‘சிந்துநதிப் பூ’ செந்தமிழன் இயக்கும் பிடிவாதம் – பாடல் பதிவுடன் துவங்கியது!
K T குஞ்சி மோன் தயாரித்த படத்தின் இயக்குனர் சிந்துநதிப் பூ செந்தமிழன் டைரக்டர் அடுத்த படம் பிடிவாதம். இப்படத்தின் பாடல் பதிவு இன்று இனிதே துவங்கியது. பேம்ஸ் மீடியா ஜெய் ராம் சிவா மாஸ் சினிமாஸ் யோகம் தயாரிக்கின்றனர்.
யோகம் எழுதிய கதைக்கு திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்குகிறார் டைரக்டர் செந்தமிழன். இப்படத்தில் ஹீரோ ஹீரோயின் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல நடிகர் நடிகைகள் நடிக்கின்றனர் கதையின் சுருக்கம்
பிடிவாதம்னா முரட்டு வைராக்கியம் கடிவாளம் கட்டுன குதிரை மாதிரி தன் இலக்கை நோக்கி ஓடுற ஹீரோ ஹீரோயின் யோட பயணம் தான் பிடிவாதம் படத்தோட கதை கரு இது ஒரு ஜாலியான சுவாரஸ்சியமான படம்.
கதை – யோகம்
திரைக்கதை வசனம் பாடல்கள் இயக்கம் சிந்துநதி பூ செந்தமிழன்
தயாரிப்பு ஜெயராம் சிவா யோகம்
ஒளிப்பதிவு முத்ரா
இசையமைப்பாளர் விஜய் மந்தாரா
எடிட்டிங் நவீன் குமார்
பிடிவாதம் படத்தின் படப்பிடிப்பு வடலூரில் நடைபெற உள்ளது நவம்பரில் துவங்க இருக்கும் படப்பிடிப்பு ஒரே ஹெட்யூலில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர் அடுத்த ஆண்டு மே 2025 மாதம் 1ம் தேதி தொழிலாளர் தினத்தில் இப்படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகதெரிவித்தார்