‘காஃபி மில்தி ஜூல்தி ஹை நா எஹ் கஹானி’ – முஃபாசாவின் தி லயன் கிங் –ஒரு புதிய வீடியோவில் முஃபாசா:வின் பயணத்திற்கு இணையான ஒன்றை ஷாருக்கான் வெளிப்படுத்துகிறார்

0
239
(L-R) Afia (voiced Anika Noni Rose), Young Mufasa (voiced by Braelyn Rankins) and Masego (voiced by Keith David) in Disney’s MUFASA: THE LION KING. Photo courtesy of Disney. © 2024 Disney Enterprises Inc. All Rights

‘காஃபி மில்தி ஜூல்தி ஹை நா எஹ் கஹானி’ – முஃபாசாவின் தி லயன் கிங் –ஒரு புதிய வீடியோவில் முஃபாசா:வின் பயணத்திற்கு இணையான ஒன்றை ஷாருக்கான் வெளிப்படுத்துகிறார்

கிங் மீண்டும் கர்ஜிக்கத் தொடங்கிவிட்டது அத்துடன் சேர்த்து பார்வையாளர்களுக்கு தனது சொந்த பயணத்தின் ஒரு பார்வையை வழங்குவதையும் ஷாருக்கான் உறுதி செய்திருக்கிறார்! இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட குடும்ப பொழுதுபோக்குக்குத் திரைப்படம், முஃபாசா: தி லயன் கிங், ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் அதன் ஒளிரும் நட்சத்திரக் குரல் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்திழுத்துள்ளது . இதன் இந்தி பதிப்பில் முஃபாசாவுக்கு குரல் கொடுக்கும் ஷாருக்கான், வனங்களின் ராஜாவாக வெற்றிகரமாக வளர்ச்சி காணும் முஃபாஸாவின் மன எழுச்சியூட்டும் பயணத்தோடு ஒன்றிணைந்து ஆழ்ந்து சென்று இந்த மிகச்சிறந்த அடையயாளச் சின்னமாக விளங்கும் கதாபாத்திரத்துடனான தனது உள்ளார்ந்த பிணைப்பை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் பார்வையாளர்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

(L-R): Taka (voiced by Theo Somolu) and Mufasa (voiced by Braelyn Rankins) in Disney’s live-action MUFASA: THE LION KING. Photo courtesy of Disney. © 2024 Disney Enterprises Inc. All Rights Reserved.

புதிதாக வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், இந்தியாவின் மிகவும் அதிகளவில் அன்பு காட்டப்பட்ட சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக மாறுவதற்கான தனது சொந்த மன எழுச்சிமிக்க பயணத்தை எதிரொலிக்கும் முஃபாஸாவின், கஷ்டங்கள் நிறைந்த கடுமையான வாழ்க்கைப் பயணத்தில் , தளரா முயற்சியை வெளிப்படுத்தும் வெற்றிக்கதையை கதையை ஷாருக் கான் விவரிக்கிறார். தனக்கே உரிய தலைமையிடத்தை அடைய அதற்கெதிரான சவால்களை முஃபாசா வெற்றிகரமாக எதிர்கொண்டு உயர்ந்தது போலவே அதற்கிணையாக ஷாருக்கானின் கடின உழைப்பும் உறுதிப்பாடும் இந்திய சினிமாவின் உண்மையான பாட்ஷாவாக அவரை உயர்ச்செய்து, அவரது பாரம்பரியத்தை உறுதியாக நிலைநாட்டச் செய்தது. .

 

(L-R) Kiara (voiced by Blue Ivy Carter) and Simba (voiced by Donald Glover) in Disney’s live-action MUFASA: THE LION KING. Photo courtesy of Disney. © 2024 Disney Enterprises Inc. All Rights Reserved.

அடையாளச் சின்னமாக விளங்கும் ஷாருக்கானின் குரல்வளத்தால் இந்த பழம்பெரும் புகழ் பெற்ற வன ராஜா உயிர்பெற்றெழுந்து மீண்டும் கர்ஜிக்கத் தொடங்கும் அற்புதமான காட்சியை உங்கள் குடும்பத்தில் அனைவரோடும் இணைந்து கண்டு மகிழத் தயாராக இருங்கள்!

“முஃபாசா: தி லயன் கிங்” சிங்கக் குடுபங்களின் அன்பான ராஜாவின் வியப்பூட்டும் வளர்ச்சியின் பழம்புகழ் பெற்ற கதையை வெளியிடுவதற்காக ரஃபிகியை இணைத்துக் கொண்டு முஃபாசா என்ற தன்னந்தனியாக விடப்பட்ட சிங்கக் குட்டியை அறிமுகப்படுத்துகிறது, பரிவு காட்டும் டக்கா என்ற சிங்கம் – அரச குடும்ப வாரிசு – மற்றும் ஒன்றோடொன்று தொடர்பற்ற ஒரு விதிவிலக்கான குழுவோடு இணைந்த அவர்களின் விரிவான ஒரு நீண்ட நெடிய பயணத்தைக் காட்சிப்படுத்துகிறது இந்த புதிய. முற்றிலும் புதுமையான திரைப்படத்தை பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார்.

 

MUFASA: THE LION KING – © 2024 Disney Enterprises, Inc. All Rights Reserved.

Disney’s Mufasa: The Lion King திரைப்படம் 2024 டிசம்பர் 20 ஆம் தேதி இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய பல்வேறு மொழிகளில் வெளியிடப்படுகிறது.