கண்ணப்பா படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் கைப்பற்றியுள்ளார்
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கண்ணப்பா’. சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை மோகன் பாபு தயாரித்திருக்கிறார்.
இப்படத்தில் இந்திய திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்களான மது, சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இவர்களோடு மேலும், மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.
‘கண்ணப்பா’ வரும் ஜூன் மாதம் 27 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் ஜுன் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
https://x.com/kannappamovie/status/1932373276124438698
இந்நிலையில், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி உரிமையாளர் பி. சக்திவேலன், “கண்ணப்பா” திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை கைப்பற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ‘கண்ணப்பா’ படத்தினை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.