ஸ்ரீ ஜெய் இயக்கத்தில் ராதிகா குமாரசாமி, ரமேஷ் அரவிந்த்தின் பைரதேவி டீசர் வெளியானது

0
134

ஸ்ரீ ஜெய் இயக்கத்தில் ராதிகா குமாரசாமி, ரமேஷ் அரவிந்த்தின் பைரதேவி டீசர் வெளியானது

பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான ராதிகா குமாரசாமி என்கிற குட்டி ராதிகா தற்போது நடித்துவரும் பைரதேவி என்கிற படத்தில் அகோரா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு டீசரை வெளியிட்டுள்ளனர்.

பைரதேவி என்கிற டைட்டில் கதாபாத்திரத்தில் ஒரு பெண் அகோராவாக நடித்துள்ள ராதிகா குமாரசாமியை இந்த டீசர் அறிமுகப்படுத்துகிறது. பல அகோராக்களுடன் சேர்ந்து ஒரு இறந்த உடலின் தலைப்பக்கம் அமர்ந்து ராதிகா குமாரசாமி தாந்த்ரீக பூஜை செய்வது போல இந்த டீசரின் வீடியோ துவங்குகிறது. அதன்பிறகு ஒரு ரவுடி கும்பலால் தாக்கப்பட்ட ஒரு பெண்ணை காப்பாற்ற முயற்சிக்கிறார். டிரைலர் நிஜமாகவே சிலிர்க்கவைக்கும் விதமாக இருப்பதுடன் ராதிகாவும் அகோரா கதாபாத்திரத்தில் வியப்பை ஏற்படுத்துகிறார். ஒரு பெண் அகோராவை பற்றிய கதையம்சத்துடன் இந்திய சினிமாவிலேயே உருவாகும் முதல் படம் இது என்பது முற்றிலும் உண்மை. சீனியர் நடிகரான ரமேஷ் அரவிந்த்தையும் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துகிறது இந்த டீசர்

இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதுடன் படத்தையும் தானே தயாரிக்கிறார் ராதிகா குமாரசாமி. இயக்குநர் ஸ்ரீ ஜெய் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இந்தப்படத்தை இயக்குகிறார்.

நிர்வாக தயாரிப்பாளர்களாக ரவிராஜ் மற்றும் யாதவ் ஆகியோர் இருக்கின்றனர். ரங்காயன ராஜூ, ரவிசங்கர் (பொம்மலி), ஸ்கந்தா அசோக், அனு முகர்ஜி, மாளவிகா அவினாஷ் மற்றும் சுசித்ரா பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

JS வாலி இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கையாள, கே.கே.செந்தில் பிரசாத் இசையமைக்கிறார். படத்தொகுப்பை C.ரவிச்சந்திரனும் சண்டைக்காட்சிகளை K.ரவிவர்மாவும் கவனிக்கின்றனர். நடனத்தை மோகனும் கலை இயக்கத்தை மோகன் B கெரேவும் கவனிக்கின்றனர். தெலுங்கு பாடல் வரிகளை ராமா ஜோகய்யா சாஸ்திரி மற்றும் ஸ்ரீ ஜெய்யும் தமிழ் பாடல் வரிகளை தாமரை மற்றும் ஸ்ரீ ஜெய் ஆகியோரும் எழுதியுள்ளனர்

வாரணாசி, காசி, ஹரித்துவார், ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பைரதேவி படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.