இயக்குநர் சசிகுமார் நடிக்கும் புதிய படம் பூஜை மற்றும் பாடல் பதிவுடன் ஆரம்பம்

0
226

இயக்குநர் சசிகுமார் நடிக்கும் புதிய படம் பூஜை மற்றும் பாடல் பதிவுடன் ஆரம்பம்

இயக்குநரும், நடிகருமான சசிகுமார், டி. இமான் இசையில், அறிமுக இயக்குநர் எம். ஹேமந்த் குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார்.

பெயரிடப்படாத இப்புதிய படத்தை கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப் படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லஷ்மன் குமார் புரொடக்சன் #5வது படைப்பாக மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இன்று பூஜையுடன் பாடல்பதிவு ஆரம்பமானது.

ஒளிப்பதிவு கணேஷ் சந்திரா
எடிட்டிங் சிவ நந்தீஸ்வரன்
கலை இயக்கம் மிலன்
சண்டைப் பயிற்சி அன்பறிவு,
நிர்வாகத் தயாரிப்பு கிருபாகரன் ராமசாமி
தயாரிப்பு மேற்பார்வை A. பால் பாண்டியன்
மக்கள் தொடர்பு A. ஜான்

கிராமப் பின்னணியில் பிரம்மாண்ட, ஆக்சன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களுடன் உருவாகும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா ஷான் நடிக்கிறார்.

கதாநாயகி உட்பட படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள், படப்பிடிப்பு போன்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

ALSO READ:

Director-actor Sasikumar’s next heroic venture begins today with auspicious pooja and song recording