ஸ்டைலிஷ் நடிகராக அவதாரமெடுக்கும் ‘அசுரன்’ புகழ் நிதிஷ் வீரா
தனக்கு அளிக்கப்பட்ட கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் எதார்த்தம் மிகுந்த தனது தனித்துவமான நடிப்பால் எளிதில் பலரையும் கவர்பவர் நடிகர் நிதிஷ் வீரா.
புதுப்பேட்டை படத்தில் மணியாகவும், வெண்ணிலா கபடி குழு படத்தில் சேகராகவும் நடித்து பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டை பெற்றார்.
தற்போது S.P.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்திலும், அறம் பட இயக்குனர் கோபி நயினார் இயக்கும் கோல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும் புஷ்கர் காயத்ரி இயக்கும் வெப் சீரியஸிலும் நடிக்கின்றார். அசுரன் படத்தின் தெலுங்கு பதிப்பில் தமிழில் நடித்த அதே வேடத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சில பெயரிடப்படாத புதிய படங்களிலும் நடிக்கவுள்ளார்.
இவர் சமீபத்தில் கோட் சூட் உடையில் எடுத்த போட்டோஷூட் படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி, நிதிஷ் வீராவிற்கு ஸ்டைலிஷான நடிகராகவும் நடிக்க வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளது.