ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க, பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்?
பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கு பின்னர் இயக்குனர் பா.இரஞ்சித், நடிகர் விக்ரமுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.