ஆயுதபூஜைக்கு சிம்புவின் மாநாடு

0
151

சிம்புவின் ‘மாநாடு’ படத்தை ஆயுதபூஜைக்கு வெளியிட திட்டம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்த படத்தின் வேலைகள் 2019-ஆம் ஆண்டு தொடங்கின. இதற்கான 95 சதவீத படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக 5 நாட்கள் படப்பிடிப்பு மட்டும் நடைபெறாமல் நின்றது.

தற்போது படப்பிடிப்பு நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், முதல் மூன்று நாட்களுக்கான படப்பிடிப்பை சென்னையில் முடித்துள்ளனர். இதை அடுத்து நாளை மற்றும் நாளை மறுநாள் ஓசூரில் உள்ள சிறிய விமான தளத்தில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். அத்துடன் மாநாடு படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைகிறது. மேலும் ஆயுதபூஜை விடுமுறைக்கு படத்தை வெளியிட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திட்டமிட்டிருக்கிறார்.