வைஜெயந்தி சினிமாஸ் வழங்க ஸ்வப்னா சினிமாஸ் – துல்கர் சல்மான் இணைப்பில் உருவாகும் புதிய படம்

0
409

வைஜெயந்தி சினிமாஸ் வழங்க ஸ்வப்னா சினிமாஸ் – துல்கர் சல்மான் இணைப்பில் உருவாகும் புதிய படம்

1964-ம் ஆண்டின் ப்ரீயட் காதல் கதை: தமிழ் –  தெலுங்கு – மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது.

பெரும் வெற்றிபெற்ற நடிகையர் திலகம்/மஹாநடி படத்தின் தயாரிப்பாளர்களான வையெஜந்தி மூவீஸ் வழங்க ஸ்வப்னா சினிமாஸ், துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் தங்களுடைய புதிய படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்படத்தை ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார்.

நடிகையர் திலகம்/மஹாநடி பட தயாரிப்பாளர்களின் ஒவ்வொரு அறிவிப்பும் நாடு முழுவதும் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்திய சினிமாவில் நினைவுகூரத்தக்க 50 ஆண்டுகால பயணத்தைக் கொண்டாடும் விதமாக, வைஜெயந்தி மூவீஸ் சமீபத்தில் ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும்,  ஒரு மிகப்பெரிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டனர். இது தவிர நந்தினி ரெட்டியின் படம் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது மற்றும் ஜதி ரத்னலுவின் படமும் முடியும் தருவாயில் உள்ளது.

அவர்களின் அடுத்த படத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். “ராணுவ வீரன் ராம்- போரூற்றி எழுதிய காதல் கதை” என்ற வரிகளுடன் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.  இந்த படம் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும் என்ற நேர்மறை அதிர்வுகளை உருவாக்குகிறது.

நடிகையர் திலகம்/மஹாநடி படத்தில் அற்புதமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த துல்கர் சல்மான் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதே தயாரிப்பாளர்களோட இன்னொரு படத்திலும் இணைகிறார். அவரது சமீபத்திய திரைப்படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி பெற்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகள் தயாராகும் இந்த புதிய படத்தை ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார். 1964-ம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு ப்ரீயட் காதல் கதையாக இப்படம் உருவாகவுள்ளது.

துல்கர் சல்மானின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் கான்செப்ட் போஸ்டர் ஒரு அழகான டெலிகிராமை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள நிழற்படத்தில் துல்கர் ஒரு ராணுவ வீரனாக தோன்றுகிறார், அதில் இரண்டு கைகளும் ஒன்றாக இணைவது ஒரு காதல் பக்கத்தைக் குறிக்கிறது. போர்ப் பின்னணியில் ஒரு காதல் என்பதே படத்தின் மிகவும் ஈர்க்கத்தக்க அம்சமாக உள்ளது. இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார்.

வைஜெயந்தி மூவீஸ் வழங்கும் இப்படத்தை ஸ்வப்னா சினிமாஸ் சார்பாக பிரியங்கா தத், ஸ்வப்னா தயாரிக்கிறார்கள்.

ALSO READ:

Dulquer Salmaan to play Lieutenant Ram in Swapna Cinema’s Untitled 1964 Period Love Story During War