உணர்வு பூர்வமாக உருவாகியுள்ள BUTTERFLY ஆல்பம் பாடல்

0
248

உணர்வு பூர்வமாக உருவாகியுள்ள BUTTERFLY ஆல்பம் பாடல்.

காந்தாரா ஸ்டுடியோ தயாரிப்பில் பிரபல இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசையில் சாமானியன் திரைப்படத்தின் கதாசிரியர் வி கார்த்திக் குமாரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உணர்வுபூர்வமாக உருவாகி இருக்கும் BUTTERFLY என்ற பாடலை குறித்து இயக்குனர் கூறியதாவது.

பெண் சுதந்திரம் என்பது அவர்களுக்கு நாம் கொடுப்பது அல்ல அவர்களே எடுத்துக் கொள்வது. ஒரு பெண் மனது வைத்தால் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சமுதாய கட்டமைப்புக்குள் சென்றாலும், செல்லாவிட்டாலும் அந்த சுதந்திரத்தை அவர்களால் உணரவும் முடியும், அடையவும் முடியும். என்ற கருத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது இந்த BUTTERFLY ALBUM SONG.

சமீப காலங்களாக இளைஞர்களை குறிவைத்து நடனத்தை மையப்படுத்தி வரும் ஆல்பம் பாடல்களுக்கு இடையே BUTTERFLY ALBUM SONG பெண் சுதந்திரத்தையும் பெண் திருமண வாழ்வில் ஏற்படும் நேர்மறை எண்ணங்களையும் மையப்படுத்தி உருவாகியுள்ளது ஒரு வித்தியாசமான முயற்சி என்று இயக்குனர் கூறுகிறார்..
இந்தப் பாடலில் திருமண வாழ்வில் பல கனவுகளுடன் அடி எடுத்து வைக்கும் அழகான மணப்பெண்ணாக ஸ்ரதா ராவூம், திருமண பந்தத்தில் இருந்து வெளியே வந்து தன் கனவை நோக்கி அடியெடுத்து வைக்கும் துணிச்சல் பெண்ணாக சாந்தினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். பிக் பாஸ் புகழ் விஷ்ணு நாயகனாக நடிக்க ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் சாமானியன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வி மதியழகன் அவர்களும் நடித்திருக்கிறார்.

இந்த ஆல்பத்தினை வி கார்த்திக் குமார் எழுதி இயக்க, பிராங்கிளின் ரிச்சர்ட் ஒளிப்பதிவு செய்ய, புவன் படத்தொகுப்பை கவனிக்கிறார். கவிஞர் மணியின் வரிகளில் அச்சு ராஜா மணி இசையில் உருவாகியுள்ள இப்பாடலை அமலா மற்றும் அச்சு ராஜாமணி இணைந்து பாடியுள்ளனர்.

விரைவில் மிகப் பிரமாண்டமான முறையில் இப்பாடலை வெளியிட தயாரிப்பு நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.