத்திற்கு அப்பாற்பட்டவராக இருந்தார். கல்வியின் சக்தி, சிறந்து விளங்குதல் மற்றும் உள்நாட்டு கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்றவர் அவர்” என்று ராவத் ஒரு அறிக்கையில் கூறினார், “அவரது கதையை திரைக்குக் கொண்டுவருவது ஒரு கலைச் சவால் மற்றும் தார்மீக மற்றும் கலாச்சார பொறுப்பு. இது உலகளாவிய இளைஞர்களுக்கும், குறிப்பாக உலகளாவிய தென்னகத்து இளைஞர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் ஒரு கதை. இது எனது வாழ்க்கையின் மிக முக்கியமான அனுபவம். மக்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்து வந்தாலும் அவர்களுக்கான அற்புதமான பாடம் அவரது வாழ்க்கை.
தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் மேலும் கூறுகையில்.., “டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் காவிய வாழ்க்கையை பெரிய திரைக்குக் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்களுக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான தருணம். இந்திய சினிமாவின் ஜாம்பவான்களான டி-சீரிஸின் ஓம் ராவத் ஜி, தனுஷ் ஜி மற்றும் பூஷன் ஜி ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் பெருமைப்படுகிறேன். இந்தக் கதையைச் சொல்வதில் நாங்கள் பாக்கியம் பெற்றுள்ளோம், மேலும் நமது உண்மையான பாரத ரத்னா கலாம் ஜியின் பயணத்தை உயிர்ப்பிக்க நாங்கள் ஒவ்வொருவரும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவுள்ளோம். இது இந்திய சினிமாவின் மிகவும் மதிப்புமிக்க திட்டங்களில் ஒன்றாகும், மேலும் இது உலக அளவில் ஒரு பிரமாண்டமான திரைப்படமாக இருக்கும்.”
தயாரிப்பாளர் பூஷன் குமார் மேலும் கூறுகையில், “டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை, பல தலைமுறைகளாக மில்லியன் கணக்கான மக்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் ஒரு கதை. டி-சீரிஸில், அத்தகைய அசாதாரண இந்தியரின் பயணத்தைக் கொண்டாடும் ஒரு திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இது ஓம் ராவத்துடனான எங்கள் மூன்றாவது கூட்டு முயற்சியாகும். இந்த திரைப்படத்தில் தனுஷ் மற்றும் அபிஷேக் அகர்வாலுடன் இணைவது இதை மேலும் சிறப்பானதாக்குகிறது. இது வெறும் படம் மட்டுமல்ல, கனவுகள், அர்ப்பணிப்பு மற்றும் பணிவு ஆகியவை ஒரு நாட்டின் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைக்க முடியும் என்பதைக் காட்டிய ஒரு மனிதருக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு படம்.”
படக்குழு படம் பற்றிய மற்ற தகவல்கள் குறித்து தற்போதைக்கு ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் ராவத்தின் மிகச்சிறப்பான கதைசொல்லல், அகர்வாலின் துணிச்சலான தயாரிப்புத் தேர்வுகள் மற்றும் தனுஷின் மாற்றத்தை ஏற்படுத்தும் நடிப்பு திறமை ஆகியவற்றால், எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக உள்ளன, மேலும் தேசிய விருது வென்ற ராவத் மற்றும் தனுஷ் இணைந்து பணியாற்றுவதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
உலகம் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், உலக பார்வையாளர்களுக்காக இந்திய வாழ்க்கை வரலாற்றுப் படங்களின் இலக்கணத்தை மீண்டும் எழுத ‘விங்ஸ் ஆஃப் ஃபயர்’ தயாராக உள்ளது.
இந்தப் படத்தை அபிஷேக் அகர்வால் மற்றும் பூஷன் குமார் ஆகியோர் இணைந்து வழங்க, மேலும் அபிஷேக் அகர்வால், பூஷன் குமார், கிருஷ்ணன் குமார் மற்றும் அனில் சுங்கரா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இது உலகையே கவனிக்க வைக்கும் ஒரு திரைப்படமாக இருக்கும்.